ஆன் லைன் விற்பனை அலிபாபா மாபெரும் சாதனை

ஆன் லைன் விற்பனை அலிபாபா மாபெரும் சாதனை

இணைய வழி வர்த்தகத்தில் அலிபாபா நிறுவனமும் அமேசான் போல சாதனை படைத்து வருவது தெரிந்ததே.

அந்த வகையில் சினாவில் வருடத்திற்கு ஒரு முறை வருகிறது மலிவாக பொருட்களை விற்கும் சிங்கிள்ஸ் டே . ஒவ்வோராண்டும் 11ம் மாதம் 11ம் திகதி இந்த மலிவு விற்பனை வரும்.

இந்த நாள் சீனாவின் வர்த்தகம் மலிவு விற்பனையால் சுழர்ச்சியடையும் திருநாளாகும். அந்த ஆண்டு உற்பத்தி எல்லாம் விற்று தீர்ந்து போகும் தினமாகும்.

இந்த நாளில் அலிபாபா நிறுவனம் ஒரேயொரு நாளில் விற்றுத்தள்ளிய பொருட்களின் வருமானம் உலக விற்பனையாளர்களின் மூக்கில் விரலை வைக்க செய்திருக்கிறது.

ஒரே நாளில் அலிபாபாவின் சீன சந்தை விற்பனை 30.8 பில்லியன் டாலர்களாகும். இதுவரை படைக்கப்பட்ட அனைத்து சாதனைகளையும் உடைத்து நொருக்கியிருக்கிறது அலிபாபாவின் சிங்கிள்ஸ் டே சீன விற்பனை.

சுமார் 85 செக்கன்களில் அலிபாபாவின் விற்பனை ஒரு பில்லியன் டாலர்களாகும். இது என்ன சிறிய தொகையா ஒரு ஐரோப்பிய பெரு நிறுவனத்தின் ஒரு வருடத்திற்கான விற்பனைக் கனவாகும்.

இது போல சிறப்பு விற்பனை அமெரிக்காவிலும் நடைபெறுகிறது. அங்கு பிளாக் பிறைடே எனறு பெயர். சென்ற ஆண்டு அமெரிக்காவின் பிளாக் பிறைடே என்ற கறுப்பு வெள்ளியின் மொத்த விற்பனையே 33 பில்லியன் டாலர்கள்தான். அதனுடன் ஒப்பிட்டால் தனி ஒரு நிறுவனமான அலிபாபா சீனாவில் படைத்திருப்பது சாதாரண சாதனையல்ல.

சீனாவின் சிங்கிள்ஸ் டே என்பது அமெரிக்காவின் பிளாக் பிறைடே விற்பனையைவிட நான்கு மடங்கு அதிகமானதாகும்.

அலிபாபா இந்த சீன வர்த்தகத்தில் 2009 ஆனால் 2017ல் அவர்களுடைய விற்பனை 27 வீதம் உயர்வு கண்டிருந்தது.

உலக அளவில் ஒரு நாள் விற்பனை தினங்களான பிளாக் பிறைடே, சைபர் மன்டே, சிங்கிள்ஸ் டே, ஓப்பிண் பை நைற் என்பன இன்று உலகப்புகழ் பெற்ற விற்பனை தினங்களாக மாறிவிட்டன.

வருடம் தோறும் வரும் மலிவு விற்பனைகள் நாளுக்கு நாள் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நேரம் ஒரு செய்தி நமக்கு மிக முக்கியமாகிறது. அலிபாபா நிறுவன அதிபர் பாடசாலை பிள்ளைகளுக்கு கிரியேட்டிவ் என்ற பாடத்தை மட்டும் முக்கியமாக கற்பித்து அவர்கள் கற்பனையை வளர்க்க உதவுங்கள் என்று கூறுகிறார்.

தேவையற்ற பாடங்களை கட்டாயமாக படி படி என்று அழுத்தம் கொடுத்து அவர்கள் கற்பனையை அழிக்க வேண்டாம் என்று உலகப் பெற்றோரிடம் விநயமாகவே கேட்டுள்ளார்.

ஓலை கொட்டிலில் ஒரு டியூட்டரி போட்டு, பரிசோதனை கூடம் தொடக்கம் எதுவும் இல்லாமல், அவர்களை சிந்திக்க விடாமல் பாடப்புத்தகங்களுக்குள் முடக்கி வைத்துள்ளன நம் கல்வி நிறுவனங்கள். ரியூசன் ரியூசன் என்று ஓடும் தமிழினம் அறிய வேண்டிய செய்தி இதுவாகும்.

இன்றைய பாடசாலைகளும், ரியூட்டரிகளும் பிள்ளைகளின் கற்பனையை கருக்கி பொசுக்குகின்றன. மாதச்சம்பள இலிகிதர்களாக உருவாக்கும் கொடுமையை செய்கின்றன என்பது அவருடைய கருத்து. இந்த விற்பனை வெற்றியால் இன்னொரு தடவை அவருடைய கருத்து உலக மன்றில் வலுப்பெற்றிருக்கிறது.

அன்று தன்னை எந்தப் பல்கலைக்கழகமும் சேர்க்கவில்லை என்றும், ஆனால் இன்று கௌரவ டாக்டர் பட்டம் தர உலகப் பெரும் பல்கலைக்கழகங்கள் தனக்காக வரிசையில் நிற்கின்றன. அவர்களிடம் போவதற்குத்தான் தன்னிடம் நேரமில்லை என்கிறார் அலிபாபா நிறுவனத் தலைவர்.

அலைகள் 12.11.2018 திங்கள்.

Related posts