சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரியின் 20 வது ஆண்டு விழா இன்று

டென்மார்க்கின் புகழ் பெற்ற சங்கீத வீணை இசை ஆசிரியை இசைக்கலைமணி திருமதி குமுதினி பிறித்திவிராஜனின் சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரி இன்று 03.11.2018 சனிக்கிழமையன்று தனது 20 வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடுகிறது.

கேர்னிங் நகரில் உள்ள மண்டபத்தில் பி.ப. 14.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. இன்றைய நாள் காதுக்கினிய சங்கீத பிரவாகமாக இருக்கும் ஒரு திருநாளாகும் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை.

சுமார் இரண்டு தசாப்தங்களாக சங்கீதப் பெரும் பணியை சுமந்து பல நூறு மாணவர்களை இசை வல்லுநர்களாகவும், வாத்தியக் கலைஞர்களாகவும் உருவாக்கி தலை நிமிர்வு கண்டுள்ளது இக்கல்லூரி.

சங்கீதத்தை நேசிக்கும் பெற்றோரதும், மாணவரதும், ஆசிரியரதும் வெற்றித் திருநாளாக இந்தப் பொன்னாள் அமைவு பெறுகிறது.

இது சாதாரண விடயமல்ல மிகப்பெரிய சாதனை. அனைவரும் நேரத்திற்கு சென்று கலையை ரசித்து பெருமைப்பட வேண்டும்.

இது நமக்கு மட்டுமல்ல டென்மார்க்கிற்கே பெருமை..!

புலம் பெயர் தமிழருக்கு பெருமை…!

நமது தாயகத்திற்கு பெருமை…!

ஒட்டுமொத்த தமிழினத்திற்குமே பெருமை..!

வாருங்கள் வாழ்த்தப் புறப்படுவோம்..!

பெருமைக்குரிய காரியங்களை செய்வோம்.. பெருமை பெறுவோம்..!

அலைகள் 03.11.2018 சனிக்கிழமை

Related posts