இந்தியா விடுத்த அழைப்பினை ஏற்க டிரம்ப் மறுத்துள்ளார்.

குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா விடுத்த அழைப்பினை ஏற்க டிரம்ப் மறுத்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற உள்ள சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு அழைப்பு விடப்பட்டது.

இதுபற்றி கடந்த ஆகஸ்டில் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா சாண்டர்ஸ், இந்தியாவிற்கு வரும்படி டிரம்பிற்கு அழைப்பு விடப்பட்டது என்ற தகவலை உறுதிப்படுத்தினார். ஆனால் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது என்பது தெரிய வரவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா விடுத்த அழைப்பினை ஏற்க மறுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் கேட்டபொழுது, அதிபரின் சுற்று பயண திட்டங்கள் பற்றி வெள்ளை மாளிகையினரே கூற முடியும் என தெரிவித்து உள்ளனர்.

Related posts