கஜா புயலால் ரூ.10,000 கோடி அளவுக்கு சேதம்…

தமிழகத்தில் கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதமடைந்து இருப்பதாக என தமிழக அரசு முதற்கட்டமாக கணக்கிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல் நிவாரணமாக முதற்கட்டமாக தமிழக அரசு ரூ.500 கோடியை விடுவிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 1,70,454 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டு வருகிறது. மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள 12,532 மின் துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண நிதி கோருவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.…

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவகுமார் குடும்பம் 50 லட்சம் உதவி

கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக் கின்றன. .புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன…

துரோக அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்

இந்த நாட்டின் வரலாறு அரசியல் துரோகங்களாலும் ஏமாற்று மோசடிகளாலுமே சீரழிந்து வந்திருக்கின்றது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது, இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு அப்பால் அரசியல் துரோகத்தனங்களே மேலோங்கி நிற்கின்றன. அரசியல்வாதிகள் வேறொரு நோக்கத்திற்காக மக்களின் ஆணையைப் பெற்று பின்னர் மக்களின் விருப்பின்றி தமது சுயநலத்திற்காக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இதனாலேயே நாட்டின் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தொடக்கம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாத கையறு நிலையில் மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள். கொள்கை, உறுதி, சமூகப் பொறுப்பு, தேசப் பற்று எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு தனதும் தனது…

அமைச்சரானது ஏன் விளக்கம் தந்த வியாழேந்திரன்..?

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக நான் அமைச்சுப்பொறுப்பையேற்றதுடன் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட 11 கோரிக்கைகளை ஜனாதிபதியிடத்தில் முன் வைத்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றேன் என வியாழேந்திரன் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வியாழேந்திரனிடம் இன்று காலை ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் கடந்த மூன்றரை வருடங்களாக எதிர்க்கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியால் கொண்டுவரப்பட்ட வரவுசெலவுத்திட்டங்களுக்கு எதிராக நாங்கள் கைகளை உயர்த்தியுள்ளோம். இவ்வாறு சில பிரேரணைகளுக்கு எதிராகவும் நாங்கள் கரங்களை உயர்த்தியுள்ளோம். அதனுடைய உச்சக்கட்டம் என்னவென்றால் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிராக கொண்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கியுள்ளோம்.…

மகிந்த பிறந்தநாள் பாராளுமன்றம் ஒத்தி வைப்பு இன்றைய சிறீலங்கா

பாராளுமன்றம் பல்வேறு சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் சற்று முன்னர் நான்காவது முறையாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. (பின்னிணைப்பு - 1.05 PM) பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதன் பின்னர் 23 ஆம் திகதி காலை 10 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றம் இன்று கூடியதன் பின்னர் மீண்டும் ஒத்தி வைப்பதற்கு கட்சித் தலைவர்கள் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். இதேவேளை, பாராளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு இன்று அனுமதி வழங்கப்படாத நிலையில் அமர்வில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ------------- உயர் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு ஒன்று விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து…

பத்துக்கிலோ எடை குறைத்து பத்திரிகையாளராக நடிக்கும் நமீதா

திருமணத்துக்குப் பிறகு முதன்முதலில் ‘அகம்பாவம்’ என்ற படத்தில் நடிக்கிறார் நமிதா. நமிதா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘இளமை ஊஞ்சல்’. 2016-ம் ஆண்டு ரிலீஸானது. அதே ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான ‘புலி முருகன்’ படம்தான் பிற மொழிகளில் நமிதா நடித்து வெளியான படங்களில் கடைசிப் படம். அதன்பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை. அரசியலில் ஆர்வம் காட்டிய நமிதா, அதிமுகவில் உறுப்பினராக இணைந்தார். ஒருசில அதிமுக கூட்டங்களில் பங்கேற்கவும் செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலிலும் ஆர்வம் காட்டாமல், தொழிலதிபரான வீரேந்திர செளத்ரியைக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார் நமிதா. சத்ரபதி ஸ்ரீ மகேஷ் இயக்கும் ‘அகம்பாவம்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். பெண் போராளிக்கும், சாதியை வைத்து அரசியல் பண்ணும் மோசமான அரசியல்வாதிக்கும் இடையே…

ஆணிவேர் படத்திற்கு நடந்ததை அறியாத திருமுருகன் காந்தி

சென்சார் அனுமதி கிடையாது என்பதும், ஆணிவேர் படத்திற்கு என்ன நடந்தது என்பதும் திருமுருகன் காந்தி அறியாததல்ல.. ஆனாலும் உருட்டி விட்டுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனையை சினிமா ஆக்கினால் விஜய், அஜித் ரசிகர்கள் வருவார்களா..? இலங்கை தமிழர் பிரச்சனையை எழுத்து வடிவில் கொண்டுவரவே இன்று தமிழகத்தில் எழுத்தாளர்கள் இல்லை. எல்லோரும் பிழைப்புவாதிகள் என்பது எல்லோருக்கும் தெரியும் எல்லோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக பேசுகிறோம் என்றும் எல்லோருக்கும் தெரியும். தமிழகத்தின் உணர்வாளர்களின் நடிப்பைவிட சினிமாவில் என்ன பெரிய நடிப்பு வரப்போகிறது என்பது திருமுருகன் காந்தி முன் உள்ள கேள்வி. இது குறித்து வெளியான செய்தி : இலங்கைத் தமிழர்கள் படுகொலை பற்றி ஒரு படைப்பு கூட வரவில்லை என்ற வருத்தம் உள்ளதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேதனையுடன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணக்…