தமிழர் தேசிய எழுச்சி நாளும் செல்வா பாண்டியர் பிறந்த தினமும்

எதிர்வரும் நவம்பர் 7ம் திகதி புதன்கிழமையன்று தமிழர் தேசியத் தந்தை மேதகு செல்வா பாண்டியரின் பிறந்த தினம் தமிழகம் தென்காசி உட்பட உலகின் பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தில் தென்காசி, சென்னை முதற்கொண்டு பல இடங்களிலும் நடைபெறவுள்ளது. இந்தவகையில் சிறப்பாக இலங்கை யாழ்ப்பாணம், சிங்கப்பூர், மலேசியா, பர்மா, டென்மார்க் ஆகிய நாடுகளிலும் நடைபெற இருப்பது இரட்டிப்பு மகிழ்வாகும். இந்த நிகழ்வில் முக்கிய விடயங்களாக தோழர் செல்வா பாண்டியரின் பிரமாண்ட திருவுருவப்படம் திறந்து வைக்கப்படுகிறது. சிங்கப்பூர் தமிழர் நடுவ அமைப்பாளர் திரு. நாகேஸ் முத்து பாண்டியர் திறந்து வைக்கிறார். அடுத்தபடியாக பாண்டிய ஒளி என்ற தலைப்பில் சாதனை படைத்த நான்கு இளைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. வருடாவருடம் செல்வா பாண்டியர் பிறந்த தினத்தில் இந்த விருது வழங்கப்படும். இது சாதாரணமாக அனைவருக்கும் கேடயம் வழங்குவது போன்ற ஒரு…

இன்றும் நாளையும் இந்திய சினிமாவில் முக்கியமான நாள்

இன்றும் நாளையும் (நவம்பர் 2 & 3) இந்திய சினிமாவில் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தியா சினிமாவும் வளர்ந்து வருகிறது. ‘பாகுபலி 2’, ‘தங்கல்’ போன்ற படங்கள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளன. இந்திய சினிமாக்களுக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வெளிநாடுகளில் நடைபெறுவதைப் போல, பல வெளிநாட்டுப் படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் இந்தியாவில் நடைபெறுகின்றன. இந்நிலையில், இன்றும் நாளையும் (நவம்பர் 2 & 3) இந்திய சினிமாவில் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. காரணம், தொழில்நுட்பத்தின் உச்சத்துடன் ஏராளமான கிராபிக்ஸ் பணிகளுடன் தயாராகிவரும் இரண்டு படங்களின் ட்ரெய்லர்கள் இன்றும் நாளையும் ரிலீஸாக இருக்கின்றன. ஒன்று, ஷாருக் கானின் பாலிவுட் படமான ‘ஜீரோ’. இன்னொன்று, ரஜினியின் தமிழ்ப் படமான ‘2.0’. ஷாருக் கான் ஹீரோவாக நடித்துள்ள ‘ஜீரோ’ படத்தை, ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார்.…

ஜமால் ஆபத்தான இஸ்லாமியவாதி சவுதி இளவரசர்

ஜமால் ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என்று சவுதி இளவரசர் சல்மான் அமெரிக்காவிடம் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்டதை சவுதி ஒப்புக் கொள்வதற்கு முந்தைய இடைப்பட்ட காலத்தில் வெள்ளை மாளிகைக்கு தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மருமகனான குலஷ்னரிடம் சவுதி இளவரசர் பேசியுள்ளார். அந்த உரையாடலில் ஜமால் ஆபத்தான இஸ்லாமியவாதி என்றும், அவர் முஸ்லிம் பிரதர்வுட் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் சவுதி இளவரசர் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஜமால் கொலை விவகாரத்தில் அமெரிக்கா - சவுதி இடையே உள்ள விரிசலை சரி செய்ய இந்த உரையாடலில் இளவரசர் முயன்றுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி திட்டவட்டமாக மறுத்துள்ளது. முன்னதாக, துருக்கியைச் சேர்ந்த ஹட்டிஸ் சென்ஜிஸ்ஸை, சவுதி பத்திரிகையாளர் ஜமால் திருமணம் செய்யவிருந்த…

பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க முடியாது

சர்கார் சர்ச்சை’யில் ராஜினாமா செய்த பாக்யராஜின் முடிவை ஏற்க மறுத்து அவரே தலைவராகத் தொடர்வார் என திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டார் என்று இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் தெரிவித்தார். தனது செங்கோல் கதையின் மூலக்கருவை எடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் பயன்படுத்தியுள்ளதாக வருண் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரகத்தில் படக்குழுவினர் மறுத்த நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. சங்கத்தின் தலைவர் என்கிற முறையில் கே.பாக்யராஜ் இதை விசாரித்தார். ‘சர்கார்’ பிரச்சினை உயர் நீதிமன்றத்தில் வழக்காக மாறியது. இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக பாக்யராஜின் வாக்குமூலம் இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸின் ’சர்கார்’ கதையும்,…

நியமிக்கப்பட்ட பிரதமர் சட்டபூர்வமற்றவர் – ஹக்கீம்

சட்டத்தை மீறிச் செய்யப்பட்ட பிரதமர் நியமனத்தை சட்டபூர்வமானதாக மாற்றுவதற்கு பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்டாமல் காலம் தாமதிப்பதன் மூலம் இன்றும் சட்டபூர்வமற்ற ஒரு பிரதமராகத் தான் நியமிக்கப்பட்ட பிரதமர் இருந்து கொண்டிருக்கின்றார் என்பது தான் யதார்த்தம் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று காலை அனைத்தக் கட்சித் தலைவர்களும் இணைந்து சபாநாயகரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒருமித்த கூரலில் பாராளுமன்றத்தை காலந்தாழ்த்தாது உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். குறித்த கலந்துரையாடல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து வருமாறு, இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அராஜக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நாட்டில் சட்டத்தின் ஆட்சியை, நீதி நியாயத்தின் அடிப்படையிலேயே நிலைநிறுத்துவதற்கு சபாநாயகர் எங்களுடைய உரிமைகளை பாதுகாக்கின்ற…

ரணிலின் கரங்கள் மெல்ல மெல்ல சரிகிறது.. சபாநாயகரும் பல்டியா..?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (01) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேறினால் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் இதன்போது கலந்துiuயாடப்பட்டுள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னரும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ------------------- பாராளுமன்றத்தை நவம்பர் மாதம் 7 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். நவம்பர் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.11.2018 வெள்ளி

01. பொது நலன் கருதி காரியங்கள் செய்யும் ஒருவர் புகழையோ பரிசையோ எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால் அவை இரண்டும், இறுதியில் அவரை வந்து சேர்ந்துவிடும். 02. நாம் பிறருக்கு வேண்டியதை செய்தால்தான் நமக்கு வேண்டியது கிடைக்கும். உங்களுக்கு உதவி வேண்டுமா தவறாது மற்றவர்களுக்கு உதவுங்கள். 03. யாருக்கும் அநீதி இழைக்காதீர்கள் நல்லது திரும்பி வருவதைப் போலவே கெட்டதும் திரும்பி வரும். 04. யாராவது உங்களுக்கு தீங்கு செய்தாலும் அமைதியுடன் இருங்கள். தீமைக்குப் பிறகு நன்மை வந்து சேரும். 05. சந்தேகத்திற்கு இடமின்றி ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் நீங்களே தண்டனை அனுபவித்துக் கொள்கிறீர்கள். மாறாக நீங்கள் செய்யும் ஆக்கபூர்வமான செயலுக்காக பரிசும் கிடைக்கிறது. 06. சில வேளை மற்றவருக்கு உதவி செய்தும் பலன் இல்லையே என்று கருத வேண்டாம். நீங்கள் செய்யும் உதவிகள்…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 18. 44

எல்லாப்புத்திக்கும் மேலான சமாதானம். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகோபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். உலகம்பூராக வாழும் தமிழ்மக்கள் மிகுந்த அவதானத்தோடு, எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஓர் மாதந்தான் நவம்பர் மாதம். எமது நாட்டில் நல்ல தீர்மானங்கள் எடுத்து அமைதி ஏற்பட செயற்படுவார்களா என பலஆயிரம் இதயங்கள் ஏக்கத்தோடு காத்திருப்பதை நாம் அனைவரும் உணரக்கூடியதாக உள்ளது. ஆகவே நாம் அனைவரும் எமது மக்களின் ஆறுதலை மனதிற்கொண்டு இந்த ஒரு நிமிடம் தேவனை நோக்கிப்பார்ப்போம். அன்பின் ஆண்டவரே, நீர் மக்களோடு இருக்கும் தெய்வம் என்று வேதம் கூறுவதினால், நாம் அனைவரும் முழுமனதோடு எமது தேசத்து மக்களுக்காக உம்மிடத்தில் வருகிறோம். எம்தேசத்து மக்கள்படும் அவலத்தில்; இருந்து ஓர் நிதந்தரமான அமைதியைக் கண்டுகொள்ள இரங்கும்படியாக வேண்டுகிறேன். உமது இரக்கத்தின் மூலம் நாடும், மக்களும் அமைதியை, சுபீட்சத்தை, வேதனைகளில் இருந்து இளைப்பாறுதலை அடைந்துகொள்ள உதவிசெய்யும்.…

ஐபிள் கோபுரத்தையே முந்தப் போகும் அதிசயமான தனிமனிதன்

தமிழன் கண்ட தங்கமான சிந்தனையொன்று தரணியை வென்றது. பிரான்சின் தலைநகர் பாரீசில் எழுந்து நிற்கும் இரும்புக் கேடர்களால் உருவாக்கப்பட்ட ஐபிள் கோபுரம் இன்றுவரை ஓர் உலக அதிசயமாக போற்றப்படுகிறது. இது 300 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த ஐபிள் கோபுரத்தை பார்த்தபடி ஐரோப்பாவை வலம் வந்த இளைஞன்தான் டென்மார்க்கில் வாழும் ஆனர்ஸ் கொல்க் போவுல்சன் என்ற இளைஞனாகும். இன்று அவர் ஐபிள் கோபுரத்தைவிட 20 மீட்டர்கள் அதிக உயரம் கொண்ட மாபெரும் அடுக்குமாடி கட்டிடமொன்றை டென்மார்க்கில் உள்ள பிறண்டா என்ற இடத்தில் அமைக்க இருக்கிறார். ஓர் உயரமான கோட்டுக்கு பக்கத்தில் அதைவிட சிறிது உயரமான இன்னொரு கோட்டை வரைந்தால் முதல் இருந்த பெரிய கோடு சிறியதாகிவிடுமல்லவா..? இப்படி ஓர் இரு கோடுகள் தத்துவத்தால் சின்னஞ்சிறிய தனது நாட்டுக்கு பென்னம் பெரிய புகழை தேடித்தரவுள்ளார் இந்த டேனிஸ் தொழல்…