சாதனை படைத்த ‘சர்கார்’ டீஸர்

விஜய்யின் ‘சர்கார்’ டீஸர் அதிகமானோரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம், வருகிற தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸாக இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 19) மாலை 6 மணிக்கு ‘சர்கார்’ படத்தின் டீஸரை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த டீஸருக்காக விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பெரும்பாலானோர் காத்திருந்தனர். எனவே, டீஸர் வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமான முறை டீஸர் பார்க்கப்பட்டது.

அத்துடன், 20 நிமிடங்களில் 20 லட்சம் பார்வை, 35 நிமிடங்களில் 30 லட்சம் பார்வை என நேரம் போகப்போக அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

Related posts