இலங்கை அரசியல் இன்று திங்கள் அதிகாலை வரையான நிகழ்வுகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தமது கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு தற்போது சமய நிகழ்வுகளுடன் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், புதிய அமைச்சரவையும் இன்று (29) நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

—————

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் 1,008 பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது 10 அதிகாரிகள் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் கட்டளையின் அடிப்படையிலேயே இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

————-

பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அரசாங்க ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

————-

பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அரசாங்க ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

————-

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதையடுத்து கிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியினர் நேற்று பொங்கல் பரிமாறியதோடு பட்டாசுக் கொளுத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

—————

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாயின் கைதிகள் விடுவிப்பு, காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டுமென்பதை தமிழரசுக் கட்சியிடம் வலியுறுத்துவதாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை இரு தரப்பினரும் கோரி வருகின்றனர்.

————–

Related posts