சுமந்திரன் ஜனாதிபதியை திட்டியதை ஏற்க முடியாது

ஜனாதிபதியை சுமந்திரன் ஒருமையில் விளித்து பேசியது தவறு, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்.கந்தரோடையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் சுமந்திரன் உரையாற்றும் போது ஜனாதிபதியை ஒருமையில் விளித்து உரையாற்றி இருந்தார்.

எது எப்படி இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதியை அவ்வாறு விளித்து இருக்கக் கூடாது.

சரியோ, பிழையோ அவர் நாட்டின் ஜனாதிபதி. அரசியல் ரீதியாக அவருடன் கருத்து மோதல் ஏற்படலாம். ஆனால் கீழ்த்தரனமான வார்த்தைகளால் பேசியதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.

Related posts