புதிய பிரதமரை ரணில் ஏற்றுக்கொண்டுள்ளார்

ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டிருந்தால் ரணில் விக்ரமசிங்க உயர் நீதிமன்றத்துக்கு சென்றிருப்பார்.

ஆனால் இதுவரை அவர் நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்லாமல் இருப்பதன் மூலம் ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்ததை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஏனெனில் உயர் நீதிமன்றத்துக்கு மாத்திரமே அரசியலமைப்புக்கு வியாக்கியானம் தெரிவிக்கமுடியும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ்வே பிரதமராக இருப்பார்.

அவரை பதவி துறக்கச்செய்யவேண்டுமானால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவந்து தோற்கடிக்கவேண்டும்.

அவ்வாறு தோற்கடிக்கப்பட்டாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமராகலாம் என தெரிவிக்கமுடியாது.

Related posts