இலங்கை தனது துறைமுகத்தின் இறைமையை இழந்துவிட்டது

இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவுடான உடன்படிக்கை காரணமாகவே இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தே ஜேம்ஸ் மட்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் சமாதானத்திற்கான நிலையத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா கடனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது என்ற கரிசனை நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.சில நாடுகளால் கடனை திருப்பிசெலுத்த முடியாது என தெரிந்தே சீனா இவ்வாறு நடந்துகொள்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அவர்கள் தங்கள் துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts