தோழர் செல்வா பிறந்த நாள் தென்காசியில் கொண்டாடப்பட்டது!

தோழர் செல்வா என்றால் யார்..?

இப்போது எல்லாருக்கும் தெரியும், ஆனால் தெரியாதது போல நடிப்பது ஒரு பாஷனாக இருக்கிறது.. சமூக நடிகர் திலகங்களின் நடிப்பு தொடர்கிறது.

காலம் மாறும் நம் சமூக நடிகர்கள் செல்வாவை பேசுவார்கள், அப்போது இன்று பாடுபடும் தோழர்களை விலத்திவிட்டு தாமே ஆதியும் அந்தமும் என்றும் பேசலாம்.

ஈழத்தின் போராட்டத்தை ஏப்பம் விட்டு சொந்தம் கொண்டாடிய கூட்டம் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

என்ற குரல்களை இப்போது சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடிகிறது..

தமிழர் தேசிய தந்தை என்று தமிழக இளைஞர்கள் அவருக்கு பெயர் சூட்டி மதிப்பளித்தபோது அவருக்கு இத்தனை பெறுமதி இருக்கிறதா என்று கேட்டவர் பலர்.

இன்று செல்வாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கும் பிரமாண்டத்தைப் பார்த்து பலர் மூக்கில் விரலை வைத்துப் பார்க்கிறார்கள்.

இதுவரை காலமும் ஆளவந்தாராக நாமே இருக்கிறோம் என்று எண்ணியவர்கள் இந்த பேரலை தமது போலிக் குடிசைகளை அடித்து போய்விடுமோ என்று அச்சமும் அடையக்கூடியளவுக்கு இதன் எழுச்சி இருக்கிறது.

நேற்று நடைபெற்ற செல்வா பிறந்தநாள் விழா சாதாரண விழா அல்ல..

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புத்தெழுச்சியாகும். எவ்வளவோ சொல்லியும், 24 மணி நேரமும் தன் நேரத்தை தமிழின அறிவு மீட்சிக்காக வழங்கி போராடியவர் செல்வா பாண்டியர் என்பதை உலகம் மெல்ல மெல்ல புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறது.

கூட்டத்தில் பிரபல தொழில் அதிபர். வை.கோவின் இரட்டை வேடத்தை கண்டு அவர் கட்சியையே தூக்கி வீசி வெளியேறிய இராமநாதன் பாண்டியர் கூறும்போது, நாம் கொண்ட இலட்சியத்தில் இருந்து பின்வாங்கக் கூடாது என்று அன்றே நான் செல்வாவிடம் சொன்னபோது அவர் சிரித்தார்.. இருந்து பாருங்கள் என்று சொன்னார்.

தமிழகத்தில் நாளுக்கு ஒரு கட்சியாக அந்தர்பல்டியடிக்கும் சுயநல கும்பலில் சொன்னதை செய்து, ஒரு கொள்கை வழி நின்று, அதற்காக உயிருள்ளவரை போரடி, ஈற்றில் உயிரும் கொடுத்த தமிழன் செல்வா பாண்டியர் என்று புகழாரம் செலுத்தினார்.

செல்வா பாண்டியரின் மனைவியான நிவேதிகா செல்வா பாண்டியர் ஆரம்ப உரையாற்றி கேக் வெட்டி நிகழ்வை மெருகூட்டினார். நாகேஷ் பாண்டியர், செல்லப்பாண்டியர், தங்கராஜ் பாண்டியர், கமலேசு பாண்டியர், கோப்மா கருப்புசாமி ஆகியோரின் தொடர் உரைகள் இடம் பெற்றன.

விழாவில் பாண்டிய ஒளி விருது முப்பரிமாணத்தில் செய்யப்பட்டது சிறப்பாக இருந்தது.

செல்வா பாண்டியர் என்றால் யார்..?

புரட்சிகர எழுத்தாளர் பாவல் சங்கர் எழுதும் தொடர் இப்படிக் கூறுகிறது.. படித்துப் பாருங்கள்..:

………….

நவம்பர் 7… ஒரு தொடர்!

உலகை குலுக்கிய சோவியத் புரட்சியை உந்து சக்தியாக்க.. உலக பாட்டாளி வர்க்கம் இன்று அதை உலகம் முழுவதும் கொண்டாடுகிறது.

தமிழர் தேசிய எழுச்சியை விரைவு படுத்த அந்த எழுச்சிக்கு வித்திட்ட மாவீரன் செல்வாவின் பிறந்த நாளான இன்றைய தினத்தை உலகத் தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடுகின்றனர்!

செல்வா அதற்கான தகுதி உள்ளவரா என சிலர் கேட்கலாம்!

செல்வாவை நான்கு ஆண்டுகளுக்கு மேல் நெருக்கமாக அறிந்தவன் என்ற முறையில் நான் சொல்வேன்…

செல்வா அதற்கு தகுதியானவரே!

இடது சாரி இயக்கங்கள்,
தமிழ் தேசிய இயக்கங்கள்,
சாதிய இயக்கங்கள் என்று பல இயக்கங்களில் பயணித் செல்வா, இறுதியாக தமிழர் நடுவம் கண்டார்!

ஈழப் போராட்ட அனுபவம் அவரின் சிந்தனையை கூர்மைப்படுத்தியது.

“உலகையாளும் வல்லாதிக்கத்தை எதிர்த்து வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய இன எழுச்சிகளில்தான் உள்ளது” என்ற லெனின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்ட செல்வா..
தமிழர் தேசிய எழுச்சிக்காக திட்டமிட்டார்.

தமிழ் மக்களிடையே….
ஜனநாயக உரிமைகளுக்கான,
சுற்றுசூழலையும், மண் வளத்தையும், நீர்வளத்தையும் காப்பதற்கான,
போராட்டங்களில் பங்கெடுப்பதன் மூலம் மக்களை படித்தார்.

இந்த மாபெரும் போராட்டங்கள்…
தமிழ்மக்களிடையே உள்ள சாதி முரண்களால் அடுத்த கட்டத்திற்கு செல்ல மறுப்பதையும் கவனித்தார்.

தமிழ்சாதிகளுக்குள் பகை திட்டமிட்டு வளர்ப்பதையும் கண்டு கொண்டார்.

தமிழர்களின் ஜனநாயக போராட்டங்கள் எழுச்சியடையும் போதெல்லாம், சாதிக்கலவரங்கள் உருவாக்கப் படுவதை புரிந்து கொண்டார்.

திராவிட இயக்கத் தலைவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் இல்லை என்பதையும்… தமிழர் தேசிய இனப் போராட்டத்திற்கு எதிரிகள் அவர்கள்தான் என்பதையும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறார்!

தமிழர்கள் போராட்டம், தமிழர்கள் அல்லாதவர்கள் தலைமையில் எப்படி வெற்றி பெரும்? என கேட்கிறார்.

தேவேந்திர குல இளைஞர்கள் வீறு கொண்டு எழுகின்றனர்.

அந்த இளைஞர்களிடம், சக தமிழ்சாதியினரான முக்குலத்தோருடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாக மோதியதன் பலன் என்ன? என கேட்கிறார்.

தமிழர் ஒற்றுமை என்பது தமிழ்சாதிகளின் ஒற்றுமை என்பதை விதைக்கிறார்.

சாதி கடந்த தமிழர் ஒற்றுமை செக்குமாடென ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்க, தமிழ்சாதிகளின் ஒற்றுமையை சாத்தியமாக்க பல சாதி இளைஞர்கள் தயாராகின்றனர்.

திராவிட இயக்கங்கள் சாதிகளை ஒழிக்க வில்லை, ஒளித்து வைக்க கற்றுக் கொடுத்துள்ளன என்பது விளங்குகிறது.

ஆரியம், நான்கு வர்ணமாக பிரித்தாண்டதை, சற்று மாற்றி,
FC, BC, MBC, SC என திராவிடம் பிரித்தாள்கிறது என்பதையும், தமிழர்களில் ஒரு பகுதியினரை,
ஆதிக்க சாதியினராகவும், ஒரு பகுதியினரை தாழ்த்தப்பட்டவர்காகவும் நம்ப வைத்து மோத வைத்துக்கொண்டிருப்பதையும் செல்வா, விளங்க வைக்கிறார்.

ஆரியமும், திராவிடமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக தமிழர்களை எதிர்த்து குறிபார்த்து நிறுத்தப்பட்டிருப்பதை புரிய வைக்கிறார்.

வரலாற்றை படிக்கும் போக்கு வளர்ந்ததால், திருமலை நாயக்கரின் படைத்தளபதிகள் ராமப்பைய்யன் போன்ற நியோகி வம்ச பிராமணர்கள் என்பது தெரிய வருகிறது.

ஆரியமும் திராவிடமும் ஒரு நாணையத்தின் இரு பக்கமா? என ஆச்சரியம் வருகிறது!

பின் ஏன் ஈவேரா பிராமணர்களை எதிர்த்தார்?

ஈவேராவை ஏன் செல்வா எதிர்த்தார்? என்பதை அடுத்ததாக பார்க்கலாம்.

Related posts