சிறீலங்கா அரசியல் வெற்றி பெற்றது யார்..? மைத்திரியார் மகிமைப்புராணம்..!

ஒரு தடவை மட்டுமே அதிபர் பதவியில் இருப்பேன் என்று ரணிலின் தலையில் வெண்ணெய் தடவி, கூட இருந்த மகிந்தவுக்கே ஆப்பு வைத்து, தான் பழைய பாதுகாப்பு அமைச்சர் என்பதை பேசாது யாழ்ப்பாண தமிழரின் வாக்குகளையும் பெற்று அதிபரானவர் மைத்திரி. இப்போது அவர் ரணிலை விரட்டி முதல் வெற்றி பெற்றார்..! ராஜபக்ஷவுக்கு பிரதமராக தானே சத்தியப்பிரமாணம் செய்து அவரை விட தானே உயர்ந்தவன் என்பதை அவருக்கே காட்டி மகிழ்ந்தார்.! பின்னர் பெரும்பான்மை இல்லாமையால் அவரையே விரட்டியடித்து பாராளுமன்றத்தையும் கலைத்து யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என்று விரட்டினார்..! இனப்பிரச்சனைக்கு தீர்வு தருவேன் என்று தமிழர் கூட்டமைப்புக்கு தேன் பருக்கி, இவ்வளவு காலமும் கடத்தி இனப்பிரச்சனை தீர்வு விடயத்தை சுடுகாட்டில் போட்டார். அமைதிப்புறா சந்திரிகா அம்மையாரின் தீர்வு பொதியை விட பெரிய பொதியை சம்மந்தர் முதுகில் சுமத்தி…

சர்வதேச இஸ்லாமிய கருத்தரங்கம் டெஹ்ரானில்

முஹம்மது நபியின் பிறந்தநாளையொட்டி (மீலாதுன்நபி) உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஒன்றுகூடி தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. ’இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ என்னும் அமைப்பான (World Forum for Proximity of Islamic Schools of Thought) ஆண்டுதோறும் இந்த சர்வதேச கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பின் 32-வது கருத்தரங்கம் நவம்பர் 24 தொங்கி 26-ம் தேதிவரை ஈரான் தலைநகரான டெஹ்ரானில் நடைபெறவுள்ளது.இந்த 3 நாள் கருத்தரங்கில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் சுமார் 80 நாடுகளில் இருந்து வருகை தரும் இஸ்லாமிய அறிஞர்கள், முப்திகள், சிந்தனையாளர்கள் மற்றும் மூத்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்க உச்சகட்ட பொருளாதார தடைகளை விதித்துள்ள…

‘சர்கார்’ வசூல் : கேரளாவில் தோல்வி

தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் ‘சர்கார்’ திரைப்படத்துக்கு வரவேற்பு இருந்தாலும், கேரளாவில் போதிய வரவேற்பில்லை என்று தெரியவந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, மூன்றாவது முறையாக இணைந்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. தமிழகத்தில் ஏரியா வாரியாக படத்தின் உரிமையை கடுமையான போட்டிக்கு இடையே, பெரும் விலைக் கொடுத்து விநியோகஸ்தர்கள் கைப்பற்றினார்கள். படம் வெளியாவதற்கு முன்பு நடைபெற்ற வியாபாரத்தில் ‘பாகுபலி 2’ படத்தை விட ‘சர்கார்’ அதிகம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள். தமிழகத்தில் முதல் நாளில் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, முந்தைய சாதனைகள் அனைத்தையுமே முறியடித்தது. இது மிகப்பெரிய சாதனையாக கருதுகப்படுகிறது. தமிழக அமைச்சர்களின் எதிர்ப்பு உள்ளிட்டவற்றால் இப்போதும் நல்ல கூட்டம் இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தங்களது…

பொங்கல் பண்டிகையில் வெளியாகிறது ‘பேட்ட’

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கியுள்ளது. மொத்த படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை ரஜினியின் 2 கெட்டப்கள் கொண்ட போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது ‘பேட்ட’ படத்தின் 3-வது போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில், ‘பொங்கலுக்கு பராக்’ என்று தெரிவித்து, பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியிருக்கிறது படக்குழு. இதனால் சமீபமாக எப்போது வெளியீடு என்று நிலவு வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படக்குழு. ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, சசிகுமார், மேகா…

