உடுப்பு சரியில்லை என்று ஓடிய வடிவேலுவுடன் சிம்புதேவன் சமரசம்

இம்சை அரசன் 23 ம் புலிகேசி பாகம் இரண்டு தொடர்பாக வடிவேலுவுக்கும் இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் மேடைகளில் விஜயகாந்துக்கு எதிராக பேசி சிக்கலில் மாட்டிக் கொண்ட வடிவேலு பல ஆண்டுகள் நடிக்க முடியாதபடி தேக்கமடைந்ததும் தெரிந்ததே. இதனால் வடிவேலின் காலம் முடிந்துவிட்டதென அவரை திரையுலகு அடிமாட்டு விலையில் பயன்படுத்த நினைத்தது. மாறாக வடிவேலுவோ தான் பழைய இடத்திலேயே இப்போதும் இருப்பதாக மனப்பால் குடித்தார். தனது நிலையை உணர அடியோடு மறுத்தார். கையில் இருந்த பணம் அவரை அப்படி எண்ண வைத்தது. இந்த இடைவெளியில் யோகிபாபு, சூரி போன்றவர்கள் இவரைவிட மேலே போய்விட்ட செய்திகூட அவருக்கு தெரியாது. அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்கும் பழக்கமும் பழைய கவுண்டமணி போல இவருக்கும் இல்லை. தான் இப்போது வீழ்ச்சி கட்டத்தில் இருப்பதை கடைசியாக…

இன்று பிளாக் பிறைடே சிந்திக்க வேண்டிய முக்கிய ஏழு விடயங்கள்

இன்று உலகத்தின் மிகப் பெரிய மலிவு விற்பனைத் திருநாள்களில் ஒன்றான பிளாக் பிறைடே தினமாகும். உலகத்தின் பல நாடுகளில் மலிவு விற்பனை களைகட்டும் திருநாள் இதுவென்று போற்றப்படுகிறது. இன்றைய நாளில் சாதாரண கடைகள் தமது வருட விற்பனையின் உச்சத்தை ஒரே நாளில் எட்டித் தொடும் விற்பனை நாளாகும், அதாவது நம்மூரில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் நடக்கும் வர்த்தகம் போல பரபரப்பான நாள். வருடாந்த உற்பத்திப் பொருட்கள் இந்த வருடத்துடன் பழையதாகி அடுத்த வருடம் புதிய பொருட்கள் வருவதற்கான வெற்றிடத்தையும் இந்த நாள் ஏற்படுத்துகிறது. சிறப்பாக அமேசான், அலிபாபா போன்ற பாரிய இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு இன்று வேட்டைத் திருவிழா என்றே கூறலாம். பிளாக் பிறைடே என்பது ஒவ்வொரு நவம்பர் மாதத்திலும் வரும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று வரும். அடுத்து வரப்போகும் டிசம்பர் மாத நத்தார் காலத்திற்கான பரிசுப்…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 18. 47

இரட்சிப்பும் தேவனுடனான வாழ்வும். சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகோபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். அது முதல் இயேசு, மனந்திரும்புங்கள், பரலோக இராட்சியம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்க தொடங்கினார். மத்தேயு 4:17. கடந்த இரண்டு வாரமும் கிறிஸ்த்தவத்தில் சொல்லப்படும் மனந்திரும்புதலும், இரட்சிப்பும் என்றால் என்னவென்பதைக் குறித்தான தெளிவான விளக்கத்தை அறிந்து கொள்வதோடு மட்டுமல்ல, அறிந்துகொண்ட தவறான விளக்கத்தில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்வNhதடு, இரட்சிப்பு என்னும் மிகப்பெரிய ஆசீர்வாதத்தைப் பற்றி அலைகள் வாசகநேயர்கள் புரிந்து கொள்ளும்படியாக எழுதியிருந்தேன். இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள உங்கள் யாவரையும் மீண்டும் அழைத்துச் செல்கிறேன். மக்கள் மத வழிமுறைகளை, மத சடங்காச்சாரங்களை ஒழுங்காகக்கடைப்பிடித்து அல்லது பின்பற்றி வந்தாலும், தானதர்மங்கள் மூலம் தங்களுடைய கிரியைகளை (செயல்களை) நடப்பித்துவந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் இரட்சிப்பு என்ற பாவமன்னிப்பின் நிச்சயம் அவர்களது வாழ்க்கையில் இல்லாதிருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.…

தீபிகா படுகோன் அணிந்திருந்த மோதிரத்தின் விலை

பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியிலுள்ள லேக் கோமா நகரில் நடைபெற்றது. கொங்கினி கலாச்சார முறைப்படியும் அடுத்த நாள் சிந்தி கலாச்சாரப்படியும் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தீபிகா படுகோன் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். சில வாரங்களுக்கு முன் தங்களது திருமணச் செய்தியை கடந்த மாதம் ரன்வீர் சிங்கும், தீபிகாவும் ட்விட்டரில் ஒரு சேர அறிவித்தனர். தற்போது திருமணம் முடிந்த நிலையில் தங்களது திருமணம் தொடர்பான புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இதில், திருமணத்தின்போது தீபிகா படுகோன் கை விரலில் அணிந்திருந்த கல் வைத்த மோதிரத்தின் விலை குறித்து சமூக வலைதளங்களில் பெரும்…

குஜராத்தில் பிரம்மாண்ட புத்தர் சிலை

குஜராத்தில் 182 அடி வல்லபாய் படேல் சிலையை அடுத்து, பிரம்மாண்ட புத்தர் சிலை அமைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். வதோதராவில் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை உலகிலேயே உயரமான சிலையாகும். அதேபோல குஜராத்தில் பிரம்மாண்ட புத்தர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சங்காகயா அறக்கட்டளை புத்தமத அமைப்பு, காந்தி நகரில் 80 அடி உயர புத்தர் சிலை அமைக்க குஜராத் அரசிடம் நிலம் கோரியுள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் பாந்தே பிரஷில் ரத்னா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பெருமை வாய்ந்த குஜராத்தில் புத்தருக்கு சிலை அமைக்க உள்ளோம். படேல் சிலையை உருவாக்கிய…

யாழ்ப்பாணத்தில் அடையாள அட்டை கொண்டு செல்லாத..

யாழ்ப்பாணத்தில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் பொலிஸார் கைது செய்து தாக்குதல் நடத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தலை கீழாக கட்டித்தூக்கி அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கையில் , கடந்த 19 ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது மைத்துனரும் முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது , வீட்டுக்கு அருகாமையில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த சுன்னாகம் பொலிஸார் நாம் பயணித்த முச்சக்கர வண்டியை மறித்து சோதனையிட்டதுடன் , முச்சக்கர வண்டியை…

பாராளுமன்றம் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது. பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான போது, இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க தனிக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் தனக்கு வாய்ப்பு ஒன்றை வழங்குமாறு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அதன் பின்பு, ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா…