இது தான் என் கடைசி படம் : நடிப்புக்கு முழுக்கும் போடும் கமல்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 2வது வாரத்தில் தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இதற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்பாகத்தில் வெளிநாடு செல்வதுபோல் அமைக்கப்பட்ட கமலின் இந்தியன் தாத்தா வேடம் தற்போது இந்தியா திரும்பி வருவதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. கமல் மறுபடியும் இந்தியன் தாத்தா கெட்டப் அணிந்து நடிக்கிறார்.

இதற்காக ஹாலிவுட்டிலிருந்து ஸ்பெஷல் மேக்அப் மேன்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கமலுக்கு அவர்கள் ஸ்பெஷல் மேக்அப் அணிவித்தனர்.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் தான், தனது கடைசி திரைப்படம் என்று சமீபத்தில் கேரள விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல்ஹாசன், இந்தியன் 2 தான், தான் நடிக்கும் கடைசி திரைப்படம்.

நடிப்பதை கைவிட்டாலும், தனது தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து தரமான படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும், பல சமூக நல பணிகளையும் மேற்கொள்ளும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts