ரியூப் தமிழ் தீபாவளி பத்திரிகையும் ஊழியர்க்கு போனஸ் வழங்கும் நிகழ்வும்.

ரியூப் தமிழ் யாழ்ப்பாணம் பிரிவினர் இன்று தீபாவளி தினத்தன்று ரியூப்தமிழின் தீபாவளி மலரான புதிய பத்திரிகையை வெளியீடு செய்தார்கள்.

இந்தப் பத்திரிகை இதுவரை விளம்பரங்களை தாங்கிய இலவச பத்திரிகையாக வெளி வந்தது. இன்று முதல் 20 ரூபாவுக்கு விற்பனையாகிறது.

மிகவும் காத்திரமான தகவல்களை அச்சேற்றி, ஒவ்வொரு ஆக்கமும் பேணி பாதுகாக்க வேண்டிய தரமான படைப்புக்களை உள்ளடக்கியதாக இந்தப் பத்திரிகை வெளியாகியிருக்கிறது.

தட்டினால் ஒவ்வொரு பக்கமும் துறைபோக படித்தவன் எழுதிய பக்கமாக மின்னவேண்டுமென்ற இலக்கு தெரிவதாக பலர் போற்றியுள்ளனர்.

இன்றைய போட்டி மிக்க ஊடக உலகில் தரமே வெற்றியின் தாரக மந்திரம்..! கனதியாக உள்ளடக்கமே வெற்றிக்கு வித்தாக அமையும்..! மற்றவரால் சொல்ல முடியாத, சொல்ல கற்பனை செய்யவும் இயலாத, விடயங்களை யூனிக்காக கற்பனை செய்வதே நமது வெற்றிக்கு ஒரே வழியாகும் என்ற அடிப்படையில் வெளியாகிறது இந்தப் பத்திரிகை.

யாதொரு மாற்றமும் புதுமைச் சிந்தனையும் இல்லாத கறள்கட்டிய மூளைகளால் வெளியிடப்படும் செக்குமாட்டு பத்திரிகைகளில் இருந்து நாம் வேறுபட வேண்டும்.

இது நமது இலக்கு என்று முழங்குகிறது பத்திரிகை..

அதேவேளை தொழில்களை வளர்க்கவும் இது தூண்டுகோலாக அமைகிறது. பல தொழிலாளர் தமது அன்றாட வாழ்க்கைக்கு வருமானமாகவும் இதை விற்பனை செய்கிறார்கள்.

20 ரூபாய் விற்பனையில் பத்து ரூபா விற்கும் தொழிலாளருக்கு வழங்கப்பட்டு தொழில்கள் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளன.

இவை யாவும் ரியூப் தமிழின் புதிய முகாமையாளராக டிவானி முகுந்தன் என்ற சாதனைப் பெண் பொறுப்பேற்ற பின் வேகமாக நடைபெற்றிருப்பது பெண்கள் உலகம் கவனிக்க வேண்டிய விடயமாகும்.

விளையாட்டு, நிர்வாகம் என்ற பல துறைகளில் சாதனை படைத்த டிவான்யா முகுந்தன் இன்று யாழ் குடாநாட்டில் உள்ள ஊடகம் ஒன்றின் முதலாவது பெண் நிர்வாகியாக பதவியில் அமர்ந்திருப்பது யாழ் குடாநாட்டில் பெண்கள் படைத்துவரும் சாதனைகளை எல்லாம் முறியடித்த சாதனையாகும்.

இவருடைய தலைமைத்துவம் தாயகப் பெண்களுக்கு ஒரு தலை நிமிர்வாகும்.. பெண்கள் உயர் நிர்வாகியாக இருக்கும் காலத்தை உருவாக்க ரியூப்தமிழ் நிர்வாகம் எடுத்துள்ள தங்கக் காலடி இதுவாகும்.

மேலை நாடுகளில் பெண்கள் வர்த்தகத்துறையில் ஈடுபட்டு கோடி கோடியாக பணத்தைப் புரட்ட பல தமிழ் பெண்கள் கழுத்து முறிய கொடிகளை கட்டிக்கொண்டு கோடியாலில் கிடக்கலாமா என்ற கவிஞன் சன்னதமாடியின் கவிவரிகள் இப்போது நினைவுக்கு வருகின்றன.

இந்த இழவுகளை இவள் இன்னும் எத்தனை காலம் சுமக்கப் போகிறாள் என்ற கவிஞர் பழமலை கவிதையும் கண்களில் தெரிகிறது.

இவை கவிதைகள் இப்போது யாழ்ப்பாணத்தில் காலம் மாறுகிறது பெண்கள் புது வேகம் பெறுகிறார்கள்.

இது மட்டுமா நினைத்தாலே இனிக்கிறது.. ஒரு பெண் தலைமைக்கு வந்ததும், இன்று முதல் தடவையாக ரியூப்தமிழின் அனைத்து பணியாளருக்கும் தீபாவளி போனஸ் வழங்கி அசத்தியிருக்கிறார்.

போதுமா இன்னும் வேண்டுமா..? தொடர்கிறது வெற்றி..!

இனி மாதர் தமை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம்..!!

நாளை காலை கவர்னர் மாளிகையில் வைத்து ரியூப்தமிழ் பத்திரிகை அறிமுகம் நடக்க இருக்கிறது. மாலை 16.30 மணிக்கு ரியூப் தமிழ் காரியாலயத்தில் தோழர் செல்வா பாண்டியரின் பிறந்தநாள் விழா.. கேக் வெட்டப்படுகிறது.

ஊழலும் சோம்பேறித்தனமும் இல்லாத புதிய நிர்வாகம் ஒன்றை அமைக்க அனைவரும் ஓடுகிறார்கள்.

18ம் திகதி ரியூப்தமிழ் எப். எம் ஓராண்டு நிறைவுவிழா அன்றைய தினம் ரியூப்தமிழ் புத்தகச் சந்தை அங்குரார்ப்பணம் செய்யப்பட இருக்கிறது.

மாதம் ஒரு புத்தகம் வெளியிடும் புத்தக சந்தை அறிமுகமாகிறது. முதலாவது புத்தகமாக கி.செ.துரை எழுதிய உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்களின் இரண்டாவது பதிப்பு வெளியாகிறது.

தமிழகத்தில் ஆனந்தவிகடன் வெளியீடுகள் போல ரியூப்தமிழின் மாதம் ஒரு புத்தகம் அறிமுகமாக இருக்கிறது.

மிகத்தரமான கடுமையான தேடலில் உருவான, பல ஆண்டு முயற்சி எடுத்து எழுதப்பட்ட தமிழ் படைப்புலகில் வெளிவராத காத்திரமான யூனிக்கான படைப்புக்கள் மாதாமாதம் வெளிவர இருக்கின்றன.

நம்பர் வண் சிந்தனைகள்…!

மலிவு விலையில் தரமான நூல்களால் அறிவு புரட்சி என்னும் நெருப்பேந்தி நடக்க இருக்கிறது ஈழத்தமிழினம்.

எழுபது ஆண்டுகளாக வாய் சொல் வீரர்களாக இருக்கும் நம் தலைவர்களையும் அவர்களை நம்பி பயணித்த செயலற்ற பயணங்களையும் விடுத்து, செயல் மிக்க ஒரு காலத்தை உருவாக்க வேண்டும். அதற்கு இளைஞர்களாகிய நாமே இந்த மண்ணின் முதல்வன் என்று எண்ணி ஒவ்வொரு இளைஞனும் சொந்தக் காலில் களமிறங்கி அரும்பணியாற்றும் பொற்காலம் மலர்வதே இனி நமது விடிவுக்கு ஒரே வழியென இளைஞர்கள் தீபாவளி வாழ்த்து கூறுவது நமது காதுகளில் கேட்கிறது.

உள்நாட்டு வெளிநாட்டு மேய்ப்பர்களால் மேய்க்கப்பட்ட காலம் முடியட்டும்.. இனி புதிய இதுவரை உதயமாகாத புதிய சூரியன் உதிக்கட்டும்..

ஒருவன் நோயில் மடிந்தால் அந்த நோய் கண்டறியப்பட்டு புது வைத்தியம் செய்யப்பட வேண்டும். அதுதான் மீண்டும் அழிவு வராமல் தடுக்கும் முன்னேற்றம். தமிழனை தோற்கடித்த காலவதியான தமிழ் மருந்துகளின் வீரிய இழப்பின் காரணமென்ன என்பதும் ஆய்வு செய்யப்பட்டு புது மருந்து காண புறப்பட்டோம் என்று கொட்டு முரசே.

அலைகள் 06.11.2018 செவ்வாய்

Related posts