பிறீற்றா நீல்சனும் மகனும் டிசம்பர் நாலாம் திகதி வலை சிறையில் அடைப்பு

டென்மார்க் அரசிடம் 110 மில்லியன் குறோணர்களை சூறையாடிய சந்தேகத்தில் கைதான பிறீற்றா நீல்சன் என்ற 64 வயது பெண்மணியும் அவர் மகனும் வரும் டிசம்பர் 4ம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள்.

இப்பெண்மணி இன்னமும் தான் குற்றவாளியா சுற்றவாளியா என்பதை தெரிவிக்கவில்லை. ஆனால் முன்னதாக திருடிய பணத்தை திருப்பித்தர தயார் என்று கூறியதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் அதை அவருடைய வக்கீல் ஏற்கவில்லை.

முதலில் ஒருவர் குற்றத்தை ஏற்று, அவரால் திருடப்பட்ட பணத்தின் தொகை எழுத்து மூலம் வழங்கப்பட்டு, அதை கட்டமுடியுமா என்பதை அவர் கூறிய பின்னரே விவகாரம் அந்த இடத்திற்கு போகும்.

பிறீற்றா நீல்சன் அப்படி கருத்துரைக்கவில்லை என்கிறார் அவரது சட்டத்தரணி என்பது செய்தி.

ஆனால் பிறீற்றாவிடம் இப்போது பணம் இல்லை.. அவர் வங்குரோத்தடைந்துவிட்டார்.. ஏதோ பத்தோ இருபதோ மாதாமாதம் கட்டி முடிப்பார் என்றளவில் கதையை முடிக்க முடியுமா என்பது சுவாரஸ்யமான கேள்வி.

பிறீற்றா பணத்தை கட்டுகிறேன் என்பது இப்படியொரு நாடகக் காட்சியா என்பது தெரியவில்லை.

பல விமான நிறுவனங்கள் திடீரென வங்குரோத்தடைகின்றன.. அவர்களும் தப்பிப் பிழைக்கிறார்கள்தானே அது போல பிறீற்றாவின் கதையும் வருமா என்பது ஆவல் தரும் ஒரு தமிழ் கேள்வியாகும்.

ஆனால் இவர் குற்றவாளியாகக் காணப்படுமிடத்து பிறீற்றாவுக்கு எட்டு வருடங்களும் மகனுக்கு ஆறு வருடங்களும் சிறைக்கம்பிகள் காத்துள்ளன என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில் மேலும் இரண்டு பெண்மணிகள் சம்மந்தப்படுகிறார்கள். பிறீற்றாவின் மகன் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படுவதால் இவர்கள் தடுப்புக்காவலில் உள்ளனர்.

அலைகள் 12.11.2018 திங்கள்

Related posts