அலைகள் வாராந்தப் பழமொழிகள் 01.12.2018 சனிக்கிழமை

ஆங்கிலத்தில் உள்ள தகவல்கள் தமிழில்..

01. மற்றவர்களின் உரிமைகளை நாம் அவர்களுக்கு வழங்கும்போது, நாம் நமது சொந்த உரிமைகளுடன், தேசத்தின் உரிமைகளையும் பெறுகிறோம்.

02. எத்தனையோ பாடுபட்டு பெரும் பொருட் செலவில் நல்ல விடயங்களை பல ஊடகங்கள் தருகின்றன. அவற்றை இலவசமாக படிக்கும் நாம் அதற்கு பிரதியுபகாரமாக ஒரு சதம் ஆவது கொடுத்தோமா என்று கேட்டுப்பார்க்க வேண்டும்.

03. வன்முறையும் மிரட்டலும் ஒரு காலமும் நல்ல பலனைத்தரவே தராது. அழிவுச் சக்தி என்பது முறையற்ற ஆசையாகவோ, அல்லது ஒரு வெடி குண்டாகவோ எப்படியிருந்தாலும் அது ஆபத்தானதுதான்.

04. பிரச்சனை என்னவென்று அறிந்து அதை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்யாத வரையில் சச்சரவு ஓயாது.

05. இடையூறு தவிர்க்கப்பட வேண்டுமா அடுத்தவர்களின் மனதை புரிந்து கொள்ளுங்கள். அவரது விருப்பம், கண்ணோட்டம், யோசனைகளை பற்றி யோசியுங்கள். அவர் அதிகமாக எதை விரும்புகிறார் என்று பாருங்கள். அவரை எவ்வாறு சந்தோஷப்படுத்தலாம் என்றும் பாருங்கள்.

06. நமக்கு ஏதாவது செல்வாக்கு இருந்தால் அதை ஆதாரமாக வைத்து விரோத மனப்பான்மையை தவிர்க்க முயல வேண்டும். அப்போதுதான் மூலதனத்திற்கு பாதுகாப்பு ஏற்படும்.

07. பிறர் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களோ..அதை எல்லாம் நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள். இது தேவர்கள் சொன்ற விதி முறையாகும்.

08. நமது விருப்பங்களை இறைவன் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நாம் முதலில் இறைவனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் உங்களிடம் அன்பு காட்ட வேண்டுமானால் முதலில் நீங்கள் அவனிடம் அன்பு செலுத்துங்கள். இதுவே உலகம் முழுவதிற்குமான தெய்வீக விதி முறையாகும்.

09. இன்றைய முதலாளிகள் நாளை தொழிலாளி ஆகலாம். அத்தகைய தருணத்தில் நீங்கள் உங்களை எப்படி நடத்த வேண்டுமென எதிர் பார்ப்பீர்களோ.. அது போல இன்று உங்கள் தொழிலாளிகளை நடத்துங்கள்.

10. அன்பு மூலம் அன்பு கிடைக்கிறது. மரியாதை மூலம் மரியாதை கிடைக்கிறது. ஒவ்வொரு நொடியும் நீங்கள் எப்படி நடக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

11. உங்கள் தொழிலாளி மீது கூடுதல் சுமையை ஏற்ற விரும்புகிறீர்களா.. ஆயின் அவர்களுக்கு சிறிது சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கவும்.

12. ஒரு நீங்கள் ஒரு முதலாளியாக மாறினால் உங்கள் தொழிலாளர்கள் ஏனோ தானோ என்று நடப்பதை அனுமதிப்பீர்களா..? என்று சிந்திக்க வேண்டும். ஏனென்றால் நேற்றைய தொழிலாளிதான் இன்றைய முதலாளி.

13. இந்த உலகில் நீங்கள் சரிப்படுத்த வேண்டிய ஒரேயொரு இடம் மட்டுமே உள்ளது அதுதான் உங்கள் மனம்.

14. வீண் தப்பு அபிப்பிராயங்களை வளர்க்காமல் அமைதியுடன் கவனித்துக் கேட்பதையே உலக வரலாறு தலைமைத்துவத்தின் அடையாளம் என்கிறது.

15. ஒரு பெரிய சுரங்கத்தொழில் நிறுவன முதலாளி சொன்னார். யாராவது ஒருவர் நியாயமான வேண்டுகோள் வைத்தால் அதை கண்டிப்பாக காது கொடுத்துக் கேட்கிறேன் என்று. அது அவர் பெரியவராக உதவியது.

16. ஆசை அதிகரிப்பதனால் மற்றவர் கருத்துக்களை காது கொடுத்து கேட்கமாட்டார்கள். ஆசை கொழுந்துவிட்டு எரிவதனால் மற்றவர் கருத்துக்களை காது கொடுத்து கேட்காமல் சண்டைக்கும் போகிறார்கள்.

17. அநீதிகள் மூலம் நாம் அடையும் துயரங்கள் தற்காலிகமாகவே இருக்கும். மேலும் அந்த இடையூறுகள் நமக்கு ஒரு புதுவழியை காட்டுவதாகவும் இருக்கின்றன.

18. எதிரியை திருப்பித் தாக்குவது மனிதன் குரங்காக இருந்த காலத்தில் அவன் செய்து கொண்டிருந்த காரியம். இதை நீங்கள் புரிந்து கொண்டால் ஏன் அவர்களை மன்னிக்க வேண்டும் என்பதையும் அறிவீர்கள்.

19. கடவுளை வணங்கும்போது நாம் நமது எதிரிகளை மன்னிக்கும்படி வேண்டுவதற்காக தூண்டப்பட்டிருக்கிறோம் என்பதை புரியுங்கள்.

20. கடவுள் வழிபாட்டில் மற்றவரை அழிக்கும்படி கேட்காதீர்கள். காரணம் நாம் கடவுளிடம் எதை விதைக்கிறோமோ அதையே மறுபடி அறுவடை செய்ய நேரிடும்.

21. ஒவ்வொரு சிறிய விடயத்திலும் நான் நேர்மையுடன் நடக்கிறேன். ஏனென்றால் நான் நல்லவன் என்று உலகம் சொல்வதற்காகக அல்ல. நான் நேர்மையானவன் என்ற உணர்வு என் மனதில் ஆழமாக பதிய வேண்டும் என்பதற்காகவே என்கிறார் அறிஞர் ஒருவர்.

22. மற்றவரை மன்னிப்பது என்ற குணாம்சம் மூலம் உங்கள் குணாம்சத்தை பலப்படுத்துங்கள்.

23. எப்போதும் மற்றவர்களிடம் நேர்மையாகவும் பெருந்தன்மையாகவும் நடந்து கொள்ள விரும்புங்கள்.

24. மற்றவர்களிடம் உள்ள குற்றங்களைப் பிடிப்பதைவிட நம்மிடம் உள்ள குற்றங்களை அகற்றிக் கொள்ள முயற்சிப்பது நல்லது.

25. மற்றவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி அவதூறு பேசுவதை இனியாவது தவிர்ப்போம்.

அலைகள் 01.12.2018 சனிக்கிழமை

தொடர்ந்தும் வரும் பழமொழிகள்

Related posts