ஏன்டா யோகா செய்கிறீர்களா.. டுமீல்.. டுமீல்.. இருவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் யோகா செய்து கொண்டிருந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார் இவருடைய நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் படுகொலைத் துப்பாக்கியை வெடிக்க வைத்த கொலையாளியும் வேட்டுக்கள் தீர வேறு வழியின்றி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவர் ஒன்றல்ல இரண்டல்ல ஆறுபேரை துப்பாக்கியால் சுட்டு, சுளீரெனப் பாய்ந்த ஒருவரை துப்பாக்கியால் மண்டையில் அடித்தும் காயப்படுத்தியிருக்கிறார்.

இவருக்கு ஏனிந்தக் கோபம் வந்தது அதுவும் தேமே என்று தம்பாட்டுக்கு யோகா செய்வோர் மீதென்பது தெரியவில்லை..? ஆனால் பல கடும்போக்கு இஸ்லாமிய றெஜீம் உள்ள நாடுகளில் யோகா தடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய கூத்துக்களுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பிருக்குமா தெரியவில்லை.

தொடர்கிறது விசாரணைகள்..

இதற்கிடையில் 1500 தஞ்சம் கோருவோர் சல்வடோர் நாட்டில் இருந்து அமெரிக்கா நோக்கி சுனாமி அலைகள் போல வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் குறைந்த வருமானம், ஏழ்மை, வன்முறைக் குழுக்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி சொந்த நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்கள். இவர்கள் வேறு வழியின்றி சொந்த நாட்டை தூக்கியெறிந்து அமெரிக்காவில் ஒரு புது வாழ்வு தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வா சாவா.. அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்ற பயணம் என்றால் பாருங்களேன்.

காரணம் கைகளும் காலும் பார்த்தாலே உதறலெடுக்கும் ஆபத்தான சுசேற்ற என்ற ஆற்றை கடந்து, குவாற்றமாலா பாலத்தைத் தாண்டி ஆயிரத்திற்கு மேற்பட்ட கி.மீ தொலைவு கால் நடை பயணத்தில் மெக்சிக்கோ நாட்டை ஊடறுத்து அமெரிக்கா வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்தக்கால அன்னம்மா அக்கா காட்டு வழியாக கால்நடையாக கதிர்காமம் போனது போன்ற ஒரு பயணம்.

இவர்களிடம் கடவுச் சீட்டுக்களும் முறைப்படியான வீசாவும் இருப்பதால் தம்மால் தடுக்க முடியவில்லை என்று கையை விரித்துவிட்டது மெக்சிக்கோ.

இவர்களை திருப்பியனுப்ப அமெரிக்காவின் 20.000 மேற்பட்ட படையினரின் மனித சங்கிலி அணி காத்துக்கிடக்கிறது.

ஜெயிக்கப்போவது யார்..?

அர்சுணன் பாம்பின் வாயில் அகப்படாமல் அமெரிக்காவிற்குள் போவார்களா..?

மறுபுறும் இந்த சிக்கல்களை எல்லாம் வைத்து, அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. ஆனால் வாக்களிப்புக்கள் இப்போதே ஆரம்பி;த்துவிட்டன. சுமார் 30 மில்லியன் வாக்காளர் இதுவரை வாக்களித்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்க முன்னாள் உப அதிபர் ஜோ பைடன் கூறும்போது தான் டொனால்ட் ரம்பை ஆதரிக்கவில்லை என்றும் ஆனால் தேர்தல் நடப்பதை ஆதரிப்பதாகவும் கூறுகிறார். மக்கள் பெருந்தொகையாக வாக்களித்தால் அதிபரை எதிர்க்கும் டெமக்கிரட் வெல்ல வாய்ப்புள்ளது. ஆகவே வீடுகளில் இருந்து புறப்படுங்கள் வாக்களிக்க என்று உந்தித் தள்ளுகிறார்.

இந்தத் தேர்தலில் மட்டும் தோல்வியடைந்தால் அமெரிக்க அதிபர் பலத்த சங்கடங்களை சந்திக்க நேரிடும், இருப்பினும் வரிசையில் நிற்கும் மக்களை பார்க்கும்போது டெமக்கிரட் வென்று அதிபருக்கு ஆட்டாமாவில் செய்த அல்வாவை தீத்துவதற்கு வாய்ப்பிருப்பது தெரிகிறது.

அலைகள் 04.11.2018

Related posts