முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கிடையே இருந்த ஈகோ

இம் மாகாண சபையில் முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கிடையே இருந்த கோபம், விட்டுக்கொடுப்பின்மை, ஈகோ போன்றவற்றால் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை இம் மாகாண சபை செய்ய தவறிவிட்டது. கடந்து வந்த ஜந்தாண்டு காலத்திலே முழுமையாக தோல்வியில்லை. ஆனால் முனைப்போடு செய்திருக்க வேண்டியவற்றை,செய்யப்படவில்லை.

மக்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும், அவப்போது எழும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இம் மாகாண சபையை ஜனநாயக ரீதியான சட்டரீதியான தளமாக கொண்டு அப் பிரச்சனைகள் தொடர்பாக பேசியுள்ளோம். இச் சபையில் வினைத்திறன் அற்ற அமைச்சுக்கள் இருந்துள்ளது. மக்களின் பொருளாதார ரீதியாக , வாழ்வாதார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.

பதில் 02 : உருவாகும் புதிய சபையின் உறுப்பினர்கள் அமைச்சர்கள் கல்வி திறனோடு நடமுறை நிர்வகம் தெரிந்தவர்களாகவும், அரசியல் தெரிந்தவர்களாகவும், இருக்க வேண்டும். அத்தகையவர்களை கொண்ட சபையே உருவாக வேண்டும். இது இல்லாமையே இதுவரை இருந்த பிரச்சனைகளுக்கு காரணமும் ஆகும். வருகின்றவர்கள் மக்களை தெரிந்தவர்களாகவும், மக்களது பிரச்சனைகளை தெரிந்தவர்களாகவும், அரசியல் தெரிந்தவர்களாகவும், குறிப்பாக நிர்வாகம் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அமைச்சர்கள் தமது அமைச்சினை கொண்டு நடாத்தகூடியவர்களாக அதற்கான தகுதியையும், நம்பிக்கையையும் கொண்டவர்களாக, அரசியலையும் கொள்கையையும் சரியாக கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

இத்தகைய ஆற்றல் இல்லாதவர்களை கொண்ட சபையாக எதிர்வரும் சபை அமைந்தால் இப்போதிருந்த சபையைவிட மோசமான சபையே உருவாகும்.

Related posts