கார் முன் தள்ளி கொலை போஸீல் டிஎஸ்பி தற்கொலை

திருவனந்தபுரத்தில் வாகனத்தைச் சாலையில் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரே வாகனத்தின் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நெட்டியங்காரா போலீஸ் டிஎஸ்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவனந்தபுரம் நெட்டியங்காரா சரக போலீஸ் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் பி. ஹரிகுமார். கடந்த 5-ம் தேதி நெட்டியங்காரா பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த எஸ் சனல் என்பவர் தன் காருக்கு பின்பு தன் வாகனத்தை நிறுத்தியது சர்ச்சையானது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது சனலை டிஎஸ்பி தள்ளிவிட்டார். இதில் தூக்கிவீசப்பட்ட சனல் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதனால் சனலின் மனைவி விஜி, அவரின் குடும்பத்தினர் டிஎஸ்பி ஹரிகுமாரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.…

சர்கார் படம் குறித்து அதிமுக புதிய விளக்கம்

மு.க.ஸ்டாலினை திருப்திப் படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படம்தான் சர்கார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். தஞ்சாவூரில் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன் அடைந்து வருகின்றனர். தற்போதைய அரசின் புதிய திட்டங்களும் அனைத்து குடும்பங்களையும் சென்றடைவதால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றிபெறும். கடந்த ஓராண்டாக தினகரன் அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் பெங்களூரு, குற்றாலம் விடுதிகளில் பொழுதைக் கழித்துவிட்டு தற்போது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். கட்சியில் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த பணி முடிந்த பிறகு கட்சி தேர்தலை தலைமைக் கழகம் அறிவிக்கும். இலவச திட்டங்கள் மூலம் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை…

பழைய சபாநாயகர் மீது புதிய சபாநாயகர் பாய்ச்சல் முட்டாள்தனமென கூறினார்

சபாநாயாகர் கரு ஜயசூரிய முட்டாள் தனமான செயலை செய்துள்ளார்.” என தினேஷ் குணவர்தன வசை பாடியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்ல பிரேரணைக்கு பெரும்பாண்மை கிடைத்து அப்பிரேணை நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேனையை தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்ட அமலி துமலியை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல நாளை காலை வரை 10 மணி வரை பாராளுமன்றை ஒத்திவைக்கும் ஆலோசனையை முன்வைத்துள்ளார். லக்ஷ்மன் கிரியெல்லவின் முன்மொழிவிற்கும் பெரும்பான்மை கிடைத்ததையடுத்தே சபாநாயகர் பாராளுமன்றை நாளை காலை 10 மணி வரை பாராளுமன்றை தற்காலிகமாக ஒத்திவைத்தார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் குணவர்தன பாராளுமன்ற வளாகத்தில் உள்ள ஊடகவியாலளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த தினேஷ் குனவர்தன மேலும்,உங்களுக்கு…

பாராளுமன்றம் கலைப்பும் கூட்டும் நீதிமன்றில் நடந்தது என்ன..?

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட மனுக்கள் தொடர்பில் நேற்றும் (12) இன்றும் (13) விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இத்தடையுத்தரவை விதித்துள்ளது. அதற்கமைய பாராளுமன்றத்தை 10 ஆம் திகதியுடன் கலைப்பது தொடர்பில், நவம்பர் 09 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி உத்தரவுக்கு எதிர்வரும் டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அனைத்து மக்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 - 07 வரை விசாரணைக்குட்படுத்தவும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில…

மகிந்தவை தோற்கடிக்க விடாது குழப்பம் பாராளுமன்று ஒத்திவைப்பு

சிறீங்காவின் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்ட கதை நேற்றோடு முடிந்து புதிய சூழல் உருவாகியிருக்கிறது. பாராளுமன்றம் நீதிமன்ற உத்தரவின்படி மறுபடியும் கூடியிருக்கிறது. மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்துள்ளது. அவரை தோற்கடிக்குமளவுக்கு பெரும்பான்மை ஐ.தே.கவிடம் இருக்கிறது. 122 பேர் ஆதரவாக கையொப்பமிட்டுள்ளனர். பல்டியடித்து அமைச்சர் பதவி பெற்றவர்கள் பலர் பதவியை தூக்கி வீசிவிட்டு மறுபடியும் ஐ.தே.கவுடன் இணைந்துள்ளனர். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாராளுமன்றம் நாளை 10.00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் தீர்ப்பிற்கு பின்னர் நடந்த முக்கிய சம்பவங்கள் வருமாறு.. : ----------------- கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் சற்றுமுன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இன்று (14) காலை 8.30 மணியளவில் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு நேற்று இரவு…