பேட்ட ரஜினியின் புதிய புகைப்படம் வெளியானது.

பேட்ட படத்தில் இளமை தோற்றம் கொண்ட ரஜினியின் புதிய புகைப்படம் வெளியானது.

ரஜினிகாந்தின் 2.0 திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்து பேட்ட மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருகின்றனர். அஜித்குமாரின் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வருவதால் இரண்டுக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. பேட்ட படத்தில் ரஜினி ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.

சசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, நவாஜுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ் என்று நிறைய நட்சத்திரங்கள் உள்ளனர். இதன் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், ஆக்ரா மற்றும் சென்னையில் நடந்தது. இந்த படத்தில் ரஜினி விடுதி வார்டனாக நடிப்பதாக தகவல்.

ஏற்கனவே பேட்ட ரஜினியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் ரஜினி இளமையாகவும், ஸ்டைலாகவும் இருந்ததாக ரசிகர்கள் மகிழ்ந்தனர். இந்த படத்தின் ஒரு பாடலை இன்றும், இன்னொரு பாடலை வருகிற 7-ந் தேதியும் வெளியிடுகிறார்கள். பாடல்கள் வெளியீட்டு விழா வருகிற 9-ந் தேதி நடக்கிறது.

இப்போது ரஜினிகாந்தின் இளமையான இன்னொரு புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதில் ரஜினி மேலும் இளமையாக இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

Related posts