2.0 திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள 2.0 திரைப்படத்தின் டிரைலர் இணையத்தளம் மற்றும் திரையரங்குகளில் வெளியாகியது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. இதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டது. 2.0 படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அக்ஷய் குமார் இயக்குனர் சங்கர் மற்றும்…

தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலில் ஒரே இந்தியப் படம்

பிபிசி வெளியிட்ட 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்தியப் படம் இடம்பெற்றுள்ளது. அது சத்யஜித்ரேவின் 'பதேர் பாஞ்சாலி' ஆகும். பிபிசி 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலை வெளியிட்டது. இதற்காக 43 நாடுகளில் இருந்து 209 இயக்குநர்களின் படங்கள் முதல்கட்டமாகத் தேர்வாகின. அவற்றில் இருந்து தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 19 மொழிகள் மற்றும் 24 நாடுகளில் இருந்து 64 இயக்குநர்களின் 100 படங்கள் உள்ளன. இதில் முதலிடத்தை ஜப்பான் திரைப்படமான அகிரா குரோசவாவின் 'செவன் சாமுராய்' பிடித்தது. 27 படங்கள் பிரெஞ்சு மொழியில் இருந்தும் 12 படங்கள் மாண்டரின் மொழியில் இருந்தும் இத்தாலி மற்றும் ஜப்பானிய மொழிகளில் இருந்து தலா 11 படங்களும் இடம்பிடித்துள்ளன. அதே நேரத்தில் இந்தப் பட்டியலில் ஒரே…

‘2.0’ படத்தில் இருந்து விலக நினைத்தேன்: ரஜினி பேச்சு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். இப்படத்துக்கு லைகாவின் சுபாஷ்கரண் ரூ.600 கோடி முதலீடு செய்திருக்கிறார். என்னை நம்பியில்லை. ஷங்கரை நம்பி முதலீடு செய்திருக்கிறார். ஷங்கர் ரசிகர்களை மகிழ்விக்க தவறுவதில்லை. இந்தப் படம் ஆரம்பித்தபோது எனக்கு உடல் நிலை மோசமானது. ’என்னால் 5 வரி வசனம்கூட பேச முடியாமல் போனது. என்னை விட்டுவிடுங்கள் ஷங்கர். என்னால் முடியவில்லை. வாங்கிய பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றேன். ஷங்கர், ’சார் நீங்க இல்லாமல் இது முடியாது’ என்றார். ஷூட்டிங்கில் அவ்வளவு உதவியாக இருந்தார். ஷங்கரின் இந்தப் படம்…

ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டும்

தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பமொன்று உருவாகியுள்ளது. இதனை தமிழ் மக்கள் சரியாகப் புரிந்துகொண்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் ஒற்றுமையும் சமத்துவமும் ஏற்படக்கூடிய முக்கிய காலகட்டம் தற்போது உருவாகியுள்ளது. கடந்த 70 வருடங்களுக்கு முன்னர் செல்வநாயகம் முன்வைத்த உடன்படிக்கை முறிவடைந்ததன் காரணமாகவே ‘புலிகள்’ உருவாகினார்கள். இதனால் இடம்பெற்ற கசப்பான உணர்வுகளை நாம் மறக்க வேண்டும். தற்போது உருவாகியுள்ள சிறப்பான சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்காக தமிழ் மக்கள் அனைவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். ---------- நிலையான…

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண நான் தயார்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார். இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தி நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதே தமது இலக்காகுமென்றும் நாட்டைப் பொருளாதார சுபீட்சமுள்ளதாக அபிவிருத்தி செய்வதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் செயலகத்தில் தம்மைச் சந்தித்த தமிழ் வர்த்தக சமூகத்தினர், சமூக நலப்பணியாளர்கள், புத்திஜீவிகளுடனான சந்திப்பில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு பொருளாதாரத்தில் அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததால் அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றதாகக் கூறிய அவர், இந்த நாட்டு மக்கள் அனைவரும் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்ெகாண்டு சகலரும் அந்நியோன்னியத்தையும் சகோரத்துவத்தையும் வளர்த்து, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்ெகாண்டார். விசேடமாகத் தமிழ் மக்கள் பொய்ப்பரப்புரைகளை நம்பாமல் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டின்…

கூட்டமைப்பு ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்

பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு, "கடந்த, ஒக்டோபர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை, பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இம்மாதம் 2ம் திகதி பிற்பகல் 5 மணிக்கு கூடி ஆராய்ந்து பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது. 1. இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பதவியிலிருக்கும் பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. 19 ம் திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், 19ம் திருத்தத்தின் மூலம் திட்டவட்டமாக நீக்கப்பட்டது. ஆகையால் பிரதம மந்திரியை நீக்குவதாகவும், வேறொருவரை…

சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரியின் 20 வது ஆண்டு விழா இன்று

டென்மார்க்கின் புகழ் பெற்ற சங்கீத வீணை இசை ஆசிரியை இசைக்கலைமணி திருமதி குமுதினி பிறித்திவிராஜனின் சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரி இன்று 03.11.2018 சனிக்கிழமையன்று தனது 20 வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடுகிறது. கேர்னிங் நகரில் உள்ள மண்டபத்தில் பி.ப. 14.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. இன்றைய நாள் காதுக்கினிய சங்கீத பிரவாகமாக இருக்கும் ஒரு திருநாளாகும் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை. சுமார் இரண்டு தசாப்தங்களாக சங்கீதப் பெரும் பணியை சுமந்து பல நூறு மாணவர்களை இசை வல்லுநர்களாகவும், வாத்தியக் கலைஞர்களாகவும் உருவாக்கி தலை நிமிர்வு கண்டுள்ளது இக்கல்லூரி. சங்கீதத்தை நேசிக்கும் பெற்றோரதும், மாணவரதும், ஆசிரியரதும் வெற்றித் திருநாளாக இந்தப் பொன்னாள் அமைவு பெறுகிறது. இது சாதாரண விடயமல்ல மிகப்பெரிய சாதனை. அனைவரும் நேரத்திற்கு சென்று கலையை ரசித்து பெருமைப்பட வேண்டும். இது நமக்கு மட்டுமல்ல…