மன்னார் எலும்புக்கூடுகள் புளோரிடா போகின்றன

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 98 வது நாளாகவும் இன்று (31) தொடர்சியாக இடம் பெற்று வருகின்றது.

தொடர்ச்சியாக மழை பெய்கின்ற போதும் மனித எழும்புக்கூடுகளை அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையிலும் அகழ்வு பணியானது இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் மனித புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சட்டவைத்திய அதிகாரி, இந்த வாரம் முழுவதும் இடம்பெற்ற அகழ்வு பணி தொடர்பான தகவல்களை தெரிவித்தார்.

குறிப்பாக இன்றைய தினத்துடன் 98 வது தடவையாக மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் இடம் பெறுவதாகவும் இதுவரை 216 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 209 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெறுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த மனித எலும்புக்கூடுகள் காபன் பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு கூடத்துக்கு அனுப்புவதற்கான அனுமதியை மன்னார் நீதவான் வழங்கியுள்ளதாகவும் விரைவில் அதி முக்கியமான எச்சங்கள் மற்றும் தடய பொருட்களை குறித்த ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts