பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டம்

கிராமிய ரீதியான பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதன் மூலம் பூகோள அடிப்படையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளோம் எனத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் கிராமிய மட்ட அபிவிருத்தியினை வலுப்படுத்துவதற்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். கிராமிய மட்டத்திலான அபிவிருத்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது தற்போதைய தேசிய அரசாங்கமே ஆகும். நல்லாட்சி அரசாங்கம் முன்னேற்றகரமாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறுபவர்கள் இவ்விடயங்கள் தொடர்பில் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

கிராம அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் 2500 பேருக்கு வழங்கல், நிர்வாக கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts