ஒரு பாட்டுக்கு ஆட ரூ.60 லட்சம் கேட்ட இலியானா

பாலிவுட் சென்ற பிறகு தமிழ், தெலுங்கு சினிமாவை மறந்துவிட்டார் இலியானா. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் அமர் அக்பர் அந்தோணி படத்தில் ரவிதேஜாவுடன் அவர் நடித்தார்.

சமீபத்தில் இந்த படம் வெளியானது. இந்நிலையில் ராம்சரண் தேஜா, கியரா அத்வானி நடிக்கும் வினயா விதேயா ராமா தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இலியானாவை கேட்டனர்.

அதற்கு ரூ.60 லட்சம் சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் இலியானா.

ஒரு பாட்டுக்கு நடனமாட அழைப்பது நடிகைகளை அவமதிப்பது போன்றது. அவர்களை கதாநாயகி அந்தஸ்த்தில் இருந்து இறக்குவது போன்ற செயல் என்றும் பல நடிகைகள் கருதுகிறார்கள்.

அந்த வகையில் ஒரு பாட்டு நடனத்திற்கு வந்தால் அதிக பணம் கேட்டால் நடிகைகளுக்கு இரண்டு இலாபங்கள் உண்டு.

01. வந்தால் பணம் 02. வராவிட்டால் புகழ்

கடந்த சில காலமாக பலத்த உளவியல் சிக்கலில் சிக்குண்டு செய்திகளில் அடிபட்ட இலியானா இப்போது மறுபடியும் மீண்டெழுந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் தனக்கு டிமாண்ட் இருப்பதாக கூறிய இலியானா, அதனாலேயே இவ்வளவு சம்பளம் கேட்பதாகவும் சொன்னார்.

அவர் கடைசியாக நடித்த அமர் அக்பர் அந்தோணி படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததை தயாரிப்பாளர் கூறியும் சம்பளத்தை குறைக்க அவர் மறுத்துவிட்டார்.

இலியானாவிடம் பலியானா என்ன ஆகும் ? பல தயாரிப்பாளருக்கு அனுபவமுண்டு என்பதால் ஓட்டமெடுத்தது படக்குழு.

இதையடுத்து வேறு நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

Related posts