நாட்டில் இன்று அரசாங்கமோ, அமைச்சரவையோ கிடையாது

நாட்டில் இன்று அரசாங்கமோ, அமைச்சரவையோ கிடையாது. தற்போது நாடு எவ்வகையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது என்பதை ஜனாதிபதி ஒருபோதும் அறியமாட்டார். எனவே மக்களானையினை மதிப்பவராயின் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை இவர் ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

மேலும் பாசிசம் மற்றும் நாசிய கொள்கையினை கொண்ட ஹிட்லர், முசோலினி ஆகியோர் ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியாகவே தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

பின்னர் அதிகார பேராசையில் பாராளுமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் எதிராக செயற்பட்டு உலக மகா யுத்தத்தினை தோற்றுவித்தனர். இந்த சூழ்நிலைகளையே தற்போது மைத்திரி- மஹிந்த கூட்டணி பின்பற்றி வருகின்றது எனவும் இதன்போது தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

————–

பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் மீதான தடையை உச்சநீதிமன்றம் மேலும் ஒரு நாள் நீடித்துள்ளது.

இன்று இடம்பெற்ற விசாரணையின் பின்னர் 8ம் திகதிவரை இடைக்கால தடையை நீடிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது

இதேவேளை வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிரான மனுக்கள்

மீதான விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில் நாளையும் தொடர்ந்து இடம்பெறும்.

———————

நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலான நிலைமை, ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு தீர்வுகண்டு நாட்டில் ஜனநாயகத்தையும், அமைதியையும் நிலைநாட்டும் நோக்கில் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இணைந்து சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியது.

மேற்படி சிறப்புப் பூஜை நிகழ்வானது விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள விகாரையில் ஆரம்பமாகியதுடன் தேரர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து மகாசங்க தேரர்களின் பங்குபற்றுதலுடன் விசேட பூஜை ஆரம்பமாகியது.

——————

முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாக வே பார்க்கின்றேன்.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன். இதைத்தான் நான் கூறியிருக்கின்றேன் சர்வதேசத்திலிருந்து எங்களது போராட்ட தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்காக சிலர் செயல்படுகிறார்களோ என்று என்னுடைய அச்சத்தை தெரிவித்திருந்தேன். பலர் பணத்தை வெளியிலே இருந்து கொடுத்து அவரவர் இடத்தில் சில நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.

இவை அனைத்தும் அலசி ஆராயப்பட வேண்டியவை. தங்களிடையே ஒரு சுமுகமான நிலையில் வாழும் ஒரு போராளிகளை இன்று ஒரு அச்ச நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது வெளிப்படையான உண்மை. அந்த விடயத்தை முன்னெடுப்பவர்கள் உடனடியாக நடவடிக்கைகளை கைவிட வேண்டும். என்பதையே நான் கூறிக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

——————

Related posts