வைரமுத்து மீது சுமத்தப்படும் பழிகள், சட்டரீதியாகட்டும்

வைரமுத்து மீது சுமத்தப்படும் பழிகள், சட்டரீதியாக பதிவாகட்டும், உண்மை வெல்லட்டும் என்று கபிலன் வைரமுத்து கூறியுள்ளார்.

வைரமுத்து மீதான #MeToo குற்றச்சாட்டு குறித்து கபிலன் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தந்தை வைரமுத்து மீது சுமத்தப்படும் பழிகள், சட்டரீதியாக பதிவாகட்டும், உண்மை வெல்லட்டும். மீ டூ பிரச்சனையை பொழுதுபோக்காக சித்தரித்து, நாட்டில் நிலவும் வேறு பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் அளித்திட வேண்டாம்.

வைரமுத்துவின் எழுத்தைவிட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது, பாடம் நிறைந்தது.வைரமுத்துவின் பெருமைகளை அழுக்குப்படுத்தநினைக்கிறவர்கள் அனுதாபத்துக்குரியவர்கள் என தெரிவித்துள்ளார்.

Related posts