‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி தோற்றம் வெளியானது

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து அவர் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் மீது ரசிகர்கள் பார்வை திரும்பி உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்துள்ளார். ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, சசிகுமார், பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ‘பார்க்கத்தான் போற இந்த காளியோட ஆட்டத்தை, எவண்டா கீழ எவண்டா மேல எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. அதிக எண்ணிக்கையில் கேட்டு உள்ளனர். விஜய் சேதுபதி தோற்றம் : இதற்கிடையில், இந்த பாடலை படநிறுவனம் வெளியிடும் முன்பே…

ராதாரவி புலம் பெயர் தமிழர் புகழ் பாடியது ஏன்..

ராதாரவி புலம் பெயர் தமிழர் புகழ் பாடியது ஏன்.. தமிழக நடிகர்களும், அரசியல் தலைவர்களும் புலம் பெயர் தமிழர்கள், புலிகள் பற்றி சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் புகழ்ந்து பேசினால் புலம் பெயர் தமிழர் அவதானமாக இருக்க வேண்டும். சமீபத்தில் ராதாரவி புலம் பெயர் தமிழர்களை தாறுமாறாக புகழ்ந்து பேசியிருந்தார். அவருக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுவிட்டதாலேயே இந்த புலம்பல்களை செய்கிறார் என்று மட்டும் புரிய முடிந்தது. ஆனால் இப்போது வெளியான தகவல் அவர் பெயருக்கு முன்னால் டத்தோ என்று போடும் பட்டமே பொய்யானது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. எனவேதான் இப்படியொரு புலம் பெயர் புகழ் மாலை பாடினாரா என்பது கேள்வி. இதுபோல நடிகரான தனது மகன் ஏதாவது செய்தால் தந்தை நடிகர் புலிகள் புராணத்தை இழுப்பதும் தமிழகத்தில் நடந்துள்ளது. இப்படி பிழைப்பிற்காகவும், பெரும் குற்றச் செயல்களில் இருந்து தப்பிக்கவும்…

சீனாவில் சுமார் 47,000 திரைகளில் வெளியாகிறது ‘2.0’

2019-ம் ஆண்டு மே மாதம் சீனாவில் சுமார் 47,000 3டி திரைகளில் வெளியாகிறது '2.0' லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தமிழை விட தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நல்ல வசூல் செய்து வருவதால் படக்குழுவினர் சந்தோஷமடைந்துள்ளனர். மேலும் 3டி தொழில்நுட்பம், 4டி ஒலி நுட்பம் என உலக அளவில் சினிமா தொழில்நுட்பத்துக்கு சவால்விடும் வகையில் இப்படம் இருப்பதாக இந்தி திரையுலக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் சீனாவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது லைகா நிறுவனம். இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோனி, வார்னர் பிரதர்ஸ், யூனிவர்சல், டிஸ்னி உள்ளிட்ட…

2018 இந்திய பிரபலங்கள் பட்டியல்: ரஜினி, விஜய்

ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரபலங்கள் பட்டியலில் தமிழ் நடிகர்களான ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலை, ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் பிரபலங்கள் பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 11-வது இடத்திலும், (வருமானம் ரூ.66 கோடி) தமிழ் நடிகர்களான ரஜினி 14 ஆம் இடத்திலும் (வருமானம் ரூ.50 கோடி) , விஜய் 26 ஆம் இடத்திலும் ( வருமானம் ரூ.30 கோடி) , விக்ரம் 29 ஆம் இடத்தில் (வருமானம் ரூ.26 கோடி) உள்ளனர். சூர்யாவும், விஜய் சேதுபதியும் 34-வது இடத்தில் உள்ளனர். இவர்கள் வருமானம் ரூ.23 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சல்மான் கான்,…

பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைத்த உரிமையாளர்

சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமராக்களை மறைத்துவைத்த விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. "சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மகளிர் விடுதி நடத்துபவர் சம்பத்குமார் என்ற சஞ்சய் (45). மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவோர், பல் மருத்துவர் உட்பட 7 பெண்கள் மாத வாடகை அடிப்படையில், அந்த விடுதியில் தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் காலையில் ஒரு பெண் தனது கூந்தலை உலர வைப்பதற்கான கருவியை மின்சார பிளக்கில் சொருக முயன்றுள்ளார். எதிர் பாராமல் பிளக் உடைந்து விடவே, சுவருக்குள் பேட்டரியுடன் ஏதோ ஒரு கருவி இணைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அது ரகசிய வீடியோ கேமரா என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே…

அந்தமான் பழங்குடியால் கொல்லப்பட்ட அமெரிக்கர்

அந்தமான் பழங்குடியால் அம்பெய்திக் கொல்லப்பட்ட அமெரிக்கர் திட்டமிட்ட சாகசப் பயணத்தையே மேற்கொண்டார் என்று தேசிய பழங்குடியின ஆணையத்தின் தலைவர் நந்த் குமார் சாய் தெரிவித்துள்ளார். அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 35 மைல் தொலைவில் இருப்பதுதான் நார்த் சென்டினல் தீவு. இந்தத் தீவைச் சுற்றி 5 நாட்டிகல் மைல்வரை மனிதர்கள் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தீவில் உள்ள பூர்வீகக் குடிகளான சென்டினல் பழங்குடி மக்கள் வேற்று மனிதர்களை விரும்பவதில்லை என்பதாலும், அவ்வாறு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாலும் இங்கு செல்வது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவு பாதுகாப்புச் சட்டம் 1956-ன்கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். தடையை மீறிச் செல்வோருக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகளை மீறி கடந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (…

ஊர்சுற்றி இளைஞனின் கபடநாடகக் காதல்

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவரை தனது கபட நாடகத்தினால் மயக்கி காதலிக்கச் செய்து பிறகு அவரை உணர்வுபூர்வமாக மிரட்டி மிரட்டி நகைகள், பணம் என்று பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பிலிப் என்ற அந்த ஊர்சுற்றி இளைஞரின் வயது 18. இவர் பள்ளியில் படிக்கும் போதே வழிதவறிய ஒரு மாணவர், சக மாணவர்களுடன் தகராறு, கைகலப்பு என்று இருந்து வந்தவர் ஒரு முறை மோதல் காரணமாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறுவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் விடுதலையாகி வெளியே வந்த பிலிப் திருந்தி வாழாமல் மீண்டும் நண்பர்களுடன் உல்லாசமாக ஊர்சுற்றி வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அப்போதுதான் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவியைப் பின் தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து, ஆசை வார்த்தை…

ரணில் பிரதமராவதற்கு பெரும்பான்மை ஆதரவு உண்டு

ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராவதற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேணை ஒன்றை சஜித் பிரேமதாஸ முன்மொழியவுள்ளார். குறித்த நம்பிக்கை பிரேணையை எதிர் வரும் 12ஆம் திகதி சபையில் சஜித் பிரேமதாஸ சமர்ப்பிக்கவுள்ளார். குறித்த நம்பிக்கை பிரேணை எதிர் வரும் தினங்களில் பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -------------- தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு, ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தின் உதவியைப் பெறச் சென்றாலும், நாட்டில் மக்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கே உள்ளது என கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நீதிமன்றத்தின் தீர்ப்பு தற்காலிக தடையே தவிர, அமைச்சரவை அமைச்சர்களையோ பிரதமரையோ நீக்கும் செயலல்ல. அமைச்சுக்களின் அதிகாரிகள் குறிப்பிட்ட அமைச்சுக்களின் நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொண்டு வருகின்றனர். இப்…

அரசியலமைப்பிற்கு அமைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்

நாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், சட்ட ரீதியான அரசாங்கத்தை உருவாக்கிப் பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் நேற்று (04) அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். நாட்டில் இன்று சட்ட ரீதியான அரசாங்கமொன்றை அமைக்கவேண்டியதே முதலில் செய்ய வேண்டிய பணியாகும். அதன் பின்னர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்வாங்கி, தேர்தலொன்றை நடத்துவதற்கான யோசனையொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே அரசியலமைப்பின் நடைமுறையாகும். உரிய காலத்துக்கு முன்பதாக தேர்தலை நடத்துவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, 2019இல் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியும் கோரியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.…

சகல பிரச்சினைக்கும் ஒரு வாரத்தில் தீர்வு

தமிழ் மக்களுக்குத் தீர்வினைப் பெற்றுக்ெகாடுப்பதாக வாக்குறுதியளித்து அவர்களை ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பதின்மூன்றாவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களையும் பறித்துக்ெகாண்டதாகவும் தெரிவித்தார். நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலைக்கு ஒரு வாரத்தில் தீர்வைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (04) தெரிவித்தார்.நாட்டின் அனைத்து நெருக்கடிகளுக்குமான தீர்வு ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதே என்றும் அந்தத் தீர்மானம் நேற்றும் இன்றும் நாளையும் பொருந்தும் என்றும் தெரிவித்தார். நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எதிர்காலச் சந்ததிக்காகவும் அதனைத் தாம் மேற்கொள்வதாகத் தெரிவித்த அவர், நாட்டைப் பாதுகாப்பதற்கு சகல கட்சிகள், தரப்புகளையும் சமாதானக் கரம் நீட்டி அழைப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்குத் தாம் காரணம் அல்லவென்றும் ரணில் விக்கிரமசிங்கவே முழுக்காரணம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நெருக்கடியைத் தோற்றுவித்தவரும் ரணில் விக்கிரமசிங்க என்றும் ஜனாதிபதி கூறினார்.…