சின்மயியை யாரோ தூண்டி விட்டு இப்படி பேச வைக்கிறார்கள்

சின்மயியை யாரோ தூண்டி விட்டு இப்படி பேச வைக்கிறார்கள் என்று நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள மாரிமுத்து இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் வைரமுத்து–சின்மயி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். அது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மாரிமுத்து அளித்த பேட்டியில், ‘‘ஜவுளி கடையில் திருடினார் என்று கூறினால்தான் புகார். பெண்ணை அழைப்பது எப்படி தவறாகும். வைரமுத்து ஒரு ஆண். அவர் ஒரு ஆணை அழைத்தால் தவறு. பெண்ணை அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் படுக்கைக்கு வருவார்கள். விருப்பம் இல்லாதவர்கள் வெளியே சொல்வார்கள். இந்த பாலியல் விவகாரத்தில் வைரமுத்து புகழுக்கு சிறிதளவு கூட இழுக்கு வர வாய்ப்பு இல்லை. அவர் தமிழுக்கு செய்துள்ள தொண்டு ஏராளம்’’ என்று கூறியுள்ளார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சித்தார்த், ‘‘பரியேறும் பெருமாள் படத்தில் கெட்டவனாக நன்றாக நடித்தார் என்று நினைத்தேன். இப்படி பேசி இருக்கிறாரே’’ என்று கண்டித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மேலும் எதிர்ப்புகள் குவிகிறது. மாரிமுத்து பேச்சை ஆதரித்தும் கருத்துக்கள் பதிவாகின்றன.

Related posts