யாழ்ப்பாணத்தில் விஜய் நடித்த சர்க்கார் சரவெடி

யாழ்ப்பாணத்தில் இப்போது எல்லா திரையரங்குகளிலும் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிக வருமானம் வருவதால் தீபாவளிக்கு வந்த மற்றைய படங்களுக்கு திரையரங்குகள் இல்லாமல் போய்விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அனைத்து திரையரங்குகளும் ரசிகர்கள் அலை மோதுகிறார்கள், முன்னரே பதிவு செய்து எடுத்ததால் பிலிம் சிட்டியில் 500 ரூபா டிக்கட்டுடன் பார்க்க முடிந்தாக ரசிகர் ஒருவர் கூறினார். நுழைவு சீட்டுக்கள் விலை கூட்டி விற்கப்பட்டதா என்ற கேள்விக்கு அந்த இளைஞரால் பதிலளிக்க முடியவில்லை. பாலாபிஷேகம், பியர் அபிஷேகங்கள் அதிகம் இல்லை என்று கூறிய அவர் நேற்று விஜய் ரசிகர் மன்றம் மக்களுக்கு தென்னம் கன்றுகளை அன்பளிப்பாக வழங்கியதாக தெரிவிக்கிறார். படம் எப்படியென்று கேட்டபோது சரவெடி என்றார். மேலும் அரசியல் காட்சிகளும் கருத்துக்களும் வருவதால் பொழுது போகிறது என்கிறார். ஆனால் படத்தின் பிற்பகுதி போரடிக்கிறது என்று தமிழகத்தில்…

அயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை

அயோத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சராயு நதிக்கரையில் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கொண்டாடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 3 இலட்சம் விளக்குகளை ஏற்றியது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து நிமிட இடைவெளியில்,3,01,152 விளக்குகள் ஏற்றப்பட்டன. இது புதிய உலக சாதனை என்று கின்னஸ் அமைப்பின் அதிகாரி ரிஷி நாத், யோகி ஆதித்யநாத் முன்னிலையில் அறிவித்தார். இதற்கு முன்பு, அரியானாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 1,50,009 விளக்குகள் ஏற்ற்பட்டதே சாதனையாக இருந்தது என்றும் புதிய சாதனை சிறப்பு மிக்கது எனவும் ரிஷி நாத் குறிப்பிட்டார்.

சுமந்திரன் ஜனாதிபதியை திட்டியதை ஏற்க முடியாது

ஜனாதிபதியை சுமந்திரன் ஒருமையில் விளித்து பேசியது தவறு, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்.கந்தரோடையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் சுமந்திரன் உரையாற்றும் போது ஜனாதிபதியை ஒருமையில் விளித்து உரையாற்றி இருந்தார். எது எப்படி இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதியை அவ்வாறு விளித்து இருக்கக் கூடாது. சரியோ, பிழையோ அவர் நாட்டின் ஜனாதிபதி. அரசியல் ரீதியாக அவருடன் கருத்து மோதல் ஏற்படலாம். ஆனால் கீழ்த்தரனமான வார்த்தைகளால் பேசியதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையில் தீபாவளி விழா

நாட்டில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட திபாவளி விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த விசேட தீபாவளி விழா ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி தீபாவளி என்பது சமூக நீதி நிலைநாட்டபட்ட தினமாகும் எனக் குறிப்பிட்டார். நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கப் பெறவேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியமும் நல்லிணக்கமும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்த விழா பல்வேறு கலாசார அம்சங்களைக் கொண்டிருந்ததோடு ஜனாதிபதி அனைத்து இந்த பக்தர்களுக்கும்…

எம்மை கோள் மூட்டி எவராலும் பிரிக்க முடியாது

மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணியை கோள் மூட்டியோ மூட்டிவிட்டோ பிரிக்க ஒரு போதும் இடமளிக்கப்​போவதில்லை எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரவித்தார். புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ் முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்தது போன்ற பாரதூரமான முடிவொன்றை எடுத்திருக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார். புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றுகையிலே அவ் இவ்வாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட அவர், மூன்று மாதமும் 10 நாட்கள் நீடித்த ரணில் விக்கிரமசிங்கவின் அரசை தோற்கடித்து மீண்டும் ஒன்றிணைவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த வரலாற்று முக்கியம் வாய்ந்த முடிவை நாம் மதிக்கின்றோம். நாம் பிரிந்திருந்தோம். மக்களின் முடிவை ஏற்று ஜனாதிபதி நாட்டுக்காக இந்த பாரதூரமான முக்கிய முடிவை…

ரியூப் தமிழ் தீபாவளி பத்திரிகையும் ஊழியர்க்கு போனஸ் வழங்கும் நிகழ்வும்.

ரியூப் தமிழ் யாழ்ப்பாணம் பிரிவினர் இன்று தீபாவளி தினத்தன்று ரியூப்தமிழின் தீபாவளி மலரான புதிய பத்திரிகையை வெளியீடு செய்தார்கள். இந்தப் பத்திரிகை இதுவரை விளம்பரங்களை தாங்கிய இலவச பத்திரிகையாக வெளி வந்தது. இன்று முதல் 20 ரூபாவுக்கு விற்பனையாகிறது. மிகவும் காத்திரமான தகவல்களை அச்சேற்றி, ஒவ்வொரு ஆக்கமும் பேணி பாதுகாக்க வேண்டிய தரமான படைப்புக்களை உள்ளடக்கியதாக இந்தப் பத்திரிகை வெளியாகியிருக்கிறது. தட்டினால் ஒவ்வொரு பக்கமும் துறைபோக படித்தவன் எழுதிய பக்கமாக மின்னவேண்டுமென்ற இலக்கு தெரிவதாக பலர் போற்றியுள்ளனர். இன்றைய போட்டி மிக்க ஊடக உலகில் தரமே வெற்றியின் தாரக மந்திரம்..! கனதியாக உள்ளடக்கமே வெற்றிக்கு வித்தாக அமையும்..! மற்றவரால் சொல்ல முடியாத, சொல்ல கற்பனை செய்யவும் இயலாத, விடயங்களை யூனிக்காக கற்பனை செய்வதே நமது வெற்றிக்கு ஒரே வழியாகும் என்ற அடிப்படையில் வெளியாகிறது இந்தப் பத்திரிகை. யாதொரு…

உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் நாளை தமிழகத்தில் வெளியீடு

டென்மார்க் எழுத்தாளர் கி.செ.துரையால் எழுதப்பட்ட உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகம் நாளை தமிழகம் தென்காசியில் வெளியீடு செய்து வைக்கப்பட இருக்கிறது. ஏற்கெனவே யாழ்ப்பாணம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இடம் பெற்ற வெளியீட்டு விழா இப்போது தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. தமிழகம் தென்காசியில் உள்ள புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள கோட்டல் அருண் வெங்கடேஸ் விழா மண்டபத்தில் மாலை 15.00 மணிக்கு இந்த வெற்றி நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நூல் தோழர் செல்வா பாண்டியருக்கு சமர்ப்பணமாக வெளியாகி, முதலாவது பதிப்பு முடிவடைந்து அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது பதிப்பு வெளியாக இருக்கும் நிலையில் இந்த ஏற்றமிகு வெளியீட்டு விழா நடை பெறுகிறது. வெறும் அறிவற்ற உணர்வால் இணையாமல்.. அறிவு கலந்த உணர்வோடு தழிழர் ஒன்றிணையும் திருநாளில் நூல் வெளியாவது அரும்…

தமிழகம் திரும்பிப் பார்க்கிறது இவர்களை..

நடிகர் விஜய் திரைப்படத்திற்கு போஸ்டல் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழகம் இந்த இளைஞர்களை ஆச்சரியமாக திரும்பிப் பார்க்கிறது! தமிழர் தேசியத் தந்தை என்ற புகழ் பெயருடன் தோழர் செல்வா பாண்டியரின் வண்ணப்படம் தாங்கிய போஸ்டல்கள் பட்டை கிளப்பிக் கொண்டிருக்கின்றன. விஜய் படத்தில் தன்னை இழந்து, முகவரி அழிந்தது போதும் தமிழா என்ற செய்தியை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் இந்தத் தன்மான இளைஞர்கள் பதிவு செய்கிறார்கள். நாளை புகழ்மிகு தென்காசியில் செல்வா பாண்டியர் புகழ் பாடும் எழுச்சிவிழா.. ஏற்றமிகு பிறந்த நாள் விழா.. தமிழர் தேசிய எழுச்சி நாள். இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் செல்வா பாண்டியரின் உருவப்படத்தை தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற வீரசிங்கம் மண்டபத்தில் திறந்து வைக்க, மறுநாளே யாழ்ப்பாணத்தில் தமிழர் நடுவ காரியாலயம் திறந்து வைக்கப்பட உறங்கிக் கிடந்த தமிழகம் ஓரக்கண்ணால் பார்த்தது.…