எனக்கு பிடித்த கதாநாயகர்கள் சூர்யா, மாதவன், அஜித்

சூர்யா, அஜித், மாதவன் ஆகிய 3 பேரும் எனக்கு சவுகரியமான கதாநாயகர்கள்” என்று நடிகை ஜோதிகா கூறினார்.

ஜோதிகா கதாநாயகியாக நடித்து, ராதாமோகன் டைரக்‌ஷனில் உருவாகியிருக்கும் புதிய படம், ‘காற்றின் மொழி’. இந்த படக்குழுவினர் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது கதாநாயகி ஜோதிகா கூறியதாவது:-

நான் கதாநாயகியாக நடித்து கொண்டிருந்த காலத்தில் எனக்கு சவுகரியமான கதாநாயகர்களாக சூர்யா, அஜித், மாதவன் ஆகிய 3 பேரும் இருந்தனர். இவர்களுடன் நடிப்பதை சவுகரியமாக உணர்ந்தேன்.

‘காற்றின் மொழி’ படம் கதாநாயகியை சுற்றிவரும் கதை. வேலைக்கு போகும் பெண்ணை பற்றிய கதை. பெண்மையை உயர்த்தி பிடிக்கிற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.

என் சினிமா வாழ்க்கையில் ‘காற்றின் மொழி’ மிக முக்கியமான படமாக இருக்கும். இதில் நடிப்பதற்கு நிறைய சந்தர்ப்பம் உள்ள கதை. இந்த கதையில் பிடித்த அம்சமே ஒரு கணவன்-மனைவி இடையேயான உறவு தான்.

என்னை பார்க்கிறவர்களெல்லாம் ‘குஷி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக நடிப்பேன்.

‘காற்றின் மொழி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது எனக்கு கிடைக்கும் என்று இங்கே பேசியவர்கள் கூறினார்கள். அத்தனை பேருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருமணத்துக்கு பின் நான் நடித்து வெளிவந்த படங்களில் முக்கியமான படமாக ‘36 வயதினிலே’ இருந்தது. ‘காற்றின் மொழி’ அதையும் தாண்டும். இவ்வாறு ஜோதிகா கூறினார்.

‘காற்றின் மொழி’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த மனோபாலா பேசும்போது, “ஜோதிகா தமிழ் பட உலகுக்கு கிடைத்த பொக்கிஷம். முகத்தில் இத்தனை உணர்ச்சிகளை காட்டக்கூடிய ஒரே நடிகை ஜோதிகா தான்” என்றார்.

படத்தின் டைரக்டர் ராதாமோகன், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, இசையமைப்பாளர் காசிப், ஆர்ட் டைரக்டர் கதிர், நடிகர்கள் விதார்த், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் பேசினார்கள்.

சென்னையில் நேற்று தமிழக கவர்னர் நடத்தி வைத்த மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கான திருமண விழாவுக்கு 53 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 2 ஜோடியினர் திருமணத்தில் பங்கேற்கவில்லை. இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் பா.சிம்மச்சந்திரன் கூறியதாவது:-

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த விநாயகமூர்த்தி மற்றும் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த வித்யா ஜோடி நேற்று இரவு தாங்கள் சென்னைக்கு வருவதற்கான ரெயிலை தவற விட்டதால், திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இதே போன்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த அறிவழகன்-மாரியம்மாள் ஜோடியும் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு போன் செய்தால், போனை எடுக்கவில்லை.

இவர்களுக்கு அடுத்த ஆண்டு நடத்தப்படும் இலவச திருமணத்தின் போது அறக்கட்டளை சார்பில் திருமணம் நடத்தப்படும். இல்லை, அவர்கள் அதற்கு முன் தாங்களே திருமணம் செய்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts