நிலவில் உருளைக்கிழங்கு நிலா தரையில் இறங்கியது சீன விண்கலம்

சீனாவின் விண்கலம் சந்திரமண்டலத்தின் இருளான பக்கத்தில் வெற்றிகரமாக இறங்கியது புதிய செய்தியாகும். காலை செய்திகளின்படி..: நிலவில் ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலான தனது முதல் திட்டத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு மூலையாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங்'இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ நிலவை நோக்கி செலுத்தப்பட்டது. இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டுவந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவுசெய்யப்பட்ட பிறகு செயற்கைகோள் நிலவின்…

பவர் ஸ்டாரை காணவில்லை என்று மனைவி புகார் ஒண்டிப்புலி ஊட்டியில் இருந்தது

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மாயமானதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகார் தெரிவித்த சில மணி நேரத்தில் அவர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புகார் திரும்ப பெறப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சீனிவாசன் என்ற ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். இவர் அதற்கு முன்பு லத்திகா என்னும் திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார். ‘கோலி சோடா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மற்றும் டெல்லி போலீஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் சில பண மோசடி வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரைக் காணவில்லை என மனைவி ஜுலி…

அதிகாரத்தை தக்கவைக்க மைத்திரி – மஹிந்த சூழ்ச்சி

சட்ட விரோதமாக இடம்பெற்ற பிரதமர் நியமனத்தினைத் தக்கவைப்பதற்கான மைத்திரி – மஹிந்த தரப்பினரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளமையினால், முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவுள்ள 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் குறைகூற ஆரம்பித்துள்ளனர்" என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு 19ஆம் அரசியலமைப்புத் திருத்தமே காரணம் எனவும், அதன் உள்ளடக்கங்கள் தெளிவானதாக அமையவில்லை எனவும், எனவே 19ஆவது அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மைத்திரி – மஹிந்த தரப்பினர் பரவலாகக் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் வினவிய போதே அகில விராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அகில, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் 2015ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் அதுவரை காலமும் நாட்டின்…

நீதிக்கான போராட்டத்துக்கு வியூகம் அமைக்கிறது ஐ.தே.க.

எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை ஒன்றிணைக்கும் வகையில் 'நீதிக்கான போராட்டம்' எனும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு விரோதமானது எனவும், ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடு எனவும் கூறி நாடளாவிய ரீதியில் பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் என்பவற்றால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கொழும்பு காலிமுகத்திடலில் பாரியதொரு மக்கள் ஆர்ப்பாட்டத்தினை நீதிக்கான போராட்டம் எனும் பெயரில் ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவுள்ளது.

சாமிநாதய்யரின் உழைப்புக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல ஜெயராமனின் உழைப்பு

நெல் என்பது தென்கிழக்காசிய‌ பாரம்பரிய உணவு, தென்னிந்தியாவிலும் அதுவே பிரதானம் உலகின் அடிப்படை உணவுகள் நெல் , கோதுமை என்ற இரண்டை தவிர வேறில்லை. தமிழரின் பிரதான உணவான நெல்லில் ஏராளமான வகைகள் உண்டு அன்னமழகி , அறுபதாங்குறுவை பூங்கார், கேரளசுந்தரி, குழியடிச்சான் (குழி வெடிச்சான் குள்ளங்கார், மைசூர்மல்லி, குடவாழை.. என தொடங்கி களர்பாலை ஓட்டடையான் என கிட்டதட்ட 200 நெல்கள் இதுவரை வகைபடுத்தபட்டுள்ளன இன்னும் ஏராளம் உண்டு எப்பொழுது பாரம்பரித்தை தொலைத்தோம் என்றால் முதல் சிக்கல் வெள்ளையன் காலத்து செயற்கை பஞ்சங்களில் வந்தன, எங்கிருந்தோ பர்மா அரிசி வெளிநாட்டு அரிசி என கொட்டினான் இரண்டாம் சிக்கல் சுதந்திரதிற்கு பின்னரான பஞ்ச காலங்களில் வந்தது, விளைச்சல் அதிகமிக்க ஒட்டுரக அரிசிகள் மேல் அரசுக்கு ஆர்வம் வந்தது. ஆம் பாரம்பரிய அரிசிகள் நாட்டுகோழி போன்றவை குறைவாகத்தான் விளையும் ஆனால்…

அகில இலங்கை உதைபந்தாட்ட அணியில் இடம் பெறவுள்ள தமிழ் வீரர்கள் யார்..?

அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப செயலாளர் திரு. அருளானந்தசோதி உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூலை தாயகத்தின் உதைபந்தாட்ட வீரர்களுக்கும் மத்தியஸ்தர்களுக்கும் வழங்கி ஆட்டங்களை ஆரம்பித்து வைத்தார். வல்வை எப்.சி. இணைப்பாளரும், விளையாட்டுத்துறை அதிகாரியுமான ஜிவிந்தன் நூல் வழங்கும் ஏற்பாடுகளை ரியூப் தமிழுடன் இணைந்து மேற்கொள்ள களை கட்டியிருக்கிறது வடக்கின் உதைபந்தாட்டம். இனி விபரமாக… அகில இலங்கை உதைபந்தாட்ட அணியில் இடம் பெறப்போகும் தமிழ் வீரர்கள் யார்.. எத்தனை பேருக்கு வாய்ப்புக்கள் உள்ளன..? இன்று வடக்கே ஒளிரும் பரபரப்பான கேள்வி இதுதான். பலர் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக தெரிகின்றன என்கிறார்கள் பயிற்சியாளர்கள். இலங்கை அணிக்கு பருத்தித்துறை லீக்கில் இருந்து வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகள் இன்றிலிருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டிகள் இன்று காலை…