சாமுவேல் லிற்றில் ஒரு சீரியல் கொலைஞன் 90 அமெரிக்கர் கொலை

அமெரிக்காவின் பிரபல சீரியல் கொலைஞன் என்று வர்ணிக்கப்படும் சாமுவேல் லிற்றில் என்பவர் 90 பேர்வரை கொன்றிருக்கலாம் என்று புதிய அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது.

அந்தக் காலத்து மர்ம திரைப்பட இயக்குநர் அல்பிரட் ஹிச்சொக்கின் சைக்கோ திரைப்படத்தில் வருவதைப்போல தொடர்ச்சியாக கொலைகளை நடத்தியவர் என்று சாமுவேல் லிற்றில் என்ற அமெரிக்கர் வர்ணிக்கப்படுகிறார். இவர் அமெரிக்காவின் பல மாகாணங்களில் தனது கொலைகளை அரங்கேற்றியிருக்கிறார் என்பதை அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் மிகவும் தாமதமாகவே கண்டு பிடித்துள்ளனர். 90 பேர்வரை கொன்றுவிட்டு 24 வருடங்கள் கம்பி நீட்டி திரிந்திருக்கிறார்.

ஆனால் சாமுவேல் லிற்றில் 1987 – 1989 காலப்பகுதியில் மூன்று பெண்களை மட்டும் கொலை செய்த குற்றச் சாட்டில் கைதானவர். இவர் மீதான குற்றங்கள் உறுதியாக ஊர்ஜிதமாகாத காரணத்தால் தூக்கில் போட முடியாத நிலை இருந்தது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வைத்து இப்பெண்களை கொன்றது யாரென உடனடியாக உறுதி செய்ய முடியாதிருந்தது. சுமார் 24 வருடங்களின் பின்னதாகவே இந்த நபர் கைதாகியிருந்தார்.

1994ம் ஆண்டு இவரைப்பற்றிய மேலும் பல வழக்குகள் எடுக்கப்பட்டன. 1970 – 2005 வரை ரெக்சாஸ், புளோரிடா, ஜோர்ஜியா, ரென்னீச, மிசுசிப்பி, லூசியானா, இலினோய்ஸ், ஒகியோ, கலிபோர்ணியா ஆகிய இடங்களில் நடைபெற்ற கொலைகளில் இவருக்கு சம்மந்தம் இருப்பதாக தெரிவிக்கும் சட்டத்தரணி பொபி பிளண்ட்டின் அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது.

இத்தனை பேரையும் இவர் எப்படிக் கொன்றார், எதற்காக இந்தக் கொலைகளை நடத்தினார் என்பதை விசாரணையின் போது சரிவர புரிய முடியாதபடி பல குறுக்கு மறுக்கு நியாயங்களைப் பேசி குழப்பியடித்தும் வந்திருக்கிறார். இருப்பினும் 90 வழக்குகளில் நடைபெற்ற விசாரணைகளில் 30 பேரை ஆங்காங்கு கழுத்து முறித்து கொன்ற கில்லாடி இவரே என்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

ஆனால் இப்போதோ மொத்தம் நூறு வரையான கொலைகளுக்கும் இவருக்கும் சம்மந்தமிருப்பதாகக் கூறப்படுகிறது. இவரை தூக்கில் போட்டால் மேலும் பல கொலைகளின் சூத்திரதாரியை கண்டறிய முடியாது போய்விடும். ஆகவே எச்சந்தர்ப்பத்திலும் வெளியே செல்ல முடியாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவரைப்போல அதிக எண்ணிக்கையில் கொலைகளை செய்தாலும் தூக்கில் தொங்காது வாழும் பெரும் கொலையாளிகள் பலர் உண்டு. அவர்கள் போர் என்ற போர்வைக்குள் மறைந்திருப்பதால் தப்பி வாழ்கிறார்கள். ஆனால் அவர்களைப் போன்ற சைக்கோ கில்லராக இவரும் இருந்தாலும் இவர் சிறையில் இருப்பது மட்டுமே வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

அலைகள் 18.11.2018 ஞாயிறு மாலை

Related posts