சங்கீத இசையரசிகளும் அவர்கள் கணவன்களும் : கி.செ.துரை ஆற்றிய உரையில் இருந்து..

டென்மார்க் சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரியின் 20 வது ஆண்டு விழாவில் பேசிய ஆசிரியர் கி.செ.துரை சங்கீத இசையரசிகளின் கணவன்மாருடைய 1500 வருட கால பாத்திர வளர்ச்சி பற்றிய கருத்தொன்றை கூறினார். தமிழில் சங்கீத மேதைகளாக இருந்த பெண்களில் முதல் பெரும் இசையரசியாக நாம் காரைக்கால் அம்மையாரையே காண்கிறோம். அவரைப் போல தெய்வமாக மதிக்கப்படாவிட்டாலும் சென்ற நூற்றாண்டில் ஐ.நா சபைவரை தன் இசையால் தொட்டவர் இசையரசி எம்.எஸ் சுப்புலட்சுமியாகும். கரைக்கால் அம்மையாரின் கணவனான தனதத்தன் முதல் எம்.எஸ் சுப்புலட்சுமியின் கணவரான சதாசிவ ஐயர் வரை சுமார் 1500 வருடகால சங்கீத மேதைகளின் கணவன் பாத்திரங்களை எடுத்தால் பெண்களின் சங்கீதத்தை ஏற்றுக் கொள்ளும் ஆண்களின் போக்கையும், ஆண்கள் உலகத்தால் பெண்கள் சந்தித்த அனுபவங்களையும் நாம் தெளிவாகவே காண முடியும். காரைக்கால் அம்மையார் பதிகங்களை பாடியவர் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தை பாடியவரும்…

எனக்கு பிடித்த கதாநாயகர்கள் சூர்யா, மாதவன், அஜித்

சூர்யா, அஜித், மாதவன் ஆகிய 3 பேரும் எனக்கு சவுகரியமான கதாநாயகர்கள்” என்று நடிகை ஜோதிகா கூறினார். ஜோதிகா கதாநாயகியாக நடித்து, ராதாமோகன் டைரக்‌ஷனில் உருவாகியிருக்கும் புதிய படம், ‘காற்றின் மொழி’. இந்த படக்குழுவினர் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது கதாநாயகி ஜோதிகா கூறியதாவது:- நான் கதாநாயகியாக நடித்து கொண்டிருந்த காலத்தில் எனக்கு சவுகரியமான கதாநாயகர்களாக சூர்யா, அஜித், மாதவன் ஆகிய 3 பேரும் இருந்தனர். இவர்களுடன் நடிப்பதை சவுகரியமாக உணர்ந்தேன். ‘காற்றின் மொழி’ படம் கதாநாயகியை சுற்றிவரும் கதை. வேலைக்கு போகும் பெண்ணை பற்றிய கதை. பெண்மையை உயர்த்தி பிடிக்கிற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். என் சினிமா வாழ்க்கையில் ‘காற்றின் மொழி’ மிக முக்கியமான படமாக இருக்கும். இதில் நடிப்பதற்கு நிறைய சந்தர்ப்பம் உள்ள கதை. இந்த…

ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது

ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது ஆனலைன் விற்பனையில் ஒவ்வொரு ஐந்து பொருட்களுக்கும் ஒன்று போலியாக உள்ளது என கூறப்படுகிறது இதில் அதிக்மமானவை ஒப்பனை மற்றும் வாசனை திரவியங்களுக்கான பொருட்கள் ஆகும். ஆன்லைன் விற்பனை தொடர்பாக லோக்கல் சர்க்கிள் என்ற இணையதளம் சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆன் லைன் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 6 மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருள்கள் தங்களிடம் விற்கப்பட்டதாக 20 சதவீத வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். எந்தெந்த ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவில் போலி பொருட்களை விற்பனை செய்கின்றன என்ற கேள்விக்கு ஸ்னாப்டீல் என 37 சதவிகிதம் பேரும், பிளிப்கார்ட் என 22 சதவிகிதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். 20 சதவிகிதம் பேர்…

அதிக விலைக்கு விற்கப்படும் ‘சர்கார்’ டிக்கெட்டுகள்

தொடர்ச்சியாக அதிக விலைக்கு ‘சர்கார்’ டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருவதால், தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறது. எப்போதுமே விஜய் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். முதல் நாள் டிக்கெட்டுகளுக்கு பலத்த போட்டி நிலவும். ஆனால், ‘சர்கார்’ படத்துக்கு விஜய்யின் முந்தைய படங்களை விட எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. காரணம், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி 3-வது முறையாக இணைந்திருப்பது, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதே. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு அமைந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள் விஜய்யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து கதை சர்ச்சையிலும் ‘சர்கார்’ சிக்கியது. அனைத்து பிரச்சினைகளையும் கடந்து நாளை (நவம்பர் 6) வெளியாகவுள்ளது. தற்போது ‘சர்கார்’ அதிக டிக்கெட் விலை விற்பனை சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் அதிகாலை…

