ரணிலின் கரங்கள் மெல்ல மெல்ல சரிகிறது.. சபாநாயகரும் பல்டியா..?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (01) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேறினால் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் இதன்போது கலந்துiuயாடப்பட்டுள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னரும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

——————-

பாராளுமன்றத்தை நவம்பர் மாதம் 7 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நவம்பர் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருந்த போதும் தன்னுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பாராளுமன்றத்தை எதிர்வரும் வாரம் கூட்டுவதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் பின்னர் பாராளுமன்றத்தை 7 ஆம் திகதி கூட்டுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

—————

திய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்குரிய சகல வசதிகளையும் பாராளுமன்றத்தில் பெற்றுக் கொடுப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்ட உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

பாராளுமன்றத்தினுள் புதிய பிரதமருக்குரிய வசதிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி , சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

அரசியலமைப்பிற்கமைய புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் `அது குறித்து கவனம் செலுத்தி அதற்கமைய ஏனைய அரச அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளும் செயற்படுவார்கள் என சபாநாயகர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் பதவிக்குரிய வசதிகளை பெற்றுக் கொடுக்கையில் பாராளுமன்ற அதிகாரிகள், வர்த்தமானி அறிவித்தலை பின்பற்றி தமது பணியை முன்னெடுக்க வேண்டும். அதற்கு தமது தரப்பில் எந்த இடையூறும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் சபாநாயகர் குறிப்பிட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது.

புதிய பிரதமருக்கு அவருக்குரிய ஆசனத்தை ஒதுக்கவும் சபாநாயகர் உடன்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பாராளுமன்றத்தை துரிதமாக கூட்டுவதன் அவசியம் தொடர்பாக சபாநாயகர் இங்கு தெளிவுபடுத்தியதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது. இதற்கு ஜனாதிபதி சாதகமான பதில் வழங்கியுள்ளார். இது தொடர்பில் தனது பதிலை விரைவில் அறிவிப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபாநாயகர் கரு ஜெயசூரியவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.ஆசன ஒதுக்கீடு தொடர்பில் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஊடகங்களுக்கு தவறான கருத்துக்களை வெளியிட்டு சபாநாயகருக்கு அகௌரவம் ஏற்படும் வகையில் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts