அலைகள் வாராந்தப் பழமொழிகள் 01.12.2018 சனிக்கிழமை

ஆங்கிலத்தில் உள்ள தகவல்கள் தமிழில்.. 01. மற்றவர்களின் உரிமைகளை நாம் அவர்களுக்கு வழங்கும்போது, நாம் நமது சொந்த உரிமைகளுடன், தேசத்தின் உரிமைகளையும் பெறுகிறோம். 02. எத்தனையோ பாடுபட்டு பெரும் பொருட் செலவில் நல்ல விடயங்களை பல ஊடகங்கள் தருகின்றன. அவற்றை இலவசமாக படிக்கும் நாம் அதற்கு பிரதியுபகாரமாக ஒரு சதம் ஆவது கொடுத்தோமா என்று கேட்டுப்பார்க்க வேண்டும். 03. வன்முறையும் மிரட்டலும் ஒரு காலமும் நல்ல பலனைத்தரவே தராது. அழிவுச் சக்தி என்பது முறையற்ற ஆசையாகவோ, அல்லது ஒரு வெடி குண்டாகவோ எப்படியிருந்தாலும் அது ஆபத்தானதுதான். 04. பிரச்சனை என்னவென்று அறிந்து அதை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்யாத வரையில் சச்சரவு ஓயாது. 05. இடையூறு தவிர்க்கப்பட வேண்டுமா அடுத்தவர்களின் மனதை புரிந்து கொள்ளுங்கள். அவரது விருப்பம், கண்ணோட்டம், யோசனைகளை பற்றி யோசியுங்கள். அவர் அதிகமாக எதை…

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் ரியூப்தமிழ் புத்தகங்கள்

நேற்று கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய பரிசளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ரியூப் தமிழ் நிறுவனம் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கி, நிகழ்வை உலக மன்றுக்கு இணையவழி வழங்கியது. அத்தோடு இதற்கான சான்றிதழ்களை, உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகத்துடன் இணைத்தும் வழங்கி மாணவர்களுக்கு உற்சாகமூட்டியது. மேலும் வருகை தந்த பெற்றோருக்கு ரியூப் தமிழ் பத்திரிகைகளை இலவசமாக வழங்கும் நிகழ்வும் சிறப்போடு இடம் பெற்றது. போரினால் பாதிக்கப்பட்டு யாருமே கவனிக்காது விடப்பட்டுள்ள தாயகப் பகுதிகள் எவை என்று கேட்டீர்களானால் அதுகுறித்து வழங்க கைநிறைய ஆதாரங்கள் உள்ளன. யாருக்கு எதைச் செய்வது எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது ஒரு பெரிய கேள்விதான். ஆனால் எதைச் செய்ய முயன்றாலும் உள்ளத்தில் ஒரு கேள்வி எழும். நமது தாயகம் இந்த நிலைக்கு போனதற்கு முக்கியமான காரணம் என்ன..? என்ற கேள்விதான்…