இன்று இலங்கை தீவின் காட்சிகளும் கூத்துக்களும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தோற்றுவித்துள்ள அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும், அரசாங்கத்தின் ஒற்றுமையினை உறுதிப்படுத்தும் விதமாகவும் மக்கள் பேரணியொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறும் இப் பேரணியானது பாராளுமன்ற வளாகத்தில் நாளை நண்பகல் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் குறித்த மக்கள் பேரணியானது எவ்விதத்திலும், எவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தாது எனவும், ஆட்சி மாற்றத்தின் மகிழ்வினை மாத்திரம் வெளிப்படுத்த அனைவரும் ஒன்று கூடுகின்றனர் எனவும் பொதுஜன பெரமுனவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

—————-

ஐக்கிய தேசியக் கட்சியினரால் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என தெரிவித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், எதிர் தரப்பினரின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் பலம் தற்போது எம்மிடம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் சபாநாயகருக்கு தன் அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை ஒருபோதும் கூட்ட முடியாது எனவும் மேற்குலக நாடுகளின் தேவைகளுக்காக புதிய அரசியலமைப்பு ஒரு போதும் உருவாகாது. அவ்வாறு புதிய அரசியலமைப்பு உருவாக வேண்டுமாயின் அது நாட்டை பிளவுபடுத்தாத அரசியலமைப்பாக மாத்திரமே உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்ரைத்த போதே அவர் மேற்கண்மடவாறு குறிப்பிட்டார்.

————-

முன்னாள் அமைச்சர்கள் பலர் இன்று கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தருந்தனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, காமினி ஜயவிக்ரம பெரோ, சம்பிக்க ரணவக்க, தயா கமகே, லகீ ஜயவர்தன, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலில் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று மாநாயக்க தேரர்களின் ஆசிரிவாதங்களை பெற்று கொண்டதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சூழ்சிகார அரசு எமக்கு வேண்டாம், பின்கதவு பிரதமர் எமக்கு வேண்டாம், கொலைகார ஆட்சி எமக்கு வேண்டாம், பொய்யன் எமக்கு வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேஷம் எழுப்பினர்.

Related posts