சர்கார் முதல் நாள் ரூ. 66.6 கோடி வசூல்

உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் விஜய் சர்கார் முதல் நாள் ரூ. 66.6 கோடி வசூல் செய்துள்ளது. வசூலில் சர்கார் நான்காவது மிகப்பெரிய தென் இந்திய படமாக உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது. சர்கார் படம் உலகம் முழுவதும் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. வெளியான அனைத்து தியேட்டர்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்று உள்ளது.

பாகுபலி 2 (ரூ 214 கோடி), கபாலி (87.5 கோடி) மற்றும் பாகுபலி (73 கோடி) ஆகியவற்றை அடுத்து தென்னிந்திய திரைப்படங்களில் நான்காவது மிகப்பெரிய துவக்கத்தை இந்த படம் இப்போது பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 1 நாளில் சர்கார் 31.6 கோடி ரூபாயை வசூல் செய்து உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த படம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியானது. சென்னை திரையுலகில் பதிவு செய்யப்பட்ட பல தியேட்டர்களில் இந்த திரைப்படம் வெளியானது. இதில் 70 திரையரங்குகளில் 330 க்கும் மேற்பட்ட காட்சிகளில் 2.41 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது.

கேரளாவில் முந்தைய மதிப்பீட்டின்படி சர்கார் 400 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகி 6.5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. கர்நாடகாவில் 190+ திரையரங்குகளில் வெளியாகி ரூ. 6.1 கோடியை வசூல் செய்து உள்ளது. ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் 300 திரையரங்குகளில் வெளியாகி ரூ. 3.6 கோடி வசூலித்து உள்ளது. மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து 1 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. சர்காரின் மொத்த உள்நாட்டு வசூல் 47.8 கோடியாக உள்ளது.

வெளிநாடுகளில் சர்கார் அமெரிக்காவில் 3.6 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. இங்கிலாந்தில் 1.17 கோடி ரூபாயும், ஆஸ்திரேலியாவில் 1.16 கோடி ரூபாயும், உலகின் பிற பகுதிகளில் இருந்து 13.7 கோடி ரூபாயும் வசூலித்து உள்ளது.

சர்கார் உலகளாவிய மொத்த வசூல் ரூ. 66.9 கோடி ஆகும்.

Related posts