தமிழகம் திரும்பிப் பார்க்கிறது இவர்களை..

நடிகர் விஜய் திரைப்படத்திற்கு போஸ்டல் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழகம் இந்த இளைஞர்களை ஆச்சரியமாக திரும்பிப் பார்க்கிறது!

தமிழர் தேசியத் தந்தை என்ற புகழ் பெயருடன் தோழர் செல்வா பாண்டியரின் வண்ணப்படம் தாங்கிய போஸ்டல்கள் பட்டை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

விஜய் படத்தில் தன்னை இழந்து, முகவரி அழிந்தது போதும் தமிழா என்ற செய்தியை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் இந்தத் தன்மான இளைஞர்கள் பதிவு செய்கிறார்கள்.

நாளை புகழ்மிகு தென்காசியில் செல்வா பாண்டியர் புகழ் பாடும் எழுச்சிவிழா.. ஏற்றமிகு பிறந்த நாள் விழா.. தமிழர் தேசிய எழுச்சி நாள்.

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் செல்வா பாண்டியரின் உருவப்படத்தை தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற வீரசிங்கம் மண்டபத்தில் திறந்து வைக்க, மறுநாளே யாழ்ப்பாணத்தில் தமிழர் நடுவ காரியாலயம் திறந்து வைக்கப்பட உறங்கிக் கிடந்த தமிழகம் ஓரக்கண்ணால் பார்த்தது.

செல்வா மரணித்துவிட்டானே.. இனி என்ன என்று கொறட்டை விட்டு தூங்கிய கூட்டம் திரும்பிப் பார்த்தது. ஆட்களை ஏவி யாழ். காரியாலய கண்ணாடிகளை தன் அடியாட்களை வைத்து உடைத்தது.

அன்று பற்றிய பொறி இன்று தமிழகத்தில் அறிவுத்தீயாக பற்றியெரிகிறது. செல்வா என்ற புகழ் மனிதன் வாழ்ந்த காலத்து இலட்சியங்கள் அவன் இருந்த நாட்களை விட இன்றுதான் பட்டி தொட்டி எங்கும் மின்னலாய் வெட்டி முழங்குகிறது.

ஒரு நாடா..? இல்லை இரு நாடா..? இல்லையடா தமிழா இல்லை.. இன்று உலகம் முழுவதும் ஒரு தமிழனுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறதென்றால் அதில் ஏதோ இருக்க வேண்டும்..!

எந்தத் தமிழகத் தலைவனிடமும் இல்லாத ஒன்று இவனிடம் இருந்திருக்க வேண்டும்.. அந்தப் பொறிதான் என்ன.. அறிய எதிரிகள் ஆலாய் பறக்கிறார்கள்.

அட இப்படியொரு மனிதன் நம்மிடையே வாழ்ந்து போயிருக்கிறானா என்று தமிழக இளைஞர்கள் இப்போதுதான் அவன் புகழையே திரும்பிப் பார்க்கிறார்கள்.

சங்க காலத்திற்கு பின்னர் இப்படியொரு மானத்தமிழன் தமிழகத்தில் பிறந்து உயிர் கொடுத்து சொன்ன செய்தி என்ன.. அறியத் துடிக்கிறது இன்றைய இளையோர் உலகம்.

நாளை செல்வா பிறந்த நாள் யாழ்ப்பாணத்தில்.. பர்மாவில்.. மலேசியாவில்.. சிங்கப்பூரில்.. இந்தோனீசியாவில்.. தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும்.. டென்மார்க்கில்.. குவைத்… கட்டார்.. டுபாய்.. தென்னாபிரிக்கா.. முதல் நைஜீரியா வரை செல்வா பாண்டியர் புகழ் மகுடம் சூட்டப்படுகிறது.

இலங்கையில் இருந்து தமிழர் நடுவ முக்கிய பிரதிநிதி மலேசியா சென்றுள்ளார், சிங்கப்பூர் பிரதிநிதி தமிழகம் சென்றுள்ளார் என்று உலகம் முழுவதும் உறவுகளாகிறோம்.

உலகத் தமிழரை உயிர் கொடுத்து ஒன்றிணைத்த நம் செல்வா புகழ் வாழ்க என்ற வாழத்தொலிகள் வான் பிளக்கின்றன.

பிறந்தால் இவன் போல பிறக்க வேண்டும்..
வாழ்ந்தால் இவன் போல வாழ வேண்டும்..
மேடையில் பேசினால் இவன் போல முழங்க வேண்டும்..
மடிந்தாலும் இவன் போல உலகம் போற்ற வேண்டும்..

நவம்பர்7
தமிழர் தேசிய எழுச்சி நாள்
களப் பணியில் தமிழர் நடுவம்

#விருதுநகர் மாவட்டம் ,சுந்தரகுடும்பன் பட்டி
செட்டுடையான்பட்டி,
தனிப்புலி, நாயக்கன்பட்டி,
சிவந்திபட்டி,
கோட்டைபட்டி,
திருவிருந்தான்பட்டி,
கோல்வார்பட்டி,
மணியம்பட்டி,
குலசேகரபுரம்,
சந்தையூர் ,
வேப்பிலைபட்டி,
முத்துலிங்காபுரம்,
கங்கம்மா கோவில்,
நடுவப்பட்டி,
நடுவப்பட்டி ரயில்வே கேட்
நடுவப்பட்டி
டோல்கேட் ,சாத்தூர்
சாத்தூர் சிவகாசி பாலம்,
வீரபாண்டியபுரம்,
சின்னக்காமன் பட்டி,
சாத்தூர், பேருந்துஷநிலையம்,
சாத்தூர் பாலம்,
சாத்தூர்
ஆவின் பாலகம்,
ரயில்வே ஸ்டேசன்,
இருக்கன்குடி ரோடு,
அணைக்கரைபட்டி,
கொல்லபட்டி விலக்கு,
இருக்கன்குடி,
சிறுக்குளம்,
சொக்கலிங்கபுரம்,
ஆலம்பட்டி ,
நல்லான்செட்டி பட்டி
பிறவிபட்டி,
அப்பநேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தமிழர் நடுவத்தின் தோழர்கள் போஸ்டர் ஒட்டும் பணியில்….

Related posts