தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது

தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிரதமரை நியமிப்பது உட்பட்ட தெற்கின் அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் தீர்வுகாண வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வவுனியா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் மற்றும் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ---------------- விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தி போராடிய தமிழீழத்தை இன்று சுமந்திரன் ஒப்பந்தத்தில் பெற முயற்சிக்கின்றார். ஐக்கிய…

இதுவரை உலகம் அறியாத அதிர்வலை பூமிக்கு அடியில் இருந்து

நில நடுக்கம், எரிமலை வெடிப்பு, பாறைத் தகடுகளின் மோதல்கள், முறிவுகள் ஏற்பட்டால் பூமிக்குள் இருந்து அதிர்வலைகள் கிளம்புவதுண்டு. அத்தகைய அதிர்வலைகள் எதிலுமே பொருந்தாத உலகம் இதுவரை அறிந்திராத புதுவகை அதிர்வலை ஒன்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடலடியில் இருந்து கிளம்பியிருக்கிறது. நிலத்தடி அதிர்வலைகளை பதிவு செய்யும் சீசமோகிறாபர் என்ற கணிப்பு கருவிகள் இவை மிகவும் தாழ்ந்த அதிர்வலைகள் என்பதையே காட்டுகின்றன. உலகம் அறியாத புதுமையாக இருப்பதால் இந்த அதிர்வலைகளை விஞ்ஞானிகள் ஆச்சரியத்துடன் நோக்கியுள்ளனர். கடந்த 11ம் திகதி நவம்பர் காலை பிரான்சிற்கு சொந்தமான மயோற்றா தீவு இருக்குமிடத்தில் இருந்து மிகமிக ஆழத்தில் இருந்து அதிர்வலைகள் கிளம்பியுள்ளன. இந்தத் தீவு இந்து சமுத்திரத்தில் ஆபிரிக்காவிற்கு அருகில் உள்ள மடகாஸ்கரை அண்டி இருக்கிறது. கடலின் அடி ஆழத்தில் இருந்து சுமார் 20 நிமிடங்கள் கொண்ட விட்டுவிட்டு நகர்ந்த லேசர் போன்ற…

சீனா அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர் மூன்று மாதங்கள் ஒத்திவைப்பு

சீனா அமெரிக்கா நாடுகளின் அதிபர்கள் ஆர்ஜண்டீனா தலைநகர் புவனஸ் அயரஸ்சில் நேற்று முன்தினம் சந்தித்து பேசி வர்த்தகப் போர் பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வை கண்டுள்ளார்கள். அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போரில் மிகப்பெரும் வலிகளை சுமந்தது சீனாதான். ஆகவேதான் அமெரிக்காவின் கார்களுக்கு 40 வீதம் வரி விதித்து வர்த்தக முடக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது கடந்த சனிக்கிழமை ஜி 20 நாடுகளின் மாநாட்டின் மதிய இடைவேளையை பயன்படுத்திப் பேசிய இரு தலைவர்களும் வர்த்தகப் போரை சரியான ஒரு தீர்மானம் இயற்றும்வரை சுமார் மூன்று மாதங்கள் பின் போட முடிவு செய்துள்ளனர். வரும் தை மாதம் முதல் சீனாவின் 200 பில்லியன் டாலர்கள் பெறுமதியான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு டொனால்ட் ரம்ப் 25 வீதம் வரிகளை விதிக்க இருந்தார். இது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 200 பில்லியன் டாலர் பெறுமதியான பொருட்களுக்கான…

எச்.டபிள்யூ புஸ்சின் பூதவுடலுக்கு எயாபோஸ் – 1 ல் உயர் மரியாதை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சின் தந்தையான முந்திய அமெரிக்க அதிபர் எச்.டபிள்யூ புஸ் கடந்த வெள்ளி ரெக்சாஸ் ஹவுஸ்ரனில் உள்ள அவருடைய வீட்டில் மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 94. இவருடைய இறுதிக்கிரியை நிகழ்விற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்பும் பாரியாரும் பங்கேற்க இருக்கிறார்கள். எதிர்வரும் ஐந்தாம் திகதி நாட்டின் கொடிக்கம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், அரச கட்டிடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இறந்த முன்னாள் அதிபருக்கு அதி உயர் அரச மரியாதை வழங்கப்படுமெனவும் அறிவித்துள்ளார். முன்னாள் அதிபரின் பூதவுடல் டெக்சாசில் இருந்து வோஷிங்டனுக்கு அமெரிக்க விமானப்படையின் எயார் போஸ் வண் விமானத்தில் மரியாதையுடன் எடுத்து வரப்படும் என்றும் கூறியிருக்கிறார். எயார் போஸ் வண் பொதுவாக பதவியில் இருக்கும் அதிபர் பயணிக்கும் விமானமாகும். ஜேர்ஜ்…