முதுமை அடைவதை சுட்டிக்காட்டும் 9 அறிகுறிகள்

மனிதர் உள்பட பாலூட்டிகள் முதுமை அடைவதை வெளிக்காட்டும் 9 அம்சங்கள்:

1. டிஎன்ஏ சேதங்கள் அதிகரிப்பு
செல்களுக்கு இடையில் கடத்தப்படும் மரபணு குறியீடுதான் நமது டிஎன்ஏ. இந்த செயல்முறையில் நிகழுகின்ற தவறுகளால் முதுமை அடைதல் அதிகரிக்கிறது.

2. குரோமசோம்கள் மோசமடைதல்
இவ்வாறு டெலோமிர் மோசமாகுவது நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் தீவிர நோய்த்தடுப்பு இல்லாத நிலையான அஃப்ளாஸ்டிக் ரத்த சோகை ஆகிய நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

3. செல் செயல்பாட்டில் பாதிப்பு
டிஎன்ஏ வெளிப்பாடு என்கிற செயல்முறையை நமது உடல்கள் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட செல்லில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான மரபணுக்கள் அந்த செல் என்ன செய்ய வேண்டுமென முடிவு செய்கின்றன. எடுத்துக்காட்டாக, அது தோல் செல்லாக செயல்படுவதா அல்லது மூளையின் செல்லாக செயல்படுவதாக என முடிவு செய்கின்றன.

இந்த கட்டளைகள் வழங்கப்படும் முறையை காலமும், வாழ்க்கை முறையும் மாற்றி அமைக்கலாம். இவ்வாறு செல்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதற்கு மாறாக செயல்படலாம்.

4. செல்கள் புதுப்பிக்கப்படும் திறனை இழத்தல்
நமது செல்களில் சேதமடைந்த பகுதிகள் குவிவதை தடுப்பதற்கு, அவற்றை புதுப்பித்து கொள்ளும் திறனை நமது உடல் பெற்றிருக்கிறது. ஆனால், முதுமை அடைகிறபோது இந்த திறன்கள் குறைகின்றன.

5. செல் வளர்சிதை மாற்றம் கட்டுப்பாட்டை இழத்தல்
காலம் செல்ல செல்ல கொழுப்பு மற்றும் சர்க்கரை பொருட்களை செயல்முறை படுத்தும் திறனை செல்கள் இழக்கின்றன. இதனால், நீரிழிவு உருவாகலாம். உதாரணமாக, செல்களில் வந்து சேர்கின்ற ஊட்டச்சத்துக்களை வளர்சிதை மாற்றம் செய்ய முடியாமல் போகலாம்.

6. வேலை செய்வதை நிறுத்தும் செல் இழைமணி
செல்களுக்கு சக்தியை வழங்குவது இந்த செல் இழைமணிதான். ஆனால், ஆண்டுகள் கடந்து செல்கிறபோது அவை செய்திறன் இழந்துவிடுகின்றன. இவை தவறாக செயல்படுவது டிஎன்ஏக்கு பாதிப்பாக அமையும்.

7. பாதிக்கப்பட்டாலும் வேலை செய்வதாக மாறும் செல்கள்
தீங்கான செல்களை உற்பத்தி செய்வதை தவிர்ப்பதற்காக, ஒரு செல் அதிகமாக சேதமடைந்து விட்டது என்றால் செல் பிரிவதை நிறுத்திவிடுகிறது. இந்த செல் பிரிவதை நிறுத்திவிடுகிறது. இறந்து போவதில்லை. வயதானதாக அறியப்படும் இந்த செல் அதற்கு அருகிலுள்ள பிற செல்களை பாதிப்படைய செய்து, உடல் முழுவதும் வீக்கத்தை பரப்ப செய்யலாம்.

8.சக்தியின்றி போகும் ஸ்டெம் செல்கள்
மீளுருவாக்கி கொள்ளும சக்தியில் குறைவு ஏற்படுவது முதுமை அடைவதன் மிகவும் தெளிவான குணநலன்களாகும். ஸ்டெம் செல்கள் படிப்படியாக சக்தி குறைந்து, மீளுருவாக்கி கொள்ளும் செயல்திறனை இழந்து விடுகின்றன. ஸ்டெம் செல்கள் மீளுருவாக்கும் சக்தி பெறுவதன் மூலம் உடல் முதுமையை வெளிப்படுத்துவதை மாற்றிக்கொள்ளலாம்.

9. செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றத்தை நிறுத்துதல்
செல்கள் ஒன்றோடு ஒன்று தொடர் தகவல் தொடர்பில் இருந்து வருகின்றன. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த திறனும் குறைந்து போகிறது. இதனால் வீக்கம் உருவாக்கி, தொடர்ந்து தகவல்களை பரிமாறி கொள்வதில் இன்னும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Related posts