ஜெயலலிதா மேக்அப்பில் நித்யா மேனன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை சரித்திர படம் தமிழில் உருவாகிறது. இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை உருவாக்கவிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்துக்கான பணிகளை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே பிரியதர்ஷினி அறிவித்திருக்கிறார். இப்படத்துக்கு தி ஐயர்ன் லேடி என பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இதுபற்றி நித்யா மேனன் கூறும்போது,’சாதனை பெண்மணியான ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. அவரது கதாபாத்திரத்தை செய்வது எளிதான காரியம் அல்ல. எனவே, அதற்காக பல்வேறு கடினமான முயற்சிகளை நான் மேற்கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு நாளான நேற்று ஜெயலலிதா போல் நித்யாமேனன் மேக் அப் அணிந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரியதர்ஷினி வெளியிட்டார். இதுபற்றி அவர் டுவிட்டரில்,’கருணை கொண்ட மனிதரெல்லாம் கடவுள் வடிவம் ஆகும்’ என குறிப்பிட்டிருக்கிறார். இப்படத்தின்…

2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட விஜய்

2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பெற்று உள்ளார். இந்த ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலை டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் டுவிட்டர் தவிர்க்க முடியாத தளமாகி விட்டது. அந்த வகையில் 2018-ம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலை டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் நடிகர்களில் இந்திய அளவில் நடிகர் விஜய் இடம் பெற்றுள்ளார். 10 பேர் கொண்ட பட்டியலில் விஜய்க்கு 8-ம் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து இரண்டாம் இடம் ராகுல் காந்திக்கு கிடைத்துள்ளது. பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 பிரபலங்கள்:- 1. மோடி 2. ராகுல் காந்தி 3. அமித் ஷா 2.…

2.0 இதுவரை 500 கோடி வசூல் லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்தின் 2.0 கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். ரூ.600 கோடி செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எந்த படமும் இவ்வளவு அதிக செலவில் தயாரானது இல்லை. உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட்டனர். பாகுபலி, சர்க்கார் போன்ற முந்தைய படங்களின் சாதனையை முதல் வாரத்திலேயே ரஜினியின் படம் முறியடித்து விட்டது. படம் வெளியான 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்ததாக பட நிறுவனமான லைகா அறிவித்தது. தற்போது வசூல் ரூ.500 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்து இருந்ததால் இந்தியிலும் 2.0 வெளியாகி வட மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. சீனாவிலும் 2.0 படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர். இதற்காக அங்குள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனமான எச்.ஒய். மீடியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.…

சாவித்திரி பிறந்தநாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் கடிதம்

சாவித்திரி பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சியுடன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகை, இயக்குநர், தயாரிப்பாளரான சாவித்திரி பிறந்த தினம் இன்று (டிசம்பர் 6). ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் ‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்பட்டார். இவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவான படம் 'மஹாநடி'. இதில் சாவித்திரியாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் அள்ளினார் கீர்த்தி சுரேஷ். இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, அங்கும் வரவேற்பைப் பெற்றது.நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியிருந்தார். இன்று (டிசம்பர் 6) சாவித்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதில் அவர்…

ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் புதிய ஒப்பந்தம்

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றபோதிலும், அதனை இந்தியா புறக்கணித்துள்ளது. இந்திய ரூபாயை செலுத்தி கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். அதன் பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்…

நாட்டில் இன்று அரசாங்கமோ, அமைச்சரவையோ கிடையாது

நாட்டில் இன்று அரசாங்கமோ, அமைச்சரவையோ கிடையாது. தற்போது நாடு எவ்வகையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது என்பதை ஜனாதிபதி ஒருபோதும் அறியமாட்டார். எனவே மக்களானையினை மதிப்பவராயின் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை இவர் ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். மேலும் பாசிசம் மற்றும் நாசிய கொள்கையினை கொண்ட ஹிட்லர், முசோலினி ஆகியோர் ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியாகவே தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள். பின்னர் அதிகார பேராசையில் பாராளுமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் எதிராக செயற்பட்டு உலக மகா யுத்தத்தினை தோற்றுவித்தனர். இந்த சூழ்நிலைகளையே தற்போது மைத்திரி- மஹிந்த கூட்டணி பின்பற்றி வருகின்றது எனவும் இதன்போது தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். -------------- பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் மீதான தடையை உச்சநீதிமன்றம் மேலும் ஒரு…

உயிருக்கு ஆபத்து வந்த பின் ஜனாதிபதி பொறுப்பெடுத்து என்ன பயன்..?

வன்னியில் கொல்லப்பட்ட மக்களுக்கு வந்த உயிராபத்தை இதுவரை பொறுப்பெடுத்த ஜனாதிபதி யார்..? உயிருக்கு ஆபத்து வந்தால் ஓர் அரசியல்வாதி பொறுப்பென்று கூறுவதைவிட அதை உடனடியாக தடுப்பதே சரியான வழியாகும். ஏனென்றால் உயிர் போனால் மற்றவர்கள் அதை ஒரு பரபரப்பு செய்தியாக்குவதைத் தவிர இலங்கையில் வேறெதும் நடந்ததா என்பது ஒரு கேள்வி. உண்மையின் நிதர்சனம் இப்படியிருக்க சிறீலங்கா அரசியல்வாதி ஒருவர் கூறியிருக்கும் கருத்து இப்படியுள்ளது. தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். ரிஷாத் பதியூதினை கொலை செய்யும் திட்டம் குறித்து நாமல் குமார வௌியிட்ட குரல் பதிவு அதுதொடர்பில் அண்மையில் அகில இலங்கை மக்கள் சார்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ரிஷாத் பதியுதீன் இன்று…

பிள்ளைகளுக்கு உபகதை சொல்ல புதுவழி கண்ட குடும்பத்தலைவர்

டென்மார்க்கில் உள்ள கிறீன்ஸ்ரெட் நகரில் வாழும் டக்ளஸ்; ஒரு திரைப்பட இயக்குநர், நடிகர், கலைஞர் என்று பன்முக தோற்றம் கொண்டவர். உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூலைப்பற்றி தனது முகநூலில் அவர் எழுதிய பதிவு ஒவ்வொரு பெற்றோரையும் ஊன்றி சிந்திக்க வைக்கிறது. ஒரு பொறுப்புள்ள தந்தையாக வாழ்க்கையை நகர்த்தும் போது, பிள்ளைகளுக்கு உப கதைகளை சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அவர்களுடைய கற்பனை வளம் பெருகும். ஆனால் அன்றாடம் பாட்டி வடை சுட்ட கதையையும், முயலும் ஆமையும் ஓடிய கதையையும் சொல்லும்போது ஒரு கட்டத்தில் பிள்ளைகள் சலிப்படைந்துவிடுகின்றன. ஆனால் டென்மார்க் போன்ற மேலை நாடுகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு உபகதைகளை சொல்லும்போது அவர்கள் வாழும் கள நிலவரங்களை புரிந்து, டேனிஸ் பாடசாலைகளில் பேசப்படும் விடயங்களை தழுவி உப கதைகளை சொன்னால் அது பிள்ளைகளின் உள்ளத்தைத் தொடுமல்வா..?…