கல் ஸ் ரீனில் இருந்து கல்லைப் போட்டாளே காரிகை

டென்மார்க் போலீசாருக்கு பல மாதங்களாக சவாலாக இருந்து வருவது பாலங்களில் இருந்து வாகனங்கள் மீது கல்வீசும் பேர்வழிகள்தான். இவர்கள் செய்யும் வேலை பிரதான வீதிக்கு மேலால் போகும் பாலத்தில் நின்று கொண்டு பாரிய கல்லை வரும் வாகனங்களில் மீது போட்டு வேடிக்கை பார்ப்பதாகும். இவ்விதம் கல் ஒன்றை வீசினால் வாகனம் விரைவுச் சாலையில் போகும் வேகத்திற்கும் புவியீர்ப்பு சக்தியால் கல் வரும் வேகத்திற்கும் இடையே கூட்டல் வேகம் நிகழும், விளைவு பேரபத்தாகும். இதுபோல ஒரு தடவை வீசப்பட்ட கல்லால் சுமார் 36 வயதுடைய ஜேர்மனிய பெண்மணி ஒருவர் மரணமடைந்து கார் விபத்துக்குள்ளாகி கணவனும், பிள்ளையும் பாதிப்படைந்தது தெரிந்ததே. இருந்தாலும் போலீசாரால் சரியான குற்றவாளியை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கல் ஸ் ரீன் என்ற இடத்தில் பாலத்தின் மேல் நின்று கல்லை வாகனத்தின் மீது போட்ட…

கலோனியன் தீவு பிரான்சுடன் இணைந்திருக்க முடிவு

அவுஸ்திரேலியாவின் கிழக்கே சுமார் 1200 கி.மீ தொலைவில் பசுபிக் சமுத்திரத்தில் இருக்கிறது கலோனியன் என்கின்ற தீவு. இந்தத் தீவு பிரான்சின் காலனித்துவ தீவாகும். இங்குள்ள மக்கள் பிரான்சிடமிருந்து பிரிந்து செல்ல சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியுள்ளது. மொத்தம் 284 வாக்களிப்பு நிலையங்களில் 175.000 பேர் வாக்களித்தனர். இந்தத் தீவில் பிறந்தவர்கள் பிரிந்து செல்ல விரும்புகிறார்கள். போதும் போதும் பிரான்சின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தது இனி நாம் சுதந்திரமாக வாழப்போகிறோம் என்கிறார்கள். ஆனால் பிரான்சில் இருந்து குடியேறியோர் இதை எதிர்க்கிறார்கள். காரணம் சுதந்திரமாக போனால் பிரான்சின் உதவி இல்லாமல் போய்விடும் என்றும், தீவு சொந்தக்காலில் நிற்கும் பலமுள்ளது அல்ல என்றும் கூறுகிறார்கள். கருத்துக்கணிப்பின்படி பிரான்சிய ஆதரவு அணியே வெல்லும் என்கிறார்கள். சற்று முன் முடிவு வெளியாகியிருக்கிறது. மொத்தம் 95 வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 56.8 வீதமானவர்கள் பிரிந்த செல்வதில்லை என்ற…

டென்மார்க்கில் பயங்கரவாதத்தை தடுக்க உதவிய இஸ்ரேல்

டென்மார்க்கிலும், பாரீசிலும் நடைபெற இருந்த இரண்டு பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட தாம் உதவியதாக இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன் யாகு கூறியாக அந்த நாட்டு பத்திரிகையான கார்ற்ஸ் கூறுகிறது. டென்மார்க்கில் ஈரானிய கொலையாளி ஒருவரை தடுக்க முயன்று பாதைகளை மூடி தேடிய நிகழ்வு கடந்த செப்டெம்பர் 28ம் திகதி இடம் பெற்றது தெரிந்ததே. இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் ஈரானிய உளவுப்பிரிவின் கைவரிசை இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இன்று வெளியான ஈரானிய பத்திரிகைகளைப் புரட்டினால் ஈரானிய உளவாளிகள் ஐரோப்பாவிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படும் விவகாரத்தை ஐரோப்பாவுடன் இணைந்து கட்டுப்படுத்தத் தயார் என்று கூறியிருக்கிறது. இது ஊடகவியலாளரை கொலை செய்துவிட்டு விசாரணையில் சேர்ந்தியங்க தயார் என்று சவடால் விட்ட சவுதியின் குரல் போல இருக்கிறது. களவெடுத்தவனே வழக்கை விசாரிக்க வருவதாக குரல் கொடுக்கும் கொடிய காலமொன்று உலக அரங்கில் உருவாகி…

ஏன்டா யோகா செய்கிறீர்களா.. டுமீல்.. டுமீல்.. இருவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் யோகா செய்து கொண்டிருந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார் இவருடைய நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் படுகொலைத் துப்பாக்கியை வெடிக்க வைத்த கொலையாளியும் வேட்டுக்கள் தீர வேறு வழியின்றி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். இவர் ஒன்றல்ல இரண்டல்ல ஆறுபேரை துப்பாக்கியால் சுட்டு, சுளீரெனப் பாய்ந்த ஒருவரை துப்பாக்கியால் மண்டையில் அடித்தும் காயப்படுத்தியிருக்கிறார். இவருக்கு ஏனிந்தக் கோபம் வந்தது அதுவும் தேமே என்று தம்பாட்டுக்கு யோகா செய்வோர் மீதென்பது தெரியவில்லை..? ஆனால் பல கடும்போக்கு இஸ்லாமிய றெஜீம் உள்ள நாடுகளில் யோகா தடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய கூத்துக்களுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பிருக்குமா தெரியவில்லை. தொடர்கிறது விசாரணைகள்.. இதற்கிடையில் 1500 தஞ்சம் கோருவோர் சல்வடோர் நாட்டில் இருந்து அமெரிக்கா நோக்கி சுனாமி அலைகள் போல வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் குறைந்த…

கலைக்கும் இசைக்கும் பெருமை தந்த திருநாள்

கலைக்கும் இசைக்கும் பெருமை தந்த சாகித்திய சுருதிலயா 20 வது ஆண்டு விழா டென்மார்க் சங்கீத ஆசிரியை இசைக்கலைமணி சிறீமதி குமுதினி பிறித்விராஜ் அவர்களுடைய சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரியின் 20 வது ஆண்டு நேற்று மிகவும் அமர்க்களமாக நடந்தேறியிருக்கிறது. பெருந்தொகையான பிள்ளைகள் பங்கேற்று தமது இசை ஆற்றலை வெளிப்படுத்தினார்கள். ஒவ்வொரு பிரிவும் அதற்கான வண்ண வண்ண ஆடைகளை அணிந்து அரங்கத்தில் தோன்றியது பட்டாம் பூச்சிகள் பறப்பது போல கண்களுக்கு விருந்தாக இருந்தது. அழகான அரங்க அமைப்பும், பிள்ளைகளின் ஆற்றலும், ஆசிரியரின் வழிகாட்டலும் பெற்றோரின் ஒத்துழைப்பும் இணைந்து அரங்கு நிறைந்த இந்த நிகழ்வு மக்கள் மனங்களை கவர்ந்தது. பி.ப 14.30 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு நள்ளிரவு பன்னிரண்டு மணி தாண்டியும் கலை வேகம் குன்றாமல் நடந்தது ஆச்சரியம் தந்தது. நிiறாக சங்கீத ஆசிரியையின் கச்சேரியும் இடம்…

குவைத் நாட்டில் செல்வா பாண்டியர் பிறந்த நாள் ஆரம்பம்

தமிழர் தேசிய தந்தை என்ற கிடைத்தற்கரிய புகழை தனது குறுங்கால வாழ்வில் பெற்று விடை பெற்ற தோழர் செல்வா பாண்டியரின் பிறந்த நாள் உலகத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் முதல் நிகழ்வு குவைத் நாட்டில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. குவைத் நாடு என்பது நாம் இன்றைய மத்திய கிழக்கு பிரச்சனையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நாடு.. ஆனால் அங்கும் நம் உறவுகள் இருப்பதும் பாண்டியருக்காக கேக் வெட்டி கொண்டாடுவதும் பெரிய விடயமாகும். உலகமெல்லாம் தமிழ் மக்களை இணைக்க செல்வா பாண்டியர் எடுத்த முயற்சி நமக்கு நம்ப முடியாத நிகழ்வாக இருக்கிறது. அவர் இருக்கும்வரை அவருடைய பயணத்தின் ஆழம் நமக்கு தெரியவில்லை. அவர் இறந்த பிறகுதான் தெரிகிறது அவருடைய மூளை எவ்வளவு தூரம் ஆழமாகவும் அகலமாகவும் ஓடியிருக்கிறது என்பது. டென்மார்க்கில் எழுதப்பட்ட கிலரி கிளிண்டன் தோற்றாரா…

சீனாவில் தறிகெட்டு ஓடிய லாரி

சீனாவின் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள லான்சூ பகுதியில் சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளானது. இதனால் எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய ராஜபக்சே திட்டம்

இலங்கை சிறையில் உள்ள தமிழர்கள் அனைவரும் விடுதலை செய்ய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேயின் அரசியல் மற்றும் பொருளார கொள்கை, அதிபர் சிறிசேனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அவர் மீதான கொலை சதியையும் ரணில் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ரணில் விக்கிரமசிங்கேயை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26ம் தேதி நீக்கினார். புதிய பிரதமராக ராஜபக்சேயை நியமித்தார். பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் என ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் கூறின. இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுவதாக இருந்தது. ஆனால் ராஜபக்சே தனது பெரும்பான்மைக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாடாளுமன்றத்தை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பெரும்பான்மை எம்.பி.க்களை வைத்துள்ள ரணில் விக்ரமசிங்கே, நாடாளுமன்றத்தை உடனே கூட்டி…

இன்று இலங்கை தீவின் காட்சிகளும் கூத்துக்களும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தோற்றுவித்துள்ள அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும், அரசாங்கத்தின் ஒற்றுமையினை உறுதிப்படுத்தும் விதமாகவும் மக்கள் பேரணியொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறும் இப் பேரணியானது பாராளுமன்ற வளாகத்தில் நாளை நண்பகல் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் குறித்த மக்கள் பேரணியானது எவ்விதத்திலும், எவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தாது எனவும், ஆட்சி மாற்றத்தின் மகிழ்வினை மாத்திரம் வெளிப்படுத்த அனைவரும் ஒன்று கூடுகின்றனர் எனவும் பொதுஜன பெரமுனவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ---------------- ஐக்கிய தேசியக் கட்சியினரால் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என தெரிவித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், எதிர் தரப்பினரின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் பலம் தற்போது எம்மிடம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் சபாநாயகருக்கு தன் அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை ஒருபோதும் கூட்ட முடியாது எனவும்…

மஹிந்தவிடம் எழுத்து மூலமாக வாக்குறுதிகளைக் கேட்டோம்

மஹிந்த அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்க்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அந்த முடிவு எடுக்கப்பட்டதன் பின்னணி, ராஜபக்ஷேவை ஆதரிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். கே. மஹிந்த அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுசெய்திருக்கிறது. இந்த முடிவின் பின்னணி என்ன? ப. பிரதமரை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை. முதலில் இருந்தது; 19வது திருத்தச் சட்டத்திற்குப் பிறகு அந்த அதிகாரமில்லை. பிரதமராக இருந்தவரை ஜனாதிபதி இப்படி நீக்கியது தவறு. பிரதமர் முறையாக நீக்கப்பட்டால்தான், வெற்றிடம் ஏற்பட்டு புதிய பிரதமரை நியமிக்கலாம். வெற்றிடம் ஏற்படாமல் புதிய பிரதமரை நியமித்திருக்கிறார். பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருக்கிறார். இடைக்காலத்தில் பலவிதமான கெடுபிடிகள் நிலவுவதை நாங்கள் அறிகிறோம். பிரதமராக பதவியேற்பவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை…