உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் நாளை தமிழகத்தில் வெளியீடு

டென்மார்க் எழுத்தாளர் கி.செ.துரையால் எழுதப்பட்ட உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகம் நாளை தமிழகம் தென்காசியில் வெளியீடு செய்து வைக்கப்பட இருக்கிறது.

ஏற்கெனவே யாழ்ப்பாணம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இடம் பெற்ற வெளியீட்டு விழா இப்போது தமிழகத்தில் நடைபெற இருக்கிறது.

தமிழகம் தென்காசியில் உள்ள புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள கோட்டல் அருண் வெங்கடேஸ் விழா மண்டபத்தில் மாலை 15.00 மணிக்கு இந்த வெற்றி நிகழ்வு நடைபெற இருக்கிறது.

இந்த நூல் தோழர் செல்வா பாண்டியருக்கு சமர்ப்பணமாக வெளியாகி, முதலாவது பதிப்பு முடிவடைந்து அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது பதிப்பு வெளியாக இருக்கும் நிலையில் இந்த ஏற்றமிகு வெளியீட்டு விழா நடை பெறுகிறது.

வெறும் அறிவற்ற உணர்வால் இணையாமல்..
அறிவு கலந்த உணர்வோடு தழிழர் ஒன்றிணையும் திருநாளில் நூல் வெளியாவது அரும் பெரும் பாக்கியமன்றோ..?

இப்படியொரு நூலை எழுத வேண்டும், நம் தமிழ் இளைஞர்களை விளையாட்டுத் துறை நோக்கி திசை திருப்ப வேண்டும் என்பது செல்வா பாண்டியரின் அயராத கனவாக இருந்தது. இன்று அவர் பிறந்தநாளில் வாய்த்தது.

இப்போது இந்த நூலானது அவர் இல்லாவிட்டாலும் அவருடைய பிறந்தநாளன்று வெளிவருவது மிகப்பெரிய விடயமாகும்.

இலங்கைத் தமிழன் ஒருவன் எழுதிய நூலை அவன் களத்தில் இல்லாமலே தமிழக இளைஞர்கள் வெளியிடுகிறார்கள் என்றால் அது சாதாரண விடயமல்ல. ஈழத் தமிழர் எழுத்து வரலாற்றில் என்றுமில்லாத சிறப்பல்லவா..?

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல இதே பாணியில் இந்த நூலை வெளியிட யாழ்ப்பாணத்தில் நம் மானத்ததமிழ் இளைஞர்கள் களமிறங்கியிருக்கிறார்கள் என்றால் அது சரித்திர சாதனையல்லவா..?

நாளை தமிழகத்தில் மாபெரும் சிந்தனையாளர் பேராசிரியர் கமலேசு பாண்டியர் இந்த நூலைப்பற்றி விமர்சன உரையாற்ற இருப்பது இன்னொரு பெருமையாகும்.

நேற்று வரை எதிரி எம்மை பிரித்தழித்தான் இனி நம் உறவால் எதிரி சிதறி வீழ்வான். இந்த நாளில் உலகம் முழுவதும் தமிழ் உறவுகளாகிறோம்..

உயிர் கொடுத்த பாண்டிய நிலா வானில் பார்த்துக் கொண்டிருக்கிறது..

நிலவில் கால் வைப்போம்..
உலகில் எம் பேர் பொறிப்போம்..
தமிழ் வளர்த்த மதுரையில்
மறுபடியும் பாண்டிய முத்திரை குத்தப்படுகிறது..
தமிழா தூங்காதே திரும்பிப்பார்.. ஓடிவா..
இது
தென்காசிபட்டண குதிரை..

அலைகள் 06.11.2018

Related posts