உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 18. 49

மிகுந்த சந்தோசம் உண்டாகட்டும்! சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். லூக்கா 2:10. கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக முழுஉலகம் தயாராகிக் கொண்டுவருகிறது. ஆனால் தயாராகிக் கொண்டுவரும் உலகத்தால் உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டாட முடியதாவாறு பல துன்பங்கள் அழிவுகள் வந்ததையும், வருவதையும் வரவிருப்பதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. அண்மைக்காலமாக அரபுதேசங்களிலும், இந்தியாவிலும் ஆபிரிக்காவிலும் மதக்கலவரங்களினாலும், பயங்கர வாதிகளின் நடபடிக்கையினாலும் அழிவு ஏற்பட்டு வருகிறது. இன்னும் பலநாடுகளில் உள்நாட்டுக் கலவரங்கள் உலகத்தை உலுக்கிய வண்ணமாவுள்ளது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு மாவீரர் தினமும் அதனை ஒட்டிய தடைகளும் துன்பங்களும் மிகவேதனை நிறைந்தவாழ்வை நாளாந்தம் ஞாபகப் படுத்திக்கொண்டு வருகிறது. உற்றாரை இழந்து செய்வது அறியாது கலங்கி நிற்கும் மக்கள் ஒருபக்கம், மரணம் வந்து எம்மை…

பிரமிட்டின் உச்சியில் நிர்வாண செக்ஸ் டேனிஸ்காரரின் புகைப்படம்

பிரமிட்டின் உச்சியிலிருந்து நிர்வாணப் புகைப்படம் டென்மார்க்கின் இளம் ஜோடி ஒன்று எகிப்தில் உள்ள பிரமிட் ஒன்றின் மேல் ஏறி நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததும், பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற காணொளியை வெளியிட்டதும் எகிப்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. புகைப்படக்காரரான டேனிஸ் பிரஜையான அண்ட்றியாஸ் இது மகிழ்ச்சி தரும் செயல் என்று தான் நினைத்ததாக தெரிவிக்கிறார். ஆனால் எகிப்திய அரசோ தமது கலாச்சரத்திற்கும், பிரமிட்டுகளின் பெருமைக்கும் இவர்கள் களங்கம் கற்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகிறதென்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். காரணம் பொது இடத்தில் நிர்வாணமாக நிற்பது எகிப்திய சட்டங்களின் படி குற்றச் செயலாகும். ஆனால் டேனிஸ்காரர் இப்போது எகிப்தைவிட்டு வந்துவிட்டதால் தப்பிப் பிழைத்திருக்கிறார். ஆனால் இவர் எகிப்து செல்ல முடியாது. உலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வுகளின் குறுஞ்செய்திகள் ------------------------------------------------------------ சந்தேக நபர்களை ஒப்படைக்க சவுதி மறுப்பு..!…

பிரான்ஸ் ஆர்பாட்டங்கள் 1700 பேர் கைது 135 பேர் படுகாயம்

பிரான்சில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டங்களில் சுமார் 125.000 பேர்வரை பங்கேற்றுள்ளதாக போலீஸ் தெரிவிக்கிறது. ஒளியை திருப்பி அடிக்கும் தன்மை கொண்ட மஞ்சள் அங்கி அணிந்தோர் போராட்டமானது வழமை போலவே இரத்தம் சிந்திய போராட்டமாகவே அமைந்தது. ஆர்பாட்டங்கள் நடைபெற்ற மாலை கருத்துரைத்த பிரான்சிய உள்துறை அமைச்சர் சுமார் 19.30 மணியளவில் நிலமை கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், ஆனால் நடந்த அனர்த்தங்கள் எதையுமே தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார். சுமார் 1700 பேர்வரை கைதாகியிருக்கிறார்கள், 17 போலீசார் காயமடைந்துள்ளனர். 125.000 பேர் நாடு முழுவதிற்குமான ஆர்பாட்டக்காரர் தொகையாகும், தலைநகர் பாரீசில் பங்கேற்றவர் தொகை 10.000 ஆகும். 135 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆர்பாட்டக்காரர் கடைகளின் சன்னல்களை உடைத்துதள்ளினார்கள், பல இடங்களில் தீ மூட்டினார்கள். போலீசாருக்கும் ஆர்பாட்டக்காரருக்குமிடையே பல இடங்களில் மோதல் வெடித்தது. கண்ணீர்புகை அடித்து நிலமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.…

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தோல்வியின் விளிம்பில்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான யோசனைகள் வாக்கெடுப்பிற்கு வரவேண்டியது அவசியம் என்பது இதுவரை நாம் அறிந்த செய்தியாகும். இதற்கான வாக்கெடுப்பு பிரிட்டன் பாராளுமன்றுக்கு வரும் செவ்வாய் வருகிறது. இப்போதைய தகவல்களின்படி வாக்கெடுப்பு நடந்தால் தெரேசா மே தோல்வியடையக்கூடிய தடயங்கள் தென்படுவதாகவும், இதனால் வாக்கெடுப்பை ஒத்திவைக்க யோசிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கருத்தை தற்போது பிறிக்ஸ்ற் வெளியேற்றத்திற்கு பொறுப்பாக இருக்கும் மந்திரியான ஸ்ரெபன் பாக்ளே பீ.பீ.சிக்கு தெரிவித்துள்ளார். ஆனால் இவருடைய உதவி மந்திரியோ கவலையே வேண்டாம் வாக்களிப்பில் வெற்றி பெறுவோம் என்கிறார். இந்த இக்கட்டான நிலையில் ஐரோப்பிய ஒன்றிய வெளியேற்றத்தைவிட, தனது பதவியைக் காப்பாற்றுவதே தெரேசா மேக்கு பெரும் போராட்டமாக இருக்கிறது என்பதே யதார்த்தமாகும். வாக்களிப்பு நடைபெற்றால் எதிர்க்கட்சியான லேபர், மற்றும் வட அயர்லாந்து ஆதரவு கட்சியான டி.யூ.பி என்பன எதிர்த்து வாக்களிக்க தயாராக இருப்பதாக தெரிகிறது. பிரிட்டனை…

வரும் ஏப்பரலில் இருந்து விவாகரத்து செய்வோருக்கு விசேட டிஜிற்றல் பயிற்சி

கணவனுக்கும் மனவிக்குமிடையே மனமுறிவா அது வளர்ந்து மணமுறிவில் போவது உலக அரங்கில் சர்வசாதாரணமான விடயமாகும். டென்மார்க்கில் இப்போது விவாகரத்து வீதம் 47 ஆக இருக்கிறது. கடந்த 30 ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்டால் 41 முதல் 54 வீதம் வரை கூடிக்குறைந்து வருகிறது. விவாகரத்து என்பது வலி மிக்க ஒரு செயல், இதனால் பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பெற்றோரும் டிப்பிரசன், எதிர்காலப் பயம், ஸ்ரெஸ் போன்ற நோய்களாலும் சிலர் உளவியல் சிக்கல்களாலும் பாதிக்கப்பட விவகாரத்து தூண்டுகோலாக அமைகிறது. இந்த சிக்கல்களை தீர்க்க டேனிஸ் அரசு தன்னாலான முயற்சிகளை அவ்வப்போது எடுத்தும் வருகிறது. இந்த வழியில் ஓரம்சமாக விவாகரத்து தம்பதியர் பிள்ளைகளுக்காக இணையவழியான ஒரு புதிய நிகழ்ச்சித்திட்டத்தில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு கூறுகிறது. அவ்வாறு பங்கேற்காவிட்டால் உளவியல் நிபுணரை சந்திக்க நேரி;டும் என்கிறது.…

ஞாயிறு தோறும் கூகுள் எழுத்து பயிற்சி எடுக்கிறேன் !

நல்ல புத்தகங்களை நான் வாசிக்க வாசிக்க கூகுள் எழுதும் ! இதோ வாசிக்க ஆரம்பிக்கிறேன் ! புத்தகம் : பிரமாண்டமான சிந்தனைகள் ! பக்கம் ; 150, 151 ஒரு காரியத்தை x எனப்படும் ஒருவர் சொன்னால் மக்கள் விரைவாக செய்கிறார்கள் ! அதையே y எனப்படும் இன்னொருவர் சொன்னால் செய்ய மறுக்கிறார்கள் ! இருவரும் ஒரே பதவியில் தான் இருக்கிறார்கள் ஏன் இந்த வேறுபாடு என்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள் ? நீங்கள் இதை உன்னிப்பாக கவனித்தால் ... ஓர் இரகசியம் தெரியும் ! மிக மரியாதையோடு நடத்தப்படுகின்ற மனிதர் தான் மிகப் பெரிய வெற்றியாளராக இருப்பதை காண்பீர்கள்! இதற்கான அடிப்படை காரணம் என்ன ? நமக்குள் இரகசியமாக உருவாகும் சிந்தனைதான் காரணம் ! அதுதான் மேற் கூறப்பட்ட வேறுபாடுகளை நிகழ்த்துகிறது ! நம்மில் நாம்…