யாழ்ப்பாணத்தில் செல்வா பாண்டியர் பிறந்த நாள் கொண்டாட்டம்

யாழ்ப்பாணத்தில் தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியரின் பிறந்தநாள் நேற்று நவம்பர் 7ம் திகதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நேற்று தமிழகத்தில் பேரெழுச்சியுடன் தென்காசி நகரில் செல்வா பாண்டியர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

எப்படி முள்ளிவாய்க்காலில் தமிழர் அழிவை சந்தித்தார்களோ தமிழகத்தில் தமிழ் வளர்த்த பாண்டியர்களின் வீழ்ச்சி இடம் பெற்ற கடைசி நகரான தென்காசியில் இந்த விழா சிறப்போடு நடைபெற்றது.

அத்தருணம் டென்மார்க் எழுத்தாளர் கி.செ.துரை எழுதிய உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.

இதே புத்தகம் இப்போது யாழ்ப்பாணத்தில் இரண்டாவது பதிப்பு அச்சாகிறது வரும் 12 திகதி வெளிவருகிறது.

வேலைகள் வேகமாக நடைபெறுகின்றன. இது குறித்து தமிழர் நடுவம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

ஈழப்போருக்கு பின்பாக, போரின் பின்னணியில் செயல்பட்ட சர்வதேச அரசியலையும், ஏகாதிபத்திய நாடுகளின் காய்நகர்த்தல்களையும் கண்டுகொண்ட தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியர் சர்வதேச அரசியலில் நமக்கான வலைபின்னலை உருவாக்க வேண்டியதென் அவசியத்தை உணர்ந்து கொண்டு உலகம் முழுவதும் பரவி வாழ்ந்த தமிழரிடையே ஒரு வலை பின்னலை உருவாக்கவும், போரினால் குலைந்த தமிழ் இளைஞர்களின் தன்நம்பிக்கையை ஊக்கமுற செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்…

தமிழர் நடுவம் என்கிற அரசியல் இயக்கத்தை உருவாக்கி சர்வதேச நாடுகள் அனைத்திலும் பரவி வாழும் தமிழர்கள் மத்தியில் அமைப்பை கொண்டு சேர்த்ததோடு சர்வதேச அரசியலில் தமிழர்களின் நிலை என்ன என்றும் சிந்திக்க செய்து தமிழர்களின் தேசிய இன உணர்வை தட்டி எழுப்பியதோடு மட்டுமல்லாமல் “தமிழர் தேசியம்” என்கிற அரசியல் தத்துவத்தையும் கட்டமைத்து தமிழர்கள் மத்தியில் ஆளும் எண்ணத்தையும் நம்பிக்கையையும் விதைத்ததில் பாண்டியரின் பங்கு பிரதானமானது…

இவ்வாறு தமிழர் தேசிய இனத்தின் சர்வதேச அரசியல் ஆளுமையாக வளம்வந்த பாண்டியரின் பிறந்தநாள் “தமிழர் தேசிய எழுச்சி நாளாக” யாழ்பாணம் தமிழர் நடுவம் அலுவலகத்திலும் தமிழ் இளைஞர்களின் பேராதரவோடும், டியூப் தமிழின் மீடியா ஒனுசரனையுடனும் சிறப்பாக கொண்டாடப்பட்டது…!

#தமிழர்தேசியஎழுச்சிநாள்
#தமிழர்நடுவம்
#நவம்பர்7

Related posts