அரசியல் தீர்வு : சுமந்திரனுக்கு பட்ட பின்னால் வந்த ஞானம் இது..

இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்

சண்டே மோர்னிங்கிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உலகில் அனைத்து பகுதிகளிலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கம் தோற்றால் பிரதமர் பதவி விலகுவது வழமை ஆனால் பெரும்பான்மையே இல்லாத மகிந்த ராஜபக்ச சட்டத்திற்கு விரோதமான முறையில் பிரதமராக்கப்பட்டார் என தெரிவித்துள்ள சுமந்திரன் ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் கட்சிகள் அவரால் தனது பெரும்பான்மையை நிருபிக்க முடியுமா என பொறுத்திருந்து பார்த்தன, பல பேரம்பேசல்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சி ஆகியவற்றிற்கு பின்னரும் அவரால் பெரும்பான்மையை பெற முடியவில்லை என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன,இன்று உண்மையில் அரசாங்கம் என்பதேயில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

14 ம் திகதி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது , அரசமைப்பு இதன் காரணமாக அமைச்சரவை கலைக்கப்பட்டுவிட்டது என தெரிவிக்கின்றது எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்

தற்போது பலந்தமான அதிகாரத்தில் இருப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன இதுவே தற்போது இடம்பெறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலைகாரணமாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காணும் முயற்சிகள் பின்னடைவை சந்திக்குமா என்ற கேள்விக்கு நிச்சயமாக பின்னடைவை சந்திக்கும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு தொடர்பான நகல்வடிவ ஆவணமொன்றை வெளியிடும் தருணத்தில் நாங்கள் இருந்தவேளையே இந்த குழப்பம் ஏற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.அந்த ஆவணம் நவம்பர் ஏழாம் திகதி வெளிவரவிருந்தது ஆனால் இந்த குழப்பங்கள் 26ம் திகதி ஆரம்பித்தன இதன் காரணமாக அது முழுமையடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பினை ஏற்படுத்தும் முயற்சிகளில் எதிர்காலத்தில் முன்னோக்கி நகர்வதற்கான வாய்புள்ளதாக நான் கருதவில்லைஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

எனினும் பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் ஜனாதிபதி செய்ததை ஏற்காத நிலையில் ஜனாதிபதி என்ன விட்டுக்கொடுப்புகளை செய்ய தயார் என்பதை பொறுத்தே இது அமையும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Related posts