தலையைக் கொண்டு வா ஆணையிட்ட சவுதி இளவரசர்

பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட வேண்டும் என்ற ஆணையை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஸ்கைப் மூலம் உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சவுதி இளவரசர் அவரது சவுதி அரசுத் துறையில் பல பதவிகள் வகிக்கும் ஊடகத் துறை ஆலோசகரான அல் கவுடானி மூலம் இந்த உத்தரவை வழங்கி இருக்கிறார் என்று துருக்கி அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், துருக்கி அனுப்பிய 15 பேருக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ஊடகத்துறை ஆலோசகரான அல் கவுடானிதான் ஜமாலைக் கொல்ல உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஜமாலைத் தாக்கிய பிறகு ”அவரின் தலையைக் கொண்டு வா” எனக் கூறும் அல் கவுடானியின் குரல் ஆடியோவில் பதிவாகியுள்ளதாகவும் இந்த உத்தரவை இளவரசர் சல்மான் ஸ்கைப் மூலம் தெரிவித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜமால் கொலை தொடர்பாக கடந்த சனிக்கிழமை…

பாலும் தேனும் ஓட வைத்திருப்போம் டக்ளஸ் தேவானந்தா

மாகாண சபை முறமையூடாகவே தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்கலாம் என்பதை ஆரம்ப காலம் முதலே சொல்லி வந்திருந்தோம். எமது கட்சி வடக்கு மாகாண சபையை கைப்பற்றியிருந்தால் இதனை வளமான மாகாணமாக்கி பாலும் தேனும் ஓட வைத்திருப்போம். இது காலம் கடந்துவிட்டது, இதில் ஒன்றும் இல்லை என்றவர்கள் பின்னர் இச் சபையை நாம் கைப்பற்றி விடப் போகின்றோம் என்பதற்காக மக்களை உசுப்பேற்றி வெற்றி பெற்றார்கள். பின்னர் இதற்கு அதிகாரம் இல்லை என்றார்கள். பின்னர் தாங்களே அதிகார துஸ்பிரயோகம் நடந்த்து என்றார்கள். அரசாங்கம் நிதி தரவில்லை என்றார்கள். பின்னர் நிதி மோசடி நடந்த்து என்றார்கள். ஜந்து வருடத்தை வீண்டித்து விட்டோம் என்கிறார்கள். செய்ய கூடியவற்றை செய்யவில்லை என்கிறார்கள். எல்லாவற்றையும் இவர்களே கூறுகின்றார்கள். இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறையுமில்லை, அதனை செய்வதற்கு ஆற்றலுமில்லை. இம் மாகாண சபை முறமையில் நம்பிக்கையுள்ள,…

முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கிடையே இருந்த ஈகோ

இம் மாகாண சபையில் முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கிடையே இருந்த கோபம், விட்டுக்கொடுப்பின்மை, ஈகோ போன்றவற்றால் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை இம் மாகாண சபை செய்ய தவறிவிட்டது. கடந்து வந்த ஜந்தாண்டு காலத்திலே முழுமையாக தோல்வியில்லை. ஆனால் முனைப்போடு செய்திருக்க வேண்டியவற்றை,செய்யப்படவில்லை. மக்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும், அவப்போது எழும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இம் மாகாண சபையை ஜனநாயக ரீதியான சட்டரீதியான தளமாக கொண்டு அப் பிரச்சனைகள் தொடர்பாக பேசியுள்ளோம். இச் சபையில் வினைத்திறன் அற்ற அமைச்சுக்கள் இருந்துள்ளது. மக்களின் பொருளாதார ரீதியாக , வாழ்வாதார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை. பதில் 02 : உருவாகும் புதிய சபையின் உறுப்பினர்கள் அமைச்சர்கள் கல்வி திறனோடு நடமுறை நிர்வகம் தெரிந்தவர்களாகவும், அரசியல் தெரிந்தவர்களாகவும், இருக்க வேண்டும். அத்தகையவர்களை கொண்ட சபையே உருவாக வேண்டும். இது இல்லாமையே இதுவரை இருந்த பிரச்சனைகளுக்கு…

மாகாண சபை எதனையுமே செய்யவில்லை

மாகாண சபையின் கடந்த ஜந்து வருடங்களையும் கூறுவதாயின் மிக நீண்ட நேரம் தேவை. ஒரு சில நிமிடங்கள் போதாது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது இம் மாகாண சபை கடந்த ஜந்து வருடங்களாக எதனையுமே செய்யவில்லை. அரசாங்கத்திடம் இருந்து நிதிகளை பெற்று அபிவிருத்திகளை செய்வது ஒன்று, புலம்பெயர் வளங்களை ஒன்றினைந்து அதனூடாக அபிவிருத்தி செய்வது, நியதிச் சட்டங்களை உருவாக்கி மாகாண சபையை பலப்படுத்துவது இவை உட்பட எதனையுமே இம் மாகாண சபை செய்யவில்லை. மாகாண சபைக்கு அதிகாரம் போதாது என்று சொல்பவர்கள் இதற்கு வரக்கூடாது. அதற்காக மாகாண சபைக்கு அதிகாரங்கள் கூரையை பிய்த்துக்கொண்டு இருக்கிறது என்றில்லை. ஆனால் இருக்கின்ற அதிகாரங்களை செழுமையாகவும் திறம்படவும் செயற்படுத்தகூடிய ஆளுமை கொண்ட விடயங்களை தெரிந்த இளையவர்கள் புதிய சபைக்கு வர வேண்டும்.

மாகாண சபை பெரிதாக எதனையும் செய்யவில்லை.

இம் மாகாண சபை உருவாகிய போது சிறிய ஈழம் கிடைத்தது போலவே மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்று அவை ஏமாற்றமாகவே அமைந்துவிட்டது. பெரிதாக எதனையும் இச் சபை செய்யவில்லை. மாகாண சபை உறுப்பினர்களே முதலமைச்சரை செயற்படவிடாமல் செய்துள்ளார்கள். அதேநேரம் முதலமைச்சரும் செய்யகூடியவற்றை செய்யாமல் விட்டுள்ளார். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான நேரத்தில் தலையிட்டு ஒழுங்கான சபையை நடாத்த வழி ஏற்படுத்தியிருக்க வேண்டும். கூட்டமைப்பு இதில் தவறு விட்டிருக்கிறது. அதே நேரம் முதலமைச்சரை செயற்படாமல் விடாமலும் சில சக்திகள் செயற்பட்டிருந்தார்கள். பதில் 02 : மிகவும் குழப்பகரமான சபையே உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே இவற்றை தவிர்த்து மக்களது தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வகையில் சரியான சபையை உருவாக்க ஒன்றினைய வேண்டும். இம் மாகாண சபைக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே உள்ளது. அதில் பணியாற்றுவது கடினமே.…

முதலமைச்சரது தவறான செயற்பாடுகளால் பல குழப்பங்கள்

எம்.ஏ.சுமந்திரன் : பாராளுமன்ற உறுப்பினர், கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர். இலங்கை தமிழரசு கட்சி. பதில் 01 : வடக்கு மாகாண சபையை என்ன நோக்கத்திற்காக நாம் பொறுப்பேற்றமோ அது நிறைவேற்றப்படவில்லை. அதிகார பகிர்வை கோரியது நாம். ஆனால் ஏனைய மாகாண சபைகள் செய்தவற்றை விட குறைவாகவே வடக்கு மாகாண சபை செயற்பட்டிருக்கின்றது. மாகாண சபையூடாக அழிவிலிருந்த மக்களை மீள கட்டியெழுப்பலாம் என்பதற்காகவே அதனை பொறுப்பேற்றோம். ஆனால் அது நடைபெறவே இல்லை. சர்வதேச ரீதியிலும், அரசியல் ரீதியிலும், தேசிய ரீதியிலும் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதிகாரங்களை உபயோகிக்க கூடிய நியதிச்சட்டங்களை உருவாக்கவில்லை. கொடுத்த கடமை சரியாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு நாமும் பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம். முதலமைச்சரது தவறான செயற்பாடுகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. பதில் 02 : இது வரை விட்ட தவறுகளை திருத்திகொள்ள…

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று

முதலாவது வடக்கு மாகாண சபையின் காலம் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையில் சபையின் இறுதி அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கின்றது. யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள மாகாண சபை செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ. வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு இவ் அமர்வு நடைபெறவுள்ளது. கடந்த 25.10.2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் சபையின் ஐந்தாண்டு காலத்தின் இறுதி அமர்வு இன்று நடைபெற இருக்கின்றது. இச் சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தற்போது ஐந்தாண்டு வரையான காலத்திற்குள் 134 அமர்வுகள் நடாத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சபையின் இறுதி அமர்வான இன்றைய தினமே சபையில் முதலாவது விடயமாக சபைக்கான கீதம் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட இருக்கின்றது. இதற்கு அடுத்ததாக பொதுவாக முதலமைச்சர் உட்பட உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்கப்படும். அதற்கமைய…

செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா இயற்கை எய்தினார்.

டென்மார்க் Herning ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசாக சர்மா சாரங்க சர்மா அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். மலர்வு : 28 சனவரி 2000 — உதிர்வு : 20 ஒக்ரோபர் 2018 அன்னார், இணுவில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த சிவஶ்ரீ சீ. இரத்தினசபாபதிக் குருக்கள் தம்பதிகள், இணுவிலைச் சேர்ந்த சிவஶ்ரீ வை. சோமாஸ்கந்தக் குருக்கள் தம்பதிகளின் அன்புப் பேரனும், விசாக சர்மா அபிராமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுபாங்கன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: வியாழக்கிழமை 25/10/2018, 11:00 மு.ப — 01:30 பி.ப முகவரி: Industrivej Syd 1B, 7400 Herning, Denmark. தொடர்புகளுக்கு தந்தை — டென்மார்க் செல்லிடப்பேசி: +4528764575 சுபாங்க…

நடிகை கஸ்தூரியும் பாலியல் தொல்லையில்

நடிகை கஸ்தூரியும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக கூறியுள்ளார். மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் ‘‘உங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறியிருந்தீர்களே அவர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை. தயக்கமா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள கஸ்தூரி, ‘‘தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்னிடம் செருப்படி வாங்கிக்கொண்டு இன்றுவரை பொது இடத்தில் என்னை பார்க்கும்போதெல்லாம் எதுவுமே நடக்காத மாதிரி மழுப்புகிற சிலர். இறந்து விட்ட ஒருவர். இழுத்துக்கொண்டு ஒருவர். இவர்களை பற்றி இப்போது பேசுவதற்கு எனக்கே பாவமாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

‘மீ டூ’வில் சிம்புவை இழுப்பதா?

நடிகை லேகா வாஷிங்டனும் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறியுள்ளார். பாடகி சின்மயி தொடங்கி வைத்த ‘மீ டூ’ சர்ச்சை தமிழ் திரையுலகை கடுமையாக தாக்கி வருகிறது. பிரபலங்கள் பலர் இதில் சிக்கி உள்ளனர். இப்போது நடிகை லேகா வாஷிங்டனும் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறியுள்ளார். இவர் தமிழில் ஜெயம் கொண்டான், கல்யாண சமையல் சாதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். காதலர் தினம், அரிமா நம்பி படங்களில் கவுரவ தோற்றங்களில் வந்தார். இந்தி–தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில், தமிழ் திரையுலகில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயரை வெளியிடும் நேரம் வந்து விட்டது என்று அவர் கூறியிருந்தார். இதனால் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் தனது டுவிட்டரில் ‘‘ஒரே ஒரு வார்த்தை கெட்டவன். மீ டூ’’ என்று பதிவிட்டு உள்ளார். சிம்பு நடித்த ‘கெட்டவன்’ படத்தில் லேகா…