ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு கூட்டத்தில் குண்டுவெடிப்பு; 40 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் முகமது நபியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தினை குறிக்கும் வகையில் திருமண மகால் ஒன்றில் இன்று மதகுருக்கள் தலைமையில் இறை வழிபாடு கூட்டம் நடந்தது.

இந்த நிலையில் அங்கு திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 40 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுபற்றி அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி நஜீப் டேனிஷ் கூறும்பொழுது, முதற்கட்ட தகவலின்படி இது தற்கொலை தாக்குதல் என தெரிய வந்துள்ளது. பலி மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ கடந்து இருக்கும் என கூறினார்.

Related posts