உலகைச் சுற்றிவரப்போகும் டைட்டானிக்- 2

டைட்டானிக்-2 கப்பல் தனது பயணத்தை எப்போது தொடங்கும் என்று உலகமெங்கும் எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், 2022-ல் அந்தப் பிரம்மாண்ட கப்பல் இயங்கத் தொடங்கும் என்று அறிவித்திருக்கிறது ஆஸ்திரேலிய நிறுவனமான ப்ளூ ஸ்டார் லைன். 1912-ல் இரண்டாயிரம் பயணிகளோடு சவுத்தாம்ப்டனிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியே நியூயார்க் செல்லும் வழியில் பனிப்பாறைகளில் மோதி மூழ்கியது டைட்டானிக். பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதே வடிவத்தில் அந்தக் கப்பலைக் கட்டும் முயற்சியில் இறங்கியது ப்ளூ ஸ்டார் லைன். ஒன்பது அடுக்குகள், 835 கேபின்களோடு 2,435 பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் இந்தக் கப்பல் தயாராகிவருகிறது. முதல் பயணம்: சவுத்தாம்ப்டன் டு நியூயார்க் தான்! டைட்டானிக்-1-க்கு ஏற்பட்ட கதியைத் தவிர்க்கும் வகையில், ரேடார் உள்ளிட்ட சகலவிதமான நவீன வசதிகளோடு அதிகளவில் உயிர் காக்கும் படகுகளும் இணைக்கப்பட்டுள்ளன!

இனி தொண்டமானின் திருவிளையாடல் பருவம்..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்கப் போவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் தம்மிடமும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷுடனும் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திடமும் தொழிலாளர்களிடமும் கருத்துக்களைப் பெற்று தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இலங்கையில் பெருந்தொட்டத் தொழிற்துறையைச் சார்ந்து 30 இலட்சம் மக்கள் உள்ளதுடன் இது இலங்கையில் முழு சனத்தொகையில் 10 வீதமாகவுள்ளது. அண்மைக்காலமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா அடிப்படைச்…

என்னைத் துரோகி என்று சொல்வது ஒன்றும் புதிதல்ல

புதிய பிரதியமைச்சர் வியாழேந்திரன் நேற்று பத்தரமுல்லையில் செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இங்கு மேலும் விளக்கமளித்த அவர், என்னைத் துரோகி என்று சொல்வது ஒன்றும் புதிதல்ல. 2015 ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் எம்மைத் துரோகியாகத்தான் பார்க்கிறார்கள். கட்சியின் முக்கியமான நிகழ்வுகளிலும் எம்மை புறக்கணித்தே வைக்கின்றார்கள். ஒட்டுக் குழுவென்றும் ஆயுதக்குழுவென்றும் எம்மோடு கவனமாக நடந்துகொள்ள வேண்டுமென தாம் நடத்தும் கூட்டங்களில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக கூறிவருகின்றார்கள். என்னைத் துரோகியென்பவர்கள் தத்தமது மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கட்டும். அப்போது யார் துரோகியென்பது புரியும். எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு தமது மக்களுக்கு எதுவும் செய்யாது வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து பிரதமரைப் பாதுகாப்புதான் அவர்கள் செய்த தியாகமா? இதைவிட ஆளும் கட்சியிலிருந்துகொண்டு மக்களுக்கு அபிவிருத்திகளைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியுமே. உரிமை உரிமையெனப் பேசிக்கொண்டு பசுத்தோல் போர்த்திய புலிகளாகவே அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். தமது காரியங்களை…

நான் ஒரு சதம் கூட மஹிந்த தரப்பிடம் வாங்கவில்லை!

கிழக்கு மாகாணத்திற்கு என அபிவிருத்தி அமைச்சு ஒன்று தேவை என பாராளுமன்றத்தில் பல தடவைகள் எடுத்துக் கூறியதாக பிரதி அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வட கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து கதைத்த போது, ஜனாதிபதி, அபிவிருத்தி வேண்டும் என்றால் பொறுப்பெடுங்கள் என்று கூறியதாகவும் அதற்கு இணங்கவே ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் பதவி ஏற்றதாகவும் பிரதி அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் ஒரு சதம் கூட மஹிந்த தரப்பிடம் இருந்து வாங்கவில்லை எனவும் பிரதி அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் பிரதேச அபிவிருத்தி (கிழக்கு மாகாண அபிவிருத்தி) பிரதி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து இன்று (05) அவரது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

அற்ற நீர் குளத்து அறு நீர் பறைவகளாயின முஸ்லீம் கட்சிகள் இரண்டு

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இருவர், நேற்று (04) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் கலந்துரையாடியுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோரே ஜனாதிபதியை சந்தித்துப் கலந்துரையாடியவர்கள். இவர்கள் இருவரும் கலைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சந்தித்துப் கலந்துரையாடினார். ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை அளிப்பதாக றிசாட் பதியுதீன் தெரிவித்திருந்த நிலையில், அவருடைய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததோடு, புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சுப் பதவியைப் பெறுவதற்கும் முயற்சித்ததாக ஊடகங்களில்…

ஏதோ என்னால் முடிந்தது 14ம் திகதி கூடுகிறது பாராளுமன்றம்

பாராளுமன்றம் நவம்பர் 14 ஆம் திகதி கூடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார். இதற்கான அரச வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவிநீக்கம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார். இதற்கு அடுத்த நாள், ஒக்டோபர் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நவம்பர் 16 ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை முடக்கிவைப்பதாகவும் அறிவித்தார். ஆனால், உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டி மஹிந்த தனது அரசு மீதான நம்பிக்கையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிவந்தன. ஆங்காங்கே இது தொடர்பான போராட்டங்களும் நடந்து வந்தன. இந்த நிலையில் பாராளுமன்றம் மீண்டும் நவம்பர் 5 ஆம் திகதி கூட்டப்படலாம் என்ற பேச்சுகள் அடிப்பட்டன. அதற்குப் பிறகு, பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய…