கதையின் அடிப்படையே கோளாறு: ‘2.0’ படம் குறித்து சாரு நிவேதிதா

ரஜினி நடிப்பில் நேற்று (நவம்பர் 29) ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் பாராட்டி வருகிறார்கள். தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த தமிழ்ப்படமாக இது இருக்கிறது என ஆச்சரியப்படுகின்றனர். ஆனால், எழுத்தாளர் சாரு நிவேதிதாவோ இந்தப் படத்தைக் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்திருக்கிறார். இவர் தாக்கி பெயர் பெறும் ஒருவராக இருப்பதால் இவருடைய கருத்துக்கள் பத்தோடு பதினொன்றாக போவது வழமை. 600 கோடி ரூபாயில் எடுத்த லைகா நிறுவனமே செல்போன் விற்பனை செய்யும் நிறுவனம்தான் என்று அவர் சொல்வதில் நியாயமும் இருக்கிறது. இதுகுறித்து தனது முகநூலில், “சிலரைப் பார்த்து, ‘இவர் தப்பான ஆள்’ என்று…

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தோல்வி: மன்னிப்பு கோரினார் ஆமிர் கான்

'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தின் தோல்விக்கு தான் முழு பொறுப்பேற்பதாகவும், படத்தை நம்பி வந்து ஏமாந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார். அமிதாப் பச்சன், ஆமிர் கான், கேத்ரீனா கைஃப் என பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு, மிகுந்து பொருட்செலவில் உருவான படம் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்'. படத்தின் ட்ரெய்லர் வந்த நாள் முதலே படத்தைப் பற்றி எதிர்மறையான அபிப்ராயங்களே உருவானது. படம் வெளியானதும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் படம் கடும் அதிருப்தியைச் சந்தித்தது. படத்தின் விதி குறித்து சமீபத்தில் பேசிய நாயகன் ஆமிர் கான், "இதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை நாங்கள் செய்தோம் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். இந்தப் படத்தை ரசித்தவர்களும் உள்ளனர். அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறோம். அவர்களுக்குப் படம் பிடித்தது…

2.0 படத்துக்கு அதிக பொருட்செலவானது ஏன்? சுபாஷ்கரன் பேட்டி

தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார். பேட்டியளிக்க பெரிதும் தயங்கும் சுபாஷ்கரன், எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியாகவும் சுருக்கமாகவும் பதிலளித்தார். கேள்வி: 2.0 படத்தைத் தயாரிக்கும் திட்டம் எப்படி உருவானது? இத்தனைக்கும் கத்தி பட வெளியீட்டின்போது பிரச்சனைகளைச் சந்தித்திருந்த நிலையில், துணிந்து இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்ய எப்படி முடிவெடுத்தீர்கள்? பதில்: தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்ல, பொதுவாக திரைப்படங்கள் மீது எனக்குப் பெரிய ஈர்ப்பும் ஆர்வமும் உண்டு. சிறுவயதிலிருந்தே, தினமும் ஒரு படமாவது பார்க்கும் பழக்கமுண்டு. அந்த ஆர்வம்தான் என்னை திரைப்படங்களை தயாரிக்கத் தூண்டியது. கே. தொலைத்தொடர்புத் துறையில் மிகப் பெரிய தொழிலதிபராக இருந்தபோதும் திரைப்படத் துறையில் ஈடுபாடு காட்டுவதற்கு இந்த ஆர்வம்…

மனைவிக்கு ஊசி மூலம் எய்ட்ஸை பரப்பிய கணவர்

புனேயில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடாததால் தனக்கு எச்ஐவி கிருமியை ஊசி மூலம் செலுத்தியதாக காவல்துறையிடம் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். புனே பிம்பிள் சவுதாகர் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் இந்த புகாரை அளித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார். அப்போது ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சோதனையில் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ந்து போன அந்த இளம் பெண் தான் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று கணவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘‘2015-ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடந்தது. எனது கணவர் ஹோமியோபதி மருத்துவராக உள்ளார். சில மாதங்கள் கழித்து கணவர் வரதட்சணை கேட்டு…

‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டம் வரலாறு காணாத வன்முறை

பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக லட்சக்கணக்கானோர் திரண்டு ‘மஞ்சள் ஜாக்கெட்’ அணிந்து பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அந்நாடு ஸ்தம்பித்துள்ளது. பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதால் அவசர நிலையை பிரகடனம் செய்வது குறித்து பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு சமீபத்தில் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் பெட்ரால் மற்றும் டீசல் விலை அந்நாட்டில் கடுமையாக உயர்ந்தது. பிரான்ஸில் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோக்கள் முதல் 1.53 யூரோ என கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த 2000மாவது ஆண்டுக்கு பிறகு பிரான்ஸில் பெட்ரால், டீசல் விலை இந்த அளவு உயர்த்தப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதலை தவிர்க்க எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த நடவடடிக்கை எடுக்கப்படுவதாக…

கணேஷ் தினேஷின் பூதவுடல் நல்லடக்கம்

மட்டக்களப்பு, வவுணதீவு, வலையிறவு காவலரணில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் பூதவுடல், பொலிஸ் மரியாதையுடன் இன்று (02) முற்பகல் பெரியநீலாவணை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ்விறுதி நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சந்திர ஜயசேகர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று காலை அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்த அமரர் பொலிஸ் சார்ஜெண்ட் கணேஷ் தினேஷின் பூதவுடலுக்கு பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். கிழக்குமாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம, முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலரும் இங்கு வருகைதந்து அஞ்சலி செலுத்தினார்கள் இதனை தொடர்ந்து பெரியநீலாவணை பிரதான வீதி வழியாக பூதவுடல் பொலிஸ் மரியாதையுடன் பெரியநீலாவணை பொது மாயனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இங்கு கிழக்கு மாகாண…

TNA வின் செயற்பாட்டை தமிழ் மக்கள் ஏற்கவில்லை !

தென்னிலங்கையில் இராமன் ஆண்டாலென்ன இராவணண் ஆண்டாலென்ற என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இருக்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கொள்ளவில்லை என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்ச்சியாக கூட்டமைப்பு ஆதரவை வழங்கி வருவதால் தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படலாம். ஆகவே இதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுழிபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (01) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தெற்கு அரசியலில் அதிகாரத்திற்கு வருவதற்கான பலப்பரீட்சை நடக்கின்றது. இதில் யார் அதிகாரத்திற்கு…