கலோனியன் தீவு பிரான்சுடன் இணைந்திருக்க முடிவு

அவுஸ்திரேலியாவின் கிழக்கே சுமார் 1200 கி.மீ தொலைவில் பசுபிக் சமுத்திரத்தில் இருக்கிறது கலோனியன் என்கின்ற தீவு. இந்தத் தீவு பிரான்சின் காலனித்துவ தீவாகும். இங்குள்ள மக்கள் பிரான்சிடமிருந்து பிரிந்து செல்ல சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியுள்ளது.

மொத்தம் 284 வாக்களிப்பு நிலையங்களில் 175.000 பேர் வாக்களித்தனர்.

இந்தத் தீவில் பிறந்தவர்கள் பிரிந்து செல்ல விரும்புகிறார்கள். போதும் போதும் பிரான்சின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தது இனி நாம் சுதந்திரமாக வாழப்போகிறோம் என்கிறார்கள்.

ஆனால் பிரான்சில் இருந்து குடியேறியோர் இதை எதிர்க்கிறார்கள். காரணம் சுதந்திரமாக போனால் பிரான்சின் உதவி இல்லாமல் போய்விடும் என்றும், தீவு சொந்தக்காலில் நிற்கும் பலமுள்ளது அல்ல என்றும் கூறுகிறார்கள்.

கருத்துக்கணிப்பின்படி பிரான்சிய ஆதரவு அணியே வெல்லும் என்கிறார்கள்.

சற்று முன் முடிவு வெளியாகியிருக்கிறது. மொத்தம் 95 வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 56.8 வீதமானவர்கள் பிரிந்த செல்வதில்லை என்ற முடிவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்தத் தீவானது 1853ல் இருந்து பிரஞ்சு காலனியாக இருந்து வருகிறது. வருடம் தோறும் பத்து மில்லியன் டேனிஸ் குறோணர்கள் உதவியாக பிரான்சிய அரசால் வழங்கப்படுகிறது. தனியாக பிரிந்தால் இந்தப் பணம் கிடைக்காது.

கடந்த மே மாதம் இங்கு விஜயம் செய்த பிரான்சிய அதிபர் உள்ளுர் அரசியலில் தலையிடாவிட்டாலும், கலோனியன் இல்லை என்றால் பிரான்சின் அழகு குறைந்துவிடும் என்று பூடகமாக தமது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

இங்கு உள்ளுர் மக்களுக்கும் குடியேறிகளுக்குமிடையே 1970 ல் மோதல் நடைபெற்று 70 பேர் கொல்லப்பட்டது இவர்களுடைய மனோநிலையை காட்டும் உதாரணமாகும்.

இந்தத் தீவில் வாழும் மக்களை கினாக்கனா என்று கூறுகிறார்கள். 270.000 பேர் வாழ்கிறார்கள். நாட்டின் மொத்த குடித்தொகையில் இவர்கள் எண்ணிக்கை 40 வீதமாகும்.

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா – இனி
முடியுமா..?
நாம் இருவரல்ல ஒருவரென்று தெரியுமா – இனி
தெரியுமா..?

அலைகள் 04.11.2018

Related